சினிமாவில் நடிக்கும் ஆசையால் குழந்தையை கடத்தி 60 லட்சம் கேட்டு சிக்கிய அம்பிகா…. – Tamil VBC

சினிமாவில் நடிக்கும் ஆசையால் குழந்தையை கடத்தி 60 லட்சம் கேட்டு சிக்கிய அம்பிகா….

சென்னை: “சப்பாத்தின்னா குழந்தைக்கு ரொம்ப பிடிக்கும். அதனால ஹோட்டல்ல சப்பாத்தி சாப்பிடலாமான்னு கேட்டேன். குழந்தையும் பலமா தலையாட்டியது. இப்படித்தான் குழந்தையை கடத்தினோம்” என்று வேலைக்கார பெண் அம்பிகா வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை அமைந்தகரை, செனாய் நகர், செல்லம்மாள் தெருவில் வசிப்பவர் அருள்ராஜ். இவரது மனைவி நந்தினி. இவர் தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு மூன்றரை வயசில் பெண் குழந்தை உள்ளது. சென்னை முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறாள் குழந்தை.

குழந்தை : இந்த குழந்தையை கவனிப்பதற்காக வேலைக்கு அமர்த்தப்பட்ட பெண்தான் அம்பிகா. வயசு 29. குழந்தையை டெய்லி ஸ்கூலுக்கு கூட்டிட்டு போய்ட்டு, திரும்பவும் மதியம் அழைத்து வருவதுதான் இவரது வேலை. நேற்றுமுன்தினம் வழக்கம்போல் பள்ளியிலிருந்து குழந்தையை அழைத்து வரச்சென்ற அம்பிகாவை காணோம். குழந்தையுடன் டாடா சுமோ காரில் கடத்தப்பட்டார்.

60 லட்சம்: குழந்தை உயிரோடு வேணும்னா 60 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று மிரட்டினர். விஷயம் போலீசுக்கு போனது… இது தொடர்பாக 3 தனிப்படை அமைக்கப்பட்டது. வெறும் 6 மணி நேரம்தான்.. அம்பிகா அகப்பட்டு கொண்டார். கோவளத்தில் குழந்தையுடன் பதுங்கி இருந்த அம்பிகாவை அவர் காதலன் கலிமுல்லாவுடன் சேர்த்து கைது செய்தனர் போலீசார்.
சப்பாத்தி: பின்னர் போலீசாரிடம் அம்பிகா அளித்த வாக்குமூலத்தில், “சப்பாத்தின்னா குழந்தைக்கு ரொம்ப பிடிக்கும். அதனால ஹோட்டல்ல சப்பாத்தி சாப்பிடலாமான்னு கேட்டேன். குழந்தையும் பலமா தலையாட்டியது. அப்படியே காரில் கடத்திவிட்டோம். குழந்தையுடன் எங்களை கோவளத்தில் ஒரு ரிசார்ட்டில் தங்க வைத்துவிட்டு, திரும்பவும் செங்குன்றம் சென்றார்.

சொந்த படம்: ஒரு கடத்தலை எப்படி செய்யலாம் என்று என் காதலன் கலிமுல்லா யுடியூட் பார்த்துதான் கற்று கொண்டார்.
அவர் ஓ காதலனே’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். அந்த படம் சரியா ஓடலை. அதனால் சொந்த படம் எடுக்கலாம்னு முடிவு பண்ணோம். எனக்கும் சினிமாவில் நடிக்க ரொம்ப ஆசை. அதனால்தான் பணத்துக்காக இப்படி செய்தோம்” என்றார்.

சண்டை: இதில் ஹைலைட் என்னவென்றால், ரெண்டு பேருமே கைது செய்யப்பட்டு போலீஸ் கஸ்டடியில் இருந்தனர். அப்போது, உன்னால்தான் இப்படி ஆயிடுச்சு, இல்லை உன்னால்தான் இப்படி ஆயிடுச்சு என்று ரெண்டு பேரும் போலீசார் முன்னாடியே மாறி மாறி சண்டை போட்டுக் கொண்டனராம்.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *