இயக்குநர் பா.ரஞ்சித்தின் தந்தை காலமானார் – ராஜராஜசோழனின் சாபம்தான் காரணமா? – Tamil VBC

இயக்குநர் பா.ரஞ்சித்தின் தந்தை காலமானார் – ராஜராஜசோழனின் சாபம்தான் காரணமா?

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் பா.ரஞ்சித்தின் தந்தை காலமானார். அவருக்கு வயது 63. அட்டகத்தி படம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கியுள்ளார். திரையில் தலித் அரசியலை பேசும் பா.ரஞ்சித், பல்வேறு சமூக அவலங்களுக்கும் குரல் கொடுத்து வருகிறார்.
கடவுளாக வணங்கப்படும் மாட்டை சாப்பிடுவதால் கடவுளையே சாப்பிடுபவன் என்றும் பெருமை தெரிவித்தார். ஒரு கட்டத்தில் மாமன்னர் ராஜராஜ சோழனின் ஜாதி குறித்து பேசிய பா.ரஞ்சித் அவரது ஆட்சிகாலத்தை இருண்டகாலம் என்று கடுமையாக விமர்சித்தார். அத்தோடு விடாமால் ராஜராஜசோழன் ஆட்சியில், 400 பெண்கள் விலைமாதர்களாக மாற்றப்பட்டதாகவும் சாடினார்.இயக்குனர் பா.ரஞ்சித்தின் இந்த பேச்சு குறித்து உளவுப்பிரிவு காவலர் அளித்த புகாரின் பேரில் பா.ரஞ்சித் மீது இரு பிரிவுகளின் கீழ் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் பாலா அளித்த புகாரின் பேரில் ரஞ்சித் மீது இரண்டாவதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 153, 153 ஏ ஆகிய சாதாரண பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இவரது தந்தை பாண்டுரங்கன். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார், தொடர்ந்து  நேற்று இரவு 2 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து பா.ரஞ்சித்தின் சொந்த ஊரான திருவள்ளூர் மாவட்டம் கரலப்பாக்கத்துக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. தந்தையை இழந்துவாடும் பா.ரஞ்சித் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ராஜராஜசோழனின் சாபம்தான் காரணமா? என்ற ஐயப்பாடு நிலவுவதையும் காணலாம்….

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *