என்னை கருவுலையே கலைக்கப் நெனச்சாங்க… கதறும் முன்னணி நடிகை! – Tamil VBC

என்னை கருவுலையே கலைக்கப் நெனச்சாங்க… கதறும் முன்னணி நடிகை!

இந்தியாவின் எந்த மொழி திரை துறையாக இருந்தாலும், மொழி, கலாச்சாரம், குவாலிட்டி, கதையம்சம், கதாநாயகன் உருவம், தோற்றம், கொண்டாட்டம் வேறுப்பட்டாலும்.. நாயகி மட்டும் தாஜ்மஹால் பளிங்கு கல் போல மாசு, குறைப்பாடு இல்லாமல் வெள்ளையாக தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது.

இன்று, நேற்று என்று இல்லாமல், காலம், காலமாக இதுவொரு சாபமாக இருப்பதை நாம் காண இயல்கிறது. இந்த நிற அரசியல் காரணத்தால் தங்கள் தாய் மொழி படங்களில் திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல், வளர முடியாமல் காணாமல் போனவர்கள் பலர் இருக்கிறார்கள். எதுவாக இருந்தாலும் அதற்கு ஒரு தோற்றம், முடிவு இருக்க தான் வேண்டும். இந்த திரையுலகின் நிற அரசியலுக்கு கோலிவுட்டில் முற்றுப்புள்ளி வைத்த பெருமை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களையே சேரும்.

முப்பது வயதை கடந்தாலும் குழந்தைகளுக்கு தாயக நடிக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கும் நடிகைகளுக்கு மத்தியில் இளம் வயதில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து ரசிகர்களின் பாராட்டுகள் மற்றும் நல்ல விமர்சனங்கள் பெற்றவர் ஐஸ்வர்யா ராஜேஷ். பலரது கனாக்களுக்கு பதிலளிக்கும் வகையில் இலட்சியங்கள் கொண்டு வளர்ந்து வரும் இளம் பெண்களுக்கு முன்மாதிரியாக வளர்ந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் பற்றிய சுவாரஸ்யமான மற்றும் பலரும் அறியாத உண்மைகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்…

சென்னை: ஐஸ்வர்யா ராஜேஷ் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். இவரது தந்தை பெயர் ராஜேஷ். இவருடன் பிறந்தவர்கள் மூன்று மூத்த சகோதரர்கள். ஐஸ்வர்யாவின் தந்தை ராஜேஷ் தனக்கு பெண் குழந்தை வேண்டும் என்று வரம் இருந்து பெற்ற கடைசி கடைக்குட்டி தான் ஐஸ்வர்யா ராஜேஷ்.

பாசம்: வேண்டி, காத்திருந்த பெற்ற குழந்தை என்பதால் ஐஸ்வர்யா ராஜேஷ் மீது அவரது தந்தை ராஜேஷிற்கு மிகுந்த பாசமும், அக்கறையும் இருந்தது. ஆகையால், தன் மூன்று மகன்களை ஹாஸ்டலில் தங்கி படிக்க வைத்த போதிலும், மகள் ஐஸ்வர்யாவை மட்டும் தன்னுடனே தங்க வைத்து படிக்க வைத்தார் ராஜேஷ்.

கருக்கலைப்பு: ஏற்கனவே மூன்று பிள்ளைகள் பற்றதாலும், ஒருவேளை நான்காவதும் மகனாக பிறந்தால் ஐந்தாவதாக இன்னொரு பிள்ளை பெற வேண்டி இருக்கும் என்பதாலும் ஒருக் கட்டத்தில் கருக்கலைப்பு செய்துவிடலாம் என்ற எண்ணமும் இருந்ததாம்.
மேலும், முதல் மூன்று குழந்தைகள் சிறிய இடைவேளையில் பிறந்ததால் ஐஸ்வர்யா ராஜேஷின் அம்மாவிற்கு உடல் வலிமையையும் குறைவாக இருந்ததாம்.
இப்படி பிறக்கும் போதே பல கடுமையான சூழலை கடந்து தான் பிறந்திருக்கிறார். இதை சமீபத்தில் தான் அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்திருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
நடிப்பு குடும்பம்: ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களது தந்தை ராஜேஷும் நடிகர் தானாம். இவர் தெலுங்கில் 54 நான்கு படங்களில் நடித்திருக்கிறார். மேலும்,இவரது தாத்தா அமர்நாத் அவர்களும் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இவர்கள் மட்டுமல்ல, இவரது அத்தை ஸ்ரீலட்சுமி தெலுங்கில் 500க்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களில் காமெடி வேடமேற்று நடித்துள்ளார்.
படிப்பு: ஐஸ்வர்யா ராஜேஷ் ஸ்ரைன் வேளாங்கண்ணி சீனியர் மேல்நிலை பள்ளி மற்றும் ஹோலி ஏஞ்சல் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலை பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். மேலும், எத்திராஜ் பெண்கள் கல்லூரியில் இவர் பி.காம் முடித்தார். இவர் இதே காலக்கட்டத்தில் நடனமும் கற்றுக் கொண்டார். கல்ச்சுரல்களில் நடனமாடியும் இருக்கிறார்.
டான்ஸ்: நடனம் கற்றுக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷிற்கு கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் இவர் வெற்றியும் பெற்றார்.
ஆர்வம்: ஐஸ்வர்யா ராஜேஷ் தனக்கு நடிப்பில் ஆர்வம் எல்லாம் இருக்கவில்லை. நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வமே இருந்தது. முதலில் நாடகங்களில் நடிக்க தான் வாய்ப்பு தேடினேன். ஆனால், அங்கே ஐநூறு ரூபாய் தான் சம்பளம் என்றனர். மேலும், திரைப்படத்தில் நடித்து வந்தால் இங்கே நல்ல சம்பளம் கிடைக்கும் என்றார்கள் அதனால் தான் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தேடினேன் என்றும் கூறி இருக்கிறார்.நிராகரிப்புகள்: ஆரம்பத்தில் நடிக்க வாய்ப்பு தேடிய போது, நிறத்தை வைத்து துணை வேடங்களில் நடிக்க வாய்ப்பு தருவதே கடினம் என்று கூறி நிறைய பேர் நிராகரித்து வந்துள்ளனர்.
சிறுவயதில் இருந்தே உன்னால் முடியாது என்றால், உடனே அதை முடித்து காட்ட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த நிராகரிப்புகளை எல்லாம் தகர்த்து நடிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்று முனைப்புடன் வாய்ப்புகள் தேட ஆரம்பித்தார்.
காக்கா முட்டை: ஆரம்பத்தில் ஐஸ்வர்யா என்று பெயரை பயன்படுத்தி வந்த இவர். காக்கா முட்டை படத்தில் இருந்து தான் ஐஸ்வர்யா ராஜேஷ் என்று பெயரை கிரெடிட் கார்டில் சேர்க்க துவங்கினார்.பெயர் அளவில் மட்டுமின்றி, திறமை மற்றும் வெற்றி அளவிலும் காக்கா முட்டை ஐஸ்வர்யா ராஜேஷிற்கு நல்ல திருப்பு முனையாக இருந்தது. அதற்கு முன்பு வரை சிறுசிறு வேடங்கள், சின்ன, சின்ன படங்களில் நடித்து வந்தவர். அதற்கு பிறகு ரசிகர்கள் மனதில் இடம்பெறும் வகையிலான கதாப்பாத்திரங்கள் ஏற்க துவங்கினர்.
கனா: எல்லாருக்குமே ஒரு கனா இருக்கிறது. அது ஐஸ்வர்யா ராஜேஷிற்கும் இருந்தது. வெறும் கனா மட்டும் போதாது, நம்மை யாரேனும் மட்டம் தட்டினால். அவர்கள் முன் வாழ்ந்து காட்ட, ஜெயித்து காட்ட தன்னம்பிக்கையும் வைராக்கியமும், விடா முயற்சியும் வேண்டும்.
அந்த வகையில் என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை மிகுதியாக கொண்டவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தனக்கே தெரியாமல் ஐஸ்வர்யா ராஜேஷ் பல கனவுகள் கொண்டு வளர்ந்து வரும் இளம் பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாக உருவாகி வருகிறார்.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *