இன்ஸ்டாவில் பெண் போல போஸ் கொடுத்து வைரலாகும் சிறுவன் – கோடிஸ்வரனான அதிசயம்…. – Tamil VBC

இன்ஸ்டாவில் பெண் போல போஸ் கொடுத்து வைரலாகும் சிறுவன் – கோடிஸ்வரனான அதிசயம்….

சமுதாயத்தில் வெற்றி பெறுவதற்கு செல்வாக்குடன் திகழ்வதற்கும், நீங்கள் நிறைய கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் நிலையான முயற்சி ஆகியவற்றைச் செய்ய வேண்டும். வெறுப்பை உமிழும் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொள்ளும் பக்குவம் இருக்க வேண்டும்.
இதுவும் அதுபோன்ற ஒரு வழக்கு தான். ஒரு திறமையான சிறுவன், இன்ஸ்டாகிராமில் பெண் போல் வேடமணிந்து பல பேர் பின்தொடரும் ஒரு பிரபலமாக இருந்து வருகிறான். அவன் தன்னுடைய பணத்தில் சொந்தமாக ஒரு வீடு வாங்கும் நிலையை அடைந்து விட்டான். அவன் கதையை பற்றி நாமும் அறிந்து கொள்வோம்.

சிறுவன்: தாய்லாந்தை சேர்ந்த 12 வயது சிறுவன் நெஸ் ஹெயில்ஸ். இந்த சிறு வயதில் ஒரு மிகப் பெரிய பிரபலமாக வலைத்தளங்களில் வலம் வரும் இவன், இன்று சமூகத்தில் அதிக பணம் ஈட்டும் சிறுவனாகவும் இருக்கிறான். தன்னுடைய குடும்பத்திற்காக ஒரு வீடு வாங்கும் அளவிற்கு அவனுடைய நிதி நிலைமை வளர்ந்துவிட்டதாக அவன் கூறுகிறான்.

இன்ஸ்டாகிராம்: இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற தனது சமூக ஊடகங்களில் பெண் போல் மேக்கப் மற்றும் உடை அணிந்த புகைப்படங்களை பதிவிட்டு வருகிறான் இந்தச் சிறுவன்.
அவன் சிறு வயதில் தன்னுடைய தாயின் மேக்கப் சாதனங்களை எடுத்து விளையாடத் தொடங்கினான் என்று கூறப்படுகிறது. அவனுடைய ஆர்வத்தை அவன் பெற்றோர் ஊக்குவித்து மேலும் அவனுடைய பொழுதுபோக்கை வளர்த்துக் கொள்ள சில குறிப்புகளையும் வழங்கி வந்திருக்கின்றனர். தற்போது அந்தச் சிறுவனை பின்தொடரும் இன்ஸ்டாகிராம் வாடிக்கையாளர்கள் 280,000 என்ற எண்ணிக்கையில் உள்ளது. அந்தச் சிறுவன் ஒரு பெண்ணாக ஆடைகளை அணிந்தும், மேக்-அப் குறிப்புகளைக் கொடுத்தும், தன்னைப் பற்றிய புகைப்படங்களையும் இடுகையிடுவதால், சமூக ஊடகங்களில் ஒரு செல்வாக்குமிக்கவராக தன்னைத் தானே உருவாக்கிக் கொண்டிருக்கிறான்.
வைரலாகும் சிறுவன்: நெஸ் தன்னுடைய குடும்பத்திற்காக கட்டிய புதிய வீடு குறித்த புகைப்படங்களை வெளியிட்டவுடன் ஆசியாவின் தலைப்பு செய்தியாக மாறி இருந்தான். நெஸ் அலங்காரம் செய்யும் போது, ஆடம்பரமான ஆடைகளில் போஸ் கொடுப்பதன் மூலமாகவோ அல்லது ஈர்க்கக்கூடிய விக் அணிவதன் மூலமாகவோ, போலி கண் இமைகள் அணிவதன் மூலமாகவோ தன்னை ஒரு பெண்ணாக தோற்றமளிக்க தனது திறமைகளைப் பயன்படுத்துவதன் காரணமாக பலரும் அவனைப் பின்தொடரும் நிலைக்கு வந்திருக்கிறான். நெஸ்ஸின் அலங்காரம் மற்றும் பாணி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது, இது சில தொழில்முறை ஒப்பனை கலைஞர்களை வெட்கப்பட வைக்கும் அளவிற்கு உள்ளது என்பது மிகை அல்ல.
புகைப்படங்கள்: நெஸ்ஸின் இந்த பொழுபோக்கு காரணமாக அவனுடைய நண்பர்கள் சில முறை அவனை கிண்டல் செய்ததாகவும் அவன் கூறுகிறான். ஆனால் அவன் பொழுதுபோக்கில் அவனுக்கு உள்ள ஆர்வம் காரணமாக அவற்றை அலட்சியம் செய்து விடுகிறான். இதில் தான் அவனுடைய சந்தோசம் உள்ளது என்று அவன் நம்புகிறான். விளம்பர ஒப்பந்தங்கள்: நெஸ் மிகவும் இலாபகரமான விளம்பர ஒப்பந்தங்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகளுக்கான அழைப்புகளைப் பெற்று வருகிறான். தாய்லாந்தில் மட்டும் இவன் நட்சத்திர அந்தஸ்தைப் பெறவில்லை, சீனா போன்ற அயல்நாடுகளில் இருந்தும் அவனுக்கு பல அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *