பண பிரச்சனைகளால் மிகுந்த அவதியா? கூரையை பிச்சுக்கிட்டு பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டணுமா – இதைச்செய்யுங்க…. – Tamil VBC

பண பிரச்சனைகளால் மிகுந்த அவதியா? கூரையை பிச்சுக்கிட்டு பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டணுமா – இதைச்செய்யுங்க….

இன்றைய காலக்கட்டத்தில் பணப்பிரச்சினை இல்லாதவர் எவருமே இல்லை என்று தான் சொல்ல முடியும். இதனால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் அதனை திருப்பி கொடுக்க முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டு விடுகின்றது.இதற்கு ஆன்மீகப்படி சில பரிகாரங்களை செய்தால் போதும். கடன் பிரச்சினையிலிருந்து எளிதில் வர முடியும். தற்போது அந்த பரிகாரங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
ஒரு வெள்ளியன்று யாரும் பார்க்காத நேரத்தில் வேப்ப மரம் ஒன்றில் ( மரத்திடம் மானசீக மன்னிப்பு கோரி ) சிறிய துளையிட்டு அதில் சிறிய சதுர வடிவ வெள்ளியை வைத்து பின்பு மூடி விடவும். முன்னேற்றம் பின்பு கண் கூடாக தெரியும்.
ஒவ்வொரு வெள்ளியும் காலை 6-7 மணிக்குள் குளித்து பூஜைகள் செய்து அருகில் உள்ள மளிகை கடை சென்று மகா லட்சுமியை கொண்டு கல் உப்பு வாங்கி வந்து உப்பு பாத்திரத்தில் போடவும்.
இதை ஒவ்வொரு வாரமும் செய்து வர வீட்டில் மகா லட்சுமி வரவிற்கு குறைவே இருக்காது.
வெள்ளிக்கிழமை காலை 6-7 மணிக்கு 5 வெற்றிலை 5 கொட்டை பாக்கு 5 ஒரு ரூபாய் நாணயம் அனைத்தும் பூஜையில் வைத்து லக்ஷ்மி வழிபாடு செய்து, பின்பு அனைத்தையும் ஒரு தாளில் மடித்து வைக்கவும். பின்பு அடுத்த வாரம் செய்யும் பொழுது மேற்கண்டதை ஒரு உண்டியலில் போட்டு வைக்கவும். இப்படியே 14 வாரங்கள் செய்து முடிந்ததும் நாணயங்களை எடுத்து கொண்டு மற்ற பொருட்களை கடலில் அல்லது ஓடும் ஆற்றில் போட்டு விடலாம்.
வளர்பிறையில் வரக்கூடிய திரிதியை (திரிதியை-மகாலட்சுமி) அன்று அன்னதானம் செய்தால் கடன் பிரச்சனை மற்றும் பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஒவ்வொரு மாதமும் செய்யலாம்.
எவ்வளவு பணம் வந்தும் சேமிக்க முடியவில்லை என கவலையில் உள்ளோர் தங்களின் உடைகள் வைக்கும் பீரோ மற்றும் பணம் வைக்கும் இடங்களில் கரு நீல துணியை விரிப்பாக உபயோகித்து வர பண விரயம் நிற்கும். சனிக்கிழமை தொடங்குவது சிறப்பு.
நல்ல சம்பாத்தியம் இருந்தும் பணம் வீண் விரயமாகி கொண்டே இருந்தால் தினமும் காலை வேளையில் பறவைகளுக்கு இனிப்பு பிஸ்கட்கள் வழங்க வீண் விரயம் கட்டுப்படும்.
கடன் கொடுத்தோ, பெற்றோ அவதிப்படுவோர் கட்டாயம் கடுகு எண்ணெய்யில் உணவு சமைத்து சாப்பிட நன்மை உண்டாகும். காலை வேளையில் குளித்து முடித்தவுடன் சிறிது சர்க்கரை எடுத்து வீட்டு வாசல் வெளியே தூவி வரவும், இது சிறு பூச்சிகள் மற்றும் எறும்புகளின் உணவாகும்.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *