பொலன்னறுவை, கதுருவெலயில் நிர்மாணிக்கப்படும் மும்மொழி தேசிய பாடசாலையின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
இந்த பாடசாலை அனுராதபுரம், திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு போன்ற அண்மைய மாவட்டங்களின் பல்லின மும்மொழி பாடசாலையின் தேவையை நிறைவு செய்யும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
தேசிய நல்லிணக்கம் மற்றும் சமூக ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தும் உயர் அறிவுடைய பூரணமான மாணவ தலைமுறையை உருவாக்குவதற்கான அடிப்படை நோக்கத்துடன் இந்த பாடசாலை அமைக்கப்படவுள்ளது.
இந்த பாடசாலையில் ஆறாம் வகுப்பில் இருந்து உயர்தரம் வரையான வகுப்புக்கள் நடத்தப்படவுள்ளன. இந்திய அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்புடன் இந்தப் பாடசாலையின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.