மேக்கப் போடுவது பற்றிய பொய்யான கட்டக்கதைகள் என்னென்ன… ஆண் – பெண் இருவருக்கும் பொருத்தமான விஷயங்கள்…. – Tamil VBC

மேக்கப் போடுவது பற்றிய பொய்யான கட்டக்கதைகள் என்னென்ன… ஆண் – பெண் இருவருக்கும் பொருத்தமான விஷயங்கள்….

எல்லா விஷயத்திலும் கட்டுக் கதைகள் என்பது இருக்கத்தான் செய்கிறது. அப்படிப்பட்ட பொய் சரும பராமரிப்பு முறைகளிலும் கூறத் தான் படுகிறது. அப்படி கூறப்பட்ட சில கட்டுக்கதைகளைப் பற்றி தான் இக்கட்டுரையில் அலச உள்ளோம். மக்களும் இந்த சரும பராமரிப்பு தொடர்பான கட்டுக்கதைகளை நம்பி அதையும் பின்பற்றி வருகிறார்கள், இது தவறான ஒன்று என்பதை இந்த கட்டுரையின் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

மேக்கப் போட்டால் முகம் பாழாகும்:
இது பொதுவாக எல்லோராலும் கூறப்படும் ஒரு வகை கட்டுக்கதை தான். அடிக்கடி மேக்கப் போட்டு வந்தால் முகம் பாழாகி விடும் என்பார்கள். ஆனால் இது முற்றிலும் உண்மை அல்ல. நீங்கள் காலாவதியான அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தினால் தான் அந்த மாதிரியான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மற்றபடி தினமும் மேக்கப் போடுவதால் எந்த வித பிரச்சினையும் இல்லை. உங்களது சருமத்திற்கு ஏற்ற அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தி வருவது நல்லது. மேலும் அதனுடைய காலாவதி தேதியையும் பார்த்துக் கொண்டு பயன்படுத்துங்கள்.

அடிக்கடி முகத்தை கழுவினால் பருக்கள் வராது:
இந்த கருத்தை நிறைய பேர்கள் தவறாக புரிந்து கொள்கிறார்கள், உங்கள் முகத்தை சுத்தமாக வைத்திருந்தாலே பருக்கள் வராது. இதை அடிக்கடி கழுவி கழுவி சுத்தம் செய்யும் போது உங்கள் முகத்தில் இயற்கையாக உள்ள எண்ணெய் பிசுக்கு போக வாய்ப்புள்ளது. இதனால் சருமம் எளிதில் ஈரப்பதத்தை இழந்து விடும்.

பருக்களை உடைத்து விட்டால் சரியாகிடும்:
இந்த மாதிரியான செயலை ஒரு போதும் பண்ணாதீர்கள். பருக்களை உடைத்து விடுவதை தவிருங்கள். அப்படி செய்யும் போது அது மற்ற இடங்களுக்கும் பரவி தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது, இது விளைவை மோசமாக்கி விடும், வெளியே போகும்போது மட்டும் தான் சன்ஸ்க்ரீன்: இது முற்றிலும் தவறானது. சன்ஸ்க்ரீன் உங்கள் சருமத்திற்கு மிகவும் முக்கியம். சூரிய ஒளியில் செல்லும் போது மட்டுமல்ல, வெளியில் மழை பெய்தால் கூட நீங்கள் இதை அப்ளே செய்து வெளியில் போகலாம். தினமும் அப்ளே செய்து கொள்வது நல்லது.

அதிக SPF காரணி: சூரியனின் புற ஊதாக் கதிர்களான UVA மற்றும் UVB இருந்து சருமத்தை காக்க வேண்டும். இதில் UVB கதிர்களை தடுக்க மட்டுமே SPF அதிகமான சன்ஸ்க்ரீன் தேவைப்படுகிறது. மற்ற படி நீங்கள் SPF 15 பயன்படுத்தி கொண்டாலே போதும். அதில் உள்ள இகேம்சூல், ஆக்ஸிபென்ஷோன் போன்ற பொருட்கள் முற்றிலுமான பாதுகாப்பை தருகிறது.
விலையுயர்ந்த பொருட்கள் மட்டுமே நல்லது:
இது உண்மை கிடையாது. நிறைய பேர்கள் விலையுயர்ந்த அழகு சாதனப் பொருட்களை வாங்குவதே சிறந்தது என்று நினைக்கிறார்கள். ஆனால் உங்கள் சருமத்திற்கு ஏற்ற விலை மலிவான பொருட்கள் கூட சிறந்தது தான். நீங்கள் தினசரி பயன்படுத்தும் பொருட்களே போதுமானது. இதற்காக நீங்கள் நிறைய காசுகள் செலவழிக்க வேண்டாம்.

தினசரி ஸ்க்ரப் செய்தல்:
இதுவு‌ம் உண்மையல்ல. தினமும் நமது தோலில் உள்ள இறந்த செல்களை நீக்க ஸ்க்ரப் செய்ய வேண்டும் என்பார்கள். ஆனால் உண்மையில் தூசிகள், அழுக்குகள் உங்கள் சருமத்திற்கு ஒரு ஆரோக்கியமான பொலிவை கொடுக்கும். ஆனால் நீங்கள் தினமும் சருமத்தை ஸ்க்ரப் செய்யும் போது சருமம் முரடாக மாற வாய்ப்புள்ளது.
அதிகமாக தண்ணீர் குடித்தால் சருமத்திற்கு அதிக ஈரப்பதம் கிடைக்கும், இது ஒரு சாதாரண விஷயம் கிடையாது. நீங்கள் தண்ணீர் அதிகமாக குடிப்பது உங்கள் சருமத்திற்கு நல்லது தான். ஆனால் சருமத்திற்கு போதுமான ஈரப்பதம் மட்டுமே கிடைக்கும். அதற்குப் பதிலாக சருமத்தில் உடம்பில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி விடும்.
ஏஜ் ஸ்பாட்ஸ்:
வயதானால் தான் ஏஜ் ஸ்பாட்ஸ் வரும் என்ற ஒரு தவறான கருத்து உள்ளது. இதற்கும் வயதுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. சூரிய ஒளி அதிகமாக சருமத்தில் பட்டால் ஏஜ் ஸ்பாட்ஸ் ஏற்படும்.
ஆன்டி ஏஜிங் க்ரீமெல்லாம் உங்கள் சருமத்தை சுருக்கங்களிலிருந்து காப்பாத்தாது. உங்கள் சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை நீங்கள் கொடுத்து வந்தாலே சுருக்கங்கள் மற்றும் சருமம் வயதாகுவதை தடுத்து விடலாம்.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *