யாழ் மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த கூட்டத்தில் பொலிஸார், பிரதேச செயலர்கள் ஒரு சில மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் ஒரு சில அதிகாரிகள் மாத்திரமே கலந்து கொண்டுள்ளனர்.
இக் கூட்டத்தில் குடாநாட்டில் இடம்பெற்று வரும் குற்றச்செயல்கள், சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பிலான முன்னேற்றங்கள், பொதுமக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக குறித்த கூட்டத்தில் கலந்துரையாடப்படுவது வழமையாகவுள்ளது.
இந்த நிலையில், குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ள பெருமளவானோர் ஆர்வம் காட்டவில்லை என்பதுடன் மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.