அமலாபாலின் ஆடை’ படத்தில் பக்தி பாடல் பாடிய பி.சுசிலா: எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…. – Tamil VBC

அமலாபாலின் ஆடை’ படத்தில் பக்தி பாடல் பாடிய பி.சுசிலா: எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….

மேயாத மான்’ பட இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடித்திருக்கும் படம் ஆடை.
இந்தப் படத்தை வீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விஜய் கார்த்திக் கண்ணா ஒளிப்பதிவில், பிரதீப் குமார் இசையமைத்துள்ளார்.
அமலாபாலின் ஆடை படத்தில் புகழ்பெற்ற பாடகி பி.சுசிலா பக்தி பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

பெண் ஒருவர் ஆடையின்றி ஓர் இடத்தில் மாட்டிக் கொள்கிறார். அங்கிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்ற பின்னணியில் இந்தக் கதை அமைக்கப்பட்டுள்ளது.
ஹீரோயினை மையப்படுத்தி நகரும் இக்கதையில் விஜே ரம்யா, விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு அதிகாரிகள் படத்துக்கு ‘A’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசர், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்தப் படம் ஜுலை 19-ம் தேதி திரைக்கு வரும் என்றும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் 83 வயதான புகழ்பெற்ற பாடகி பி.சுசிலா பக்திப்பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

பாடல் ஒலிப்பதிவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் இயக்குநர் ரத்னகுமார், 70 ஆண்டுகளுக்கு முன்னதாக ஒரு படத்தில் பி.சுசிலா பாடிய பக்தி பாடலை தற்போது ஆடை படத்திற்காக பாடியுள்ளார். விரைவில் இந்தப் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *