கொள்ளை அழகுள்ள இளம்பெண்: பொறாமையால் முகத்தை சிதைத்து கொலை செய்த மாணவிகள்! – Tamil VBC

கொள்ளை அழகுள்ள இளம்பெண்: பொறாமையால் முகத்தை சிதைத்து கொலை செய்த மாணவிகள்!

ரஷ்யாவில் அதிக அழகுடன் இருந்த மாணவியால், பொறாமையடைந்த சக மாணவிகள் அவருடைய முகத்தை சிதைத்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

விகா என அழைக்கப்படும் விக்டோரியா அவெரினா (17) என்பவரின் சிதைந்த உடல் ரஷ்ய நகரமான ஆர்க்காங்கெல்ஸ்கில் கைவிடப்பட்ட கட்டிட இடத்தில் கண்டெடுக்கப்பட்டது. உடைந்த கண்ணாடித் துண்டுகளால் அவரது முகம் சிதைக்கப்பட்டிருந்தது. கழுத்தை நெரித்து கொலை செய்வதற்கு முன் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டிருந்தார்.

ஆரம்பத்தில், இந்த கொடூரமான கொலைக்கு பின்னால் ஒரு ஆண் இருப்பதாக பொலிஸார் நம்பினர். ஆனால் இப்போது 16 வயதுடைய இரண்டு முன்னாள் பள்ளி வகுப்பு தோழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லினா மற்றும் இரினா எனப்படும் இரண்டும் மாணவிகளும், தங்களுடைய நெருங்கிய தோழியாக இருந்த விகாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளனர்.

இதுகுறித்து மாநில புலனாய்வாளர் கூறுகையில், ‘இளம் சிறுமிகளின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்ட பெண் தனது நண்பர்களை விட அழகாக இருப்பதாக நினைத்துள்ளனர். அதன்காரணமாகவே சித்ரவதை செய்து கொலை செய்ததாக விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளனர்’என தெரிவித்துள்ளார்.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *