லக்ஷ்மி தேவிக்கும், சரஸ்வதி தேவிக்கும் இடையே இருக்கும் உணமையான உறவு…. – Tamil VBC

லக்ஷ்மி தேவிக்கும், சரஸ்வதி தேவிக்கும் இடையே இருக்கும் உணமையான உறவு….

இந்து மதத்தில் ஆண் கடவுள்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவிற்கு பெண் கடவுள்களுக்கும் முக்கியத்துவம் இருக்கிறது. ஒவ்வொரு கடவுளுக்கும் என்று தனித்துவமும், மகிமையும் இருக்கிறது. கல்வியை பொறுத்த வரையில் சரஸ்வதி கடவுளாகவும், செல்வத்திற்கு லக்ஷ்மியும் கடவுளாக இருக்கிறார்கள். பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் ஒரு சந்தேகம் லக்ஷ்மியும், சரஸ்வதியும் சகோதரிகளா என்பதாகும். மேலும் இவர்களின் அன்னை துர்கா தேவிதான் என்று சந்தேகம் எழுப்புபவர்கள் கூட இருக்கிறார்கள். இந்த சந்தேகளுக்கெல்லாம் சரியான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.
துர்கா தேவி: துர்கா தேவி அவரின் கிருபைக்காகவும், ஆற்றலுக்காகவும் சக்தியின் உருவமாக வழிபடப்படுகிறார். சக்தி என்பதற்கு ஆன்மீக ஆற்றல் அல்லது வலிமை என்பது அர்த்தமாகும். துர்கா தேவி மஹிஷாசுரனை அழிப்பதற்காக கடவுள்களால் உருவாக்கப்பட்டவர். பிரம்மா மஹிஷாஸுரனுக்கு எந்த ஆனாலும் கொள்ள முடியாத வரத்தை வழங்கினார். அதனால் அவன் அனைத்து உலகங்களிலும் அராஜகம் செய்ய தொடங்கினான். இந்த தீய அரக்கனை அழிக்கவே துர்கை படைக்கப்பட்டார்.
லக்ஷ்மியின் தோற்றம்: விஷ்ணு புராணத்தின் படி லக்ஷ்மி தேவி பிர்கு மற்றும் க்யாதியின் மகளாவார். அவர் சொர்க்கத்தில் வசித்து வந்தார். ஆனால் துருவாசர் அளித்த சாபத்தின் காரணமாக அவர் சொர்க்கத்தை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.சரஸ்வதி: ரிக் வேதத்தில் கூறியுள்ள படி சரஸ்வதி ஒரு நதியாகவும், கடவுளின் உருவமாகவும் இருக்கிறார். வேதத்தில் கூறியுள்ளபடி சரஸ்வதி ஆதிசக்தியின் பல்வேறு வடிவங்களில் ஒருவராகவும், பிரம்மாவின் ஆற்றலின் பெண் உருவமாகவும் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
ஆதிசக்தி: இந்து புராணங்களின் படி ஆதி பராசக்திதான் பிரபஞ்சத்தின் படைப்பாளியாகவும், பாதுகாப்பவராகவும், அழிப்பவராகவும் இருக்கிறார். பார்வதி தேவிதான் ஆதிபராசக்தியின் முழுமையான வடிவமாக கருதப்படுகிறார். மற்ற அனைத்து கடவுள்களும் அவரின் பல்வேறு வெளிப்பாடுகள்தான். சதி பார்வதியாக மீண்டும் பிறந்து சிவனை திருமணம் செய்துகொண்டார். மற்ற அனைத்து கடவுள்களையும் விட இவர் உயர்ந்தவர் ஆவார். லக்ஷ்மி தேவி: லட்சுமி தேவி பாற்கடலை கடையும்போது அதிலிருந்து தோன்றியவர். மஹாலக்ஷ்மி எப்போதும் இருந்து வந்தார். பாற்கடலில் இருந்து வெளிப்பட்டது அவரின் தோற்றத்தின் வெளிப்பாடுதான். அதன்பின் அவர் விஷ்ணுவை திருமணம் செய்துகொண்டு அவரின் அனைத்து அவதாரங்களிலும் பின்தொடர்ந்தார்.

பிரம்மாவின் மனைவி: சரஸ்வதி தேவி பிரம்மாவின் மனைவி ஆவார். இவர் பிரம்மாவின் சக்தியாகவும் கருதப்படுகிறார். ஸ்கந்த புராணத்தின் படி சரஸ்வதி சிவபெருமானின் சகோதரி ஆவார்.

தேவி மஹாத்யா: தேவி மஹாத்யாவில் குறிப்பிட்டுள்ள படி லக்ஷ்மி, சரஸ்வதி மற்றும் காளி மூவரும் இணைந்து திரித்துவத்தை உருவாக்குகிறார்கள். இவர்கள் அனைவரும் ஆதிசக்தியின் பகுதிகள் ஆவர். இதிலிருந்தே லக்ஷ்மியும், சரஸ்வதியும் துர்கையின் மகள்கள் அல்ல என்று நாம் அறிந்துகொள்ளலாம். ஆனால் பெங்காலில் துர்கா பூஜையின் போது லக்ஷ்மியும், சரஸ்வதியும் துர்கையின் மகள்களாக வழிபடப்படுகிறார்கள். ஆனால் இது அந்த வட்டாரத்தில் மட்டும் இருக்கும் நம்பிக்கையாகும். துர்கையின் மகள்களா? உண்மையில், சரஸ்வதியும் லக்ஷ்மியும் துர்காவின் மகள்கள் அல்ல. அப்படி இருக்கவும் முடியாது. அவர்கள் அனைவரும் ஆதிசக்தியின் ஒரு பகுதியாவார்கள். பிள்ளையாரும், முருகனும் மட்டுமே பார்வதியின் குழந்தைகள்.

 

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *