நாடாளுமன்ற உறுப்பினர் பஸில் ராஜபக்ச தலைமையிலான குழுவொன்று இன்று காலை யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளது.
குறித்த குழுவிற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளதுடன், இதனைத் தொடர்ந்து பஸில் ராஜபக்ச தலைமையில் மஹிந்த அணியினர் நல்லூர் ஆலயத்தில் இறை வழிபாட்டிலும் ஈடுபட்டிருந்தனர்.
ஆலயத்தில் இறை வழிபாட்டினைத் தொடர்ந்து யாழ். ஊரெழுவிலுள்ள என்.கே மண்டபத்தில் நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.