வீட்ல ஈ தொல்லை தாங்க முடியலையா?… இதை தெளிங்க… ஓடியே போயிடும்… – Tamil VBC

வீட்ல ஈ தொல்லை தாங்க முடியலையா?… இதை தெளிங்க… ஓடியே போயிடும்…

பழங்கள் என்பது நமது உணவுப் பழக்கத்தில் சேர்த்து கொள்ள வேண்டிய அத்தியாவசியமான உணவாகும். வறுத்த உணவுகள், திட உணர்வுகளுக்கு பதிலாக குழந்தைகளுக்கு ஆரோக்கியமான பழ உணவுகளை கொடுக்கலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஏனெனில் இதில் நமது உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. நாம் தினந்தோறும் பழங்களை வாங்கி பயன்படுத்துவது நல்லது.

பழங்களும் ஈக்களும் பயன்படுத்தும் பழங்களை நாம் சரியாக பேக் செய்யாவிட்டால் அதில் ஈக்கள் மொய்த்து நமக்கு நோய்களை பரப்ப வாய்ப்புள்ளது. வீட்டில் இருக்கும் சமயங்களில் வெட்டிய பழங்களை ஒரு டப்பாக்களில் போட்டோ அல்லது பிரிட்ஜில் வைத்தோ எளிதாக பயன்படுத்தி கொள்வோம். சில நேரங்களில் கடைகளில் வாங்கப்படும் பழங்கள், பயணங்களில் அல்லது வெளியிடங்களில் இந்த மாதிரியான ஈக்கள் மொய்த்தால் என்ன செய்வது, ஏன் வீட்டினுள் பிரிட்ஜில் பழங்களை வைக்காத சமயங்களில் கூட இந்த மாதிரியான பிரச்சினைகளை நாம் சந்திக்க நேரிடும். சரி வாங்க அதற்கான சில எளிமையான வழிமுறைகளை பற்றி இங்கே காணலாம்.

ஆப்பிள் சீடர் வினிகர் ஒரு கிளாஸில் வடிகட்டாத ஆப்பிள் சிடார் வினிகரை கொஞ்சம் எடுத்து கொள்ளுங்கள். அந்த டம்ளரின் மேல் பகுதியை ஒரு பிளாஸ்டிக் கவர் கொண்டு மூடிக் கொள்ளுங்கள். ரப்பர் பேண்ட் கொண்டு நல்ல இறுக்கமாக கட்டியோ அல்லது செல்லோ டேப் கொண்டு ஒட்டிக் கொள்ளுங்கள். அந்த பிளாஸ்டிக் கவரின் மேல் ஒரு ஓட்டை போட்டு கொள்ளுங்கள். ஈக்களை பிடிப்பதற்கான பொறி இப்பொழுது ரெடியாகி விட்டது. ஆப்பிள் சிடார் வினிகரின் மணம் ஈக்களை ஈர்க்க ஆரம்பித்து விடும். இந்த ஈர்ப்பினால் ஈக்கள் தானாகவே அதனுள் போய் மாட்டிக் கொள்ளும். அதே நேரத்தில் அதில் போடப்பட்ட ஓட்டை சிறியது என்பதால் அதனால் வெளியே வரவும் முடியாது.

பேப்பர் கோன் முறை தேவையான பொருட்கள் ஒரு பேப்பர் கொஞ்சம் வினிகர் கொஞ்சம் பழத் துண்டு (இயற்கையாக பழுத்து இருக்க வேண்டும்) பயன்படுத்தும் முறை ஒரு சின்ன ஜாரில் வினிகரை ஊற்றி கொள்ளுங்கள். இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு போதும். இப்பொழுது பேப்பரை ஒரு கோன் வடிவில் சுருட்டி அதனுள் பழத்துண்டை வைக்க வேண்டும். அதில் சிறிய துளை இருக்கிறமாதிரி வடிவமைத்து கொள்ளுங்கள். இந்த அமைப்பு ஈக்களை ஈர்த்து அதிலிருந்து வெளியே வர முடியாத அளவுக்கு பண்ணி விடும்

பால், சர்க்கரை மற்றும் மிளகுத்தூள் நாம் இப்பொழுது ஈக்களை பிடிக்க சில டிசர்ட் முறையை பின்பற்ற போறோம். இந்த டிசர்ட் ஈக்களை ஈர்த்து பிடிக்க உதவும். பயன்படுத்தும் முறை கொஞ்சம் பாலை எடுத்து அதில் 4 அவுன்ஸ் சர்க்கரையை(சுகர் ப்ரீ, சுகர் துண்டுகள் வேண்டாம்) சேர்த்து கொள்ளுங்கள். இதை ஒரு கடாயில் ஊற்றி நன்றாக காய்ச்சி கொள்ளுங்கள். முதலில் நுரைகள் வந்ததும் அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து 8-10 நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்து லேசாக கெட்டியாக வரும் வரை கிண்டவும். இது முடிந்ததும் இந்த கலவையை ஒரு பிளாஸ்டிக், ஸ்டீல் அல்லது செராமிக் பெளலில் ஊற்றி கொள்ளுங்கள். இதனால் ஈக்கள் ஈர்க்கப்பட்டு அதிலிருந்து எழுந்திருக்க முடியாதபடி மூழ்கிக் கொள்ளும்.

வினிகர் மற்றும் டிஸ் சோப்பு ஈக்களை பிடிப்பதற்கான மேஜிக் முறை தான் இது. தேவையான பொருட்கள் 3-4 டேபிள் ஸ்பூன் வினிகர் ஒரு சுத்தமான பெளல் 3 துளிகள் டிஷ் சோப்பு பயன்படுத்தும் முறை 3-4 டேபிள் வினிகரை ஒரு பெளலில் எடுத்து கொள்ளுங்கள். பிறகு அதனுடன் டிஷ் சோப்பு துளிகளை சேர்க்க வேண்டும். சோப்புத் துகள்களை நன்றாக கலக்க வில்லை என்றால் இந்த முறை பலனளிக்காது. எனவே இதை நன்றாக கலக்கி பயன்படுத்துங்கள். ஈக்கள் முதலில் வினிகரின் மணத்தால் ஈர்க்கப்படும், ஆனால் அதில் சேர்க்கப்பட்டுள்ள சோப்பால் ஈக்கள் பறக்க முடியாமல் அப்படியே மூழ்கி விடும்.

ப்ளீச் வெளிப்புறங்களில் நம்மை தொந்தரவு செய்யும் ஈக்களுக்கு இந்த முறை சரியானதாக இருக்கும். இதை செய்வதற்கு முன் அந்த பகுதியில் உள்ள குப்பைகளை நீக்கி சுத்தமாக வைத்து கொள்ளுங்கள். உங்கள் பகுதியில் திறந்த சாக்கடைகள் இருந்தால் கொஞ்சம் தண்ணீரில் கொஞ்சம் ப்ளீச் பவுடரை கலந்து எல்லா இடங்களிலும் தெளித்து விடுங்கள். உடனே எல்லா ஈக்களும் அங்கிருந்து பறந்து சென்று விடும். இப்படி எளிதான முறையில் ஈக்களை விரட்டிடலாம்.

குறிப்பு : மழைக் காலங்களில் இந்த முறை பலனளிக்காது. எனவே மழைக் காலங்களில் இதை உபயோகிப்பதை தவிர்க்கவும். மேலும் ப்ளீச்சில் அம்மோனியா கலக்காதிருப்பதை உறுதிபடுத்தி கொள்ளவும். ஏனெனில் இவை ஒரு நச்சுக் கலந்த மணத்தை வெளிவிடும். இது நமக்கும் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் உடல் நல பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

ரெட் வொயின் ஈக்கள் அதிகமாக ரெட் வொயினால் ஈர்க்கப்படும். எனவே இதைக் கொண்டே நாம் ஈக்களை பிடித்து விடலாம். பயன்படுத்தும் முறை ஒரு சிறிய பாட்டிலில் கொஞ்சம் ரெட் வொயினை எடுத்து கொள்ளுங்கள். இதன் மணம் அப்படியே ஈக்களை தானாகவே ஈர்த்து விடும். அதிலேயே ஈக்கள் மூழ்கி விடும்.

இனி நீங்கள் எந்த வித சிரமமும் இல்லாமலே ஈக்களை எளிதாக விரட்ட இயலும். செயற்கை மருந்துகளை தெளிப்பதை விட இந்த மாதிரியான இயற்கை முறைகள் சிறந்தது.

ads

Recommended For You

About the Author: admin

Leave a Reply

Your email address will not be published.