உங்க முன் நெற்றி சொட்டை விழுந்து காணப்படுதா? இதோ அசத்தலான டிப்ஸ்….. – Tamil VBC

உங்க முன் நெற்றி சொட்டை விழுந்து காணப்படுதா? இதோ அசத்தலான டிப்ஸ்…..

முடி உதிர்வு என்பது பெரும்பாலானோருக்கு காணப்படும் ஒரு பொதுவான பிரச்சினை ஆகும். அதில் வயதாக வயதாக முன் நெற்றியில் முடி உதிர்ந்து வழுக்கை தலையை ஏற்படுத்தி விடுகின்றது.
இதற்காக கண்ட கண்ட செயற்கை எண்ணெகளை தான் வாங்கி பூச வேண்டும் என்ற அவசியம் இல்லை. முன் நெற்றியில் முடி வளர நாம் வீட்டில் இருக்கும் சில பொருட்கள் மட்டும் போதும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.வெங்காயம்:
வெங்காயத்தை அரைத்து அவற்றில் சாறு எடுத்து முடி உதிர்ந்த இடத்தில் தடவும்போது, இது மீண்டும் நெற்றியில் முடி வளர வேர்களை உருவாக்கி தருகின்றது. எனவே வெங்காயத்தின் சாறை முடி உதிர்ந்த இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து பின்பு தலையலச வேண்டும் இவ்வாறு வாரத்தில் ஒரு முறை செய்து வர முன் நெற்றியில் முடி வளர ஆரம்பிக்கும்.
கருமிளகு:
மிளகை அரைத்து அவற்றில் சிலதுளிகள் எலுமிச்சை சாறு பிழிந்து நெற்றியில் முடி உதிர்ந்த இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யவும். பின்பு சிறிது நேரம் வைத்திருந்து பின்பு தலையலச வேண்டும். இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வர, நெற்றியில் முடி வளர ஆரம்பிக்கும்.
கொத்தமல்லி:
முன் நெற்றியில் முடி வளர கொத்தமல்லியை அரைத்து தலையில் அப்ளை செய்து. 5 நிமிடம் சுழற்சி வடிவில் சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பின்பு ஷாம்பு போட்டு தலையலச வேண்டும். இவ்வாறு இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வர நெற்றியில் முடிவளர ஆரம்பிக்கும்.
பீட்ருட் இலை:
சிறிதளவு பீட்ருட் இலைகளை எடுத்துக்கொண்டு, அவற்றை தண்ணீரில் வேகவைத்து, பின்பு பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும். பின்பு இந்த பேஸ்ட்டுடன் சிறுதளவு மருதாணி பொடி கலந்து, தலையில் அப்ளை செய்யவும்.
பின்பு 20 நிமிடங்கள் கழித்து தலையை ஷாம்பு போட்டு அலச வேண்டும் இவ்வாறு தொடர்ந்து செய்து வர நெற்றியில் முடிய வளர ஆரம்பிக்கும்.
ஆலிவ் ஆயில்:
நெற்றியில் முடி வளர ஆலிவ் ஆயிலுடன் சிறிதளவு இலவங்க பட்டை பொடி மற்றும் ஒரு டீஸ்புன் தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முடி உதிர்ந்த இடத்தில் இந்த கலவையை தடவ வேண்டும். பின்பு 20 நிமிடங்கள் கழித்து தலை அலச வேண்டும்.
இந்த முறையை வாரத்தில் ஒரு முறை செய்து வர நெற்றியில் முடி வளர ஆரம்பிக்கும்.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *