கனவில் அடிக்கடி கோவில் வருகிறதா? உங்களுக்கு பெரிய அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது…! – Tamil VBC

கனவில் அடிக்கடி கோவில் வருகிறதா? உங்களுக்கு பெரிய அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது…!

கனவுகள் என்பது நமது ஆழ்நிலை மனது நமக்கு அனுப்பும் கடிதமாகும். கனவுகள் என்பது நமக்கு பிடித்தது மட்டுமல்ல அவசியமானதும் கூட. ஏனெனில் நமது ஆழ்மனது ஆசைகள் பலவற்றை நமது கனவுகள் பிரதிபலிக்கும். ஆனால் சிலசமயம் நமது கனவுகள் நம்மிடம் என்ன சொல்ல வருகிறது என்பதை புரிந்து கொள்வது மிகவும் கடினமாகும். ஆனால் நம் கனவுகளை புரிந்துகொவதற்கு நம் புராணங்களில் பல குறிப்புகள் உள்ளது.

நமது கனவுகளில் பெரும்பாலானவை நமது வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டவையாகத்தான் இருக்கும். ஆனால் சிலசமயம் நமது கனவுகளில் ஆன்மீகம் தொடர்பானதாகவோ அல்லது கோவில் தொடர்பானதாகவோ கனவுகள் வந்தால் அது சற்று கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். குறிப்பாக சிவபெருமானோ அல்லது அவர் தொடர்பான எதாவது ஒரு பொருளையோ கனவில் பார்த்தால் உங்கள் வாழ்வில் பெரிய மாற்றங்கள் விரைவில் ஏற்படும். இந்த பதிவில் சிவபெருமான் உங்கள் கனவில் வந்தால் உங்கள் வாழ்வில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என்று பார்க்கலாம்.

சிவலிங்கம்:
உங்கள் கனவில் சிவலிங்கம் வந்தால் அது உங்களுக்கு உணர்த்துவது என்னவெனில் நீங்கள் தினமும் தியானம் செய்யவேண்டும் என்பதாகும். இது உங்கள் கடந்த கால வாழ்க்கையில் உங்களுக்கு இருந்த ஆசை மற்றும் வேண்டுதலின் வெளிப்பாடு ஆகும். சிவலிங்கம் கனவில் வருவது வெற்றியை குறிக்கும், உங்களுக்கு இருந்த தடைகள் விலகி செல்வம் வந்து சேரப்போவதன் அறிகுறியாகும். இது உங்கள் வாழ்க்கையின் ஜீவசக்தியை மட்டும் குறிப்பதில்லை, உங்கள் வாழ்க்கைத்துணையின் முக்கியத்துவத்தையும் குறிக்கும்.

சிவன் – பார்வதி கனவில் வருவது:
உங்கள் கனவில் சிவன் மற்றும் பார்வதியை ஒன்றாக பார்த்தால் புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரப்போகிறது என்று அர்த்தம். விரைவில் உங்களை தேடி மகிழ்ச்சியான செய்தியும், பிடித்த பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பும், செல்வமும் தேடிவர போகிறது என்று அர்த்தம். சிவன் மற்றும் பார்வதியை ஒன்றாக பார்ப்பது சிறந்த அறிகுறியாகும்.

சிவனின் நடனத்தை கனவில் பார்ப்பது:
சிவனின் தாண்டவம் என்பது மூர்க்கம் மாறும் பேரார்வத்தின் அடையாளம் ஆகும் . ஆனால் உங்கள் கனவில் சிவனின் நடனத்தை பார்ப்பது உங்கள் பிரச்சினைகள் விரைவில் முடியபோவதன் அறிகுறியாகும். மேலும் விரைவில் நீங்கள் பெரிய செல்வத்தை அடையப்போகிறீர்கள் என்பதன் அறிகுறியாகும் ஆனால் அதற்கு முன் சில சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

சிவபெருமானின் கோவிலை கனவில் பார்ப்பது:
உங்கள் கனவில் சிவபெருமானின் கோவில் வந்தால் உங்களுக்கு இரண்டு மகன்கள் பிறக்க வாய்ப்புள்ளது என்று பொருள். பொதுவாகவே கனவில் கோவிலை பார்ப்பது உங்களின் ஆரோக்கிய பிரச்சினைகளை தீர்க்கும் என்றுபுராணங்கள் கூறுகிறது. ஒருவர் நாள்பட்ட தலைவலியாலும், வயிற்றுவலியாலும் பாதிக்கப்பட்டிருந்தால் சிவனின் கோவிலை கனவில் பார்ப்பது அதற்கான தீர்வாக இருக்கும்.

சிவபெருமானின் திரிசூலத்தை கனவில் பார்ப்பது:
சிவபெருமானின் திரிசூலம் குறிப்பது என்னவென்றால் சிவன் விழித்திருக்கும் நேரம், தூங்கும் நேரம், கனவு காணும் நேரம் என மூன்று நிலையையும் குறிப்பதாக இருக்கும். திரிசூலத்தை கனவில் பார்ப்பது உங்கள் கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்காலத்துடன் உள்ள தொடர்பை குறிக்கும். உங்களின் அனைத்து பிரச்சினைகளும் தீரப்போவதை இது உணர்த்தும். இதுவும் ஒரு நல்ல அறிகுறிதான்.

சிவபெருமானின் சந்திரன்
சிவபெருமானின் கொண்டையில் இருக்கும் சந்திரன் ஞானத்தை குறிப்பதாகும். ஒருவேளை நீங்கள் கனவில் சிவனின் சந்திரனை பார்த்தால் நீங்கள் வாழ்க்கையில் சில முக்கிய முடிவுகளை எடுக்கவேண்டும் என்று அர்த்தம். இது உங்களின் கனவு தொடர்பான சில முடிவுகளுடன் தொடர்புடையதாக இருக்கும்.

சிவபெருமானின் நெற்றிக்கண்:
சிவபெருமானின் மூன்றாவது கண் எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வை குறிக்கிறது. இதனை கனவில் பார்ப்பது உங்கள் வாழ்க்கையில் எடுக்கவேண்டிய சில முக்கியமான முடிவுகளை பற்றி குறிப்பதாகும். இது உங்கள் கனவில் வரும்போது அது உங்கள் வாழ்க்கையில் நேர்மறை சக்திகள் அதிகரிக்க போகிறது என்பதை உணர்த்துவதாகும்.

சிவபெருமான் தலையிலிருந்து கங்கை கொட்டுவதை பார்ப்பது:
கங்கை என்றால் அறிவாற்றல் ஆகும். அறிவாற்றல் உங்கள் ஆன்மாவை சுத்தப்படுத்தக்கூடியதாகும். அதேபோல தலையும் எப்போதும் அறிவை குறிப்பதுதான். இதயம் அன்பை குறிப்பதாகும். சிவபெருமானின் தலையிலிருந்து கங்கை வழிவதை கனவில் பார்த்தால் உங்களுக்கு அன்பும், அறிவும், செல்வமும் கிடைக்கப்போகிறது என்று அர்த்தம்.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *