நவாராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? மகிசாசுரன் பராசக்தியால் எதற்காக கொல்லப்பட்டான்? – Tamil VBC

நவாராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? மகிசாசுரன் பராசக்தியால் எதற்காக கொல்லப்பட்டான்?

நவராத்திரி விழா என்பது இந்தியாவில் மக்கள் கோலகலாமாக கொண்டாடும் விழா ஆகும். மக்களை துன்புறுத்தி வந்த மகிசாசுரனை அன்னை ஆதிபராசக்தி வதம் செய்து வெற்றி கொண்ட விழாவாக இது இருக்கிறது.

9 நாள் அம்மனின் திருவுருங்கள் வைத்து வழிபடப்படும். நவராத்திரி விழா என்பது இந்தியாவில் மக்கள் கோலகலாமாக கொண்டாடும் விழா ஆகும். மக்களை துன்புறுத்தி வந்த மகிசாசுரனை அன்னை ஆதிபராசக்தி வதம் செய்து வெற்றி கொண்ட விழாவாக இது கொண்டாடப்படுகிறது.

நவராத்திரி
நவராத்திரி விழா என்பது இந்தியாவில் மக்கள் கோலகலாமாக கொண்டாடும் விழா ஆகும். மக்களை துன்புறுத்தி வந்த மகிசாசுரனை அன்னை ஆதிபராசக்தி வதம் செய்து வெற்றி கொண்ட விழாவாக இது கொண்டாடப்படுகிறது.

நவராத்திரி ஆரம்பம்
இந்த ஆண்டு நவராத்திரி விழா அக்டோபர் 10 ல் ஆரம்பித்து அக்டோபர் 18 வரை நடைபெறுகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் துர்க்கை அம்மனின் 9 திருவுருவங்களைக் கொண்டு வழிபட்டு வருவர். அஷ்வின் மாதத்தில் வரும் நவராத்திரியை மகா நவராத்திரி என்று அழைக்கின்றனர்.

முக்கிய விழா
இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் இது முக்கிய விழா ஆகும். இந்த ஒன்பது நாட்களிலும் விரதம் கடைபிடித்து மற்றும் ஒன்பது விதமான அம்மன் திருவுருவ ஊர்வலம் என்று முக்கிய விழாவாக அணுசரிக்கப்படுகிறது. விழா முடியும் ஒன்பதாவது நாளில் காஞ்சகா பூஜை மேற்கொள்ளப்படும்.

நவராத்திரி புராணம்
நவராத்திரி விழா ஏற்பட்ட காரணங்கள் பற்றி மார்க்கண்டேய புராணம் கூறுகிறது. இந்த புராணத்தில் உள்ள காண்டம் தான் துர்கா சப்தஷதி. இதில் சக்தி தேவி எப்படி அவதாரம் எடுத்து பிறக்கிறாள் என்பது பற்றியும் மகா துர்கா என்று அழைக்கப்படும் அவள் எப்படி பல அரக்கர்களை வென்று எடுக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் மக்களை, முனிவர்களை, தேவர்களை ஆட்டிப் படைத்த கொடூர அரக்கன் மகிசாசுரனை எப்படி போரிட்டு வென்று வதைக்கிறாள் என்ற சிறப்பை எடுத்துக் கூறுகிறது. அன்னை சக்தி தேவியின் சிறப்பையும் வீரத்தையும் பாராட்டும் விதமாக இந்த நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.

நவராத்திரி முகூர்த்தம்
இந்த அஸ்வின் மாதத்தில் சரதீய நவராத்திரி அனுசரிக்கப்படுகிறது. கிரிகோரியன் காலண்டர் படி இந்த மாதம் அக்டோபர் 10-18 வரை இது அணுசரிக்கப்படுகிறது.

முதல் நாள் பிரதமை திதி மேற்கொள்ளப்படும்.

இந்த பிரதமை திதி அக்டோபர் 9 ஆம் தேதி காலையில் 9.16 மணிக்கு தொடங்கி அக்டோபர் 10 ஆம் தேதி காலையில் 7.25 க்கு முடிவடைகிறது.

நவராத்திரி முகூர்த்த நேரம் :6.22 – 7.25 மணி வரை (அக்டோபர் 10 ஆம் தேதி 1 மணி நேரம் 2 நிமிடங்கள்)

திதி மற்றும் தேவியின் ஒன்பது திருவுருங்கள்
தேதி : திதி : திருவுருவம் : பிரசாதங்கள்

அக்டோபர் 10 : பிரதமை :சாமுண்டி தேவி : சர்க்கரை பொங்கல்

அக்டோபர் 11 : துதியை :வராஹி அம்மன் :தயிர் சாதம்

அக்டோபர் 12 :திருதியை :இந்திராணி தேவி :வெண்பொங்கல்

அக்டோபர் 13 :சதுர்த்தி :வைஷ்ணவி தேவி :எலும்பிச்சை சாதம்

அக்டோபர் 14 :பஞ்சமி :மகீஸ்வரி தேவி :புளியோதரை

அக்டோபர் 15 :சட்டி :கெளமாரி தேவி :தேங்காய் சாதம்

அக்டோபர் 16 :சப்தமி :மகா லட்சுமி :கற்கண்டு சாதம்

அக்டோபர் 17:அஷ்டமி :சிம்மவாகினி துர்கா :சர்க்கரை பொங்கல்

அக்டோபர் :18 :நவமி :பிரம்மி (சரஸ்வதி) தேவி :கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு பாயாசம்

போன்றவற்றை படைத்து தேவியின் அருளை பெறலாம்.

நான்கு விதமான நவராத்திரிகள்
நான்கு விதமான நவராத்திரிகள்
நான்கு விதமான நவராத்திரி கொண்டாடப்படுகிறது. சாரதா நவராத்திரி அல்லது மகா நவராத்திரி (புரட்டாசி மாதம்), வசந்த நவராத்திரி (பங்குனி மாதம்), ஆஷாட நவராத்திரி (ஆனி மாதம்), சியாமளா நவராத்திரி (தை மாதம்) என்று ஒவ்வொரு மாதமும் கொண்டாடப்படுகிறது.

ஆஷாட மற்றும் மகா நவராத்திரியை குப்த நவராத்திரி என்றும் அழைக்கின்றனர். இந்த நவராத்திரியை பொதுவாக தாந்திரீகவாதிகள் தங்கள் சக்தியை அதிகரிக்க மேற்கொள்கின்றனர்.

MOST READ: இந்த ஆறில் உங்க உள்ளங்கை எந்த கலர்னு சொல்லுங்க… உங்க விதி எப்படினு தெரிஞ்சிக்கோங்க…

நவராத்திரியின் 10 ஆம் நாள்
நவராத்திரியின் 10 ஆம் நாள்
ஒன்பது நாள் கொண்டாடப்படும் நவராத்திரி இறுதி நாளான பத்தாம் நாளில் விஜயதசமி அதாவது துஷ்ட சக்தியை அம்மன் ஒழித்து வெற்றி கொண்ட விஷயமாகவும் அதே சமயத்தில் ராமன் ராவணனை போர் கொண்டு தோற்கடித்த விதமாக தசரா என்ற பெயரில் கோலகலாமாக கொண்டாடப்படுகிறது. மகா நவராத்திரி இந்த மாதம் அக்டோபர் 18 ஆம் தேதி முடிவடைந்து அக்டோபர் 19 ஆம் தேதி தசரா பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ads

Recommended For You

About the Author: admin

Leave a Reply

Your email address will not be published.