பிக்பாஸ் குரல் இவருடையதுதான் – வியப்பில் பிக்பாஸ் பார்வையாளர்கள்…. – Tamil VBC

பிக்பாஸ் குரல் இவருடையதுதான் – வியப்பில் பிக்பாஸ் பார்வையாளர்கள்….

பிக்பாஸ் 3வது சீஸனும் ஆரம்பித்து இரண்டுவாரங்கள் முடிவடைந்து வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது, ஆனால் பிக்பாஸ் குரல் யாருடையது என்ற கேள்வி சீஸன் ஒன்றிலிருந்து எழுந்தவாறு இருக்கின்றது, பிக்பாஸ் குரல் கோபி’ நாயர் மற்றும் மானாடமயிலாட கோகுல்’தான் பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் என்று பல முரண்பாடான கருத்துக்கள் நிலவுகிறது.
ஆனால் முதல்முறையாக பிக்பாஸ் குரல் யார் என்றகேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக,
நடிகர் மற்றும் பின்னணி குரல் கலைஞர் அமித் பார்கவ், அந்தக்குரலுக்கு சொந்தக்காரர் தான்தான் என்று நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். கன்னட பிக்பாஸ் 2வது சீஸனில் இடம்பெற்ற பிக்பாஸ் குரல் இவருடையதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் டி.வி-யில் நிறைவடைந்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ சீரியலில் நடித்தவர், அமித் பார்கவ். ‘மிருதன்’, சார்லி சாப்ளின் 2′ போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவரின் மனைவி ஶ்ரீரஞ்சனி, விஜய் டி.வி-யின் தொகுப்பாளர் என்பது எல்லோரும் அறிந்ததே.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *