உங்க ராசிக்கு உங்களோட குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும்னு தெரியணுமா? இத படிங்க தெரியும்… – Tamil VBC

உங்க ராசிக்கு உங்களோட குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும்னு தெரியணுமா? இத படிங்க தெரியும்…

குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபரின் குணநலன்கள் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க பெரிதும் காரணமாகிறது. அதனால் உங்களுடைய ராசிக்கு ஏற்ற குணங்கள் என்ன? உங்களுடைய குடும்ப வாழ்க்கையில் அது எப்படி பிரதிபலிக்கப் போகிறது என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களுடைய குணநலன்களுக்கும் குடும்ப ஒற்றுமைக்கும் உங்கள் ராசியும் ஒரு காரணம் என்கிறது ஜோதிடம். அதைப் பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பு தான் இந்த கட்டுரை.

நெருப்பின் அடையாளமான ராசிகள் மேஷம்
ராசிகளில் முதன்மையான ராசி மேஷ ராசி. அவர்கள் மிகவும் வலிமையான அளவு நெருப்பை ஆதிக்கமாகக் கொண்டு செயல்படுபவர்கள். இவர்கள் பார்ப்பதற்கு ரொம்ப எனர்ஜிட்டிக் ஆளாகவும், சுறுசுறுப்பாக வேகமாக செயல்படக் கூடியவர்கள். இவர்கள் மிகவும் போட்டி மனம் படைத்தவர்கள். எப்பொழுதும் தாங்கள் தான் பர்ஸ்ட் ஆக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

பலங்கள்
தைரியம், உறுதிப்பாடு, நம்பிக்கை, நேர்மை, ஆர்வம், உற்சாகம் நிறைந்தவர்களாக திகழ்வார்கள்.

பலவீனங்கள்
பொறுமையில்லாதவர்கள், மனக்கிளர்ச்சி கொண்டவர்கள், குறுகிய மனநிலை மற்றும் ஆக்கிரமிப்பு எண்ணத்துடன் குடும்பத்தில் நடந்து கொள்வார்கள்.

தனுசு
இவர்களுக்கு பயணம் என்றால் போதும். அவ்வளவு பிடிக்குமாம். இவர்களின் தத்துவ கருத்துக்கள் மற்றும் திறந்த மனப்பான்மை தான் இவர்களின் வாழ்க்கைக்கு அர்தத்தத்தை கொடுக்கும். மிகுந்த நகைச்சுவை உணர்வு மிக்கவராக இவர்கள் திகழ்வார்கள்.

எதிலும் ஆர்வம் கொண்டவர்கள். வாழ்க்கையில் லட்சியவாதியாகவும் அதே நேரத்தில் தாராள மனம் கொண்டவர்களாகவும் திகழ்வார்கள். இவர்கள் எப்பொழுதும் சுதந்திரத்தை விரும்புபவர்கள். எனவே இவர்களுக்கு கட்டுப்பாடு என்றாலே பிடிக்காது. அந்த எல்லைக்குள் இவர்கள் இருக்கவே மாட்டார்கள்.

சிம்மம்
பிறக்கும் போதே இவர்கள் தலைவர்களாக ஆகப் பிறந்தவர்கள். வாழ்க்கையை தெளிவாக யோசிப்பார்கள். அதற்கு ஏற்றவாறு தங்களை அர்ப்பணிக்கவும் தயங்கமாட்டார்கள். அதே நேரத்தில் அவர்கள் விரும்பியதை அடையாமல் விட மாட்டார்கள். ரெம்ப விசுவாசமுள்ளவர்கள், நிறைய நண்பர்கள் வட்டாரத்தை கொண்டு இருப்பார்கள்.

பலங்கள்
தாராள மனம், அன்பான, மகிழ்ச்சியான, ஆக்கப்பூர்வமான, நகைச்சுவையான மற்றும் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவராக இருப்பார்கள்.

பலவீனங்கள்
பிடிவாதமானவர்கள், திமிர்பிடித்தவர்கள், சோம்பேறிகள், சுயநலவாதிகள் மற்றும் எதற்கும் வளைந்து கொடுக்க மாட்டார்கள்.

நிலத்தை அடையாளமாக கொண்ட ராசிகள் ரிஷப ராசி
ரிஷப ராசிக்காரர்கள் எப்பொழுதும் தங்களைச் சுற்றி அன்பு, அழகு மற்றும் உடல் ஆரோக்கியம் சூழ்ந்திருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். அதே நேரத்தில் சமரசமற்ற தன்மை உடையவர்களாக, பொறாமை மற்றும் பிடிவாதமானவர்களாக இருப்பார்கள்.

பலங்கள்
நம்பகமானவர்கள், பிராக்டிகலான நபர்கள், பொறுப்பானவர்கள், அமைதியானவர்கள் இவர்கள்.

கன்னி
மாறக் கூடிய வாழ்க்கை மற்றும் முறையான அணுகுமுறைகள் என்றால் இவர்களுக்கு பிடிக்காது. ரெம்ப அக்கறையுள்ளவர்களாகவும், மனிதநேயம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

பலங்கள்
விசுவாசமுள்ளவர்கள், பகுப்பாய்வு திறன் கொண்டவர்கள், பிராக்டிகலான நபர்கள், கடின உழைப்பாளிகள் மற்றும் இரக்க குணம் உடையவர்கள் இவர்கள்.

பலவீனங்கள்
விமர்சனம் செய்பவர்கள், வெட்கப்படுவார்கள் மற்றும் அதிக கவலை கொள்வார்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் என்றாலே பொறுப்பு தான் முன்னே வந்து நிற்கும். நல்ல மேலாளராக விளங்கக் கூடியவர்கள், சுய கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கமானவர்கள். இவர்களை எல்லோருக்கும் தெரியும். ஏனெனில் சீக்கிரமாக எல்லோருடனும் ஒட்டிக் கொள்வார்கள். அதே நேரத்தில் அவ்வளவு சீக்கிரம் யாரையும் மன்னிக்க மாட்டார்கள், மனசோர்வு இவர்களுக்கு அதிகமாக இருக்கும்.

பலங்கள்
திறமையான கைவினைஞர்களாக இருப்பார்கள். அதே நேரத்தில் நண்பர்கள், குடும்பம் மற்றும் மரபுகள் மீது பற்று கொண்டவராக இருப்பார்கள்.

காற்றை அடையாளமாகக் கொண்ட ராசிகள் மிதுனம்
இந்த ராசியை கொண்டவர்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல ஒரே நபர் இரண்டு வித்தியாசமான குணாதிசயங்களை கொண்டு காணப்படுவார்கள்.

பலங்கள்
மென்மையானவர்கள், பாசமானவர்கள், ஆர்வம் உடையவர்கள், சந்தேகம் இல்லாதவர்களும் கூட.

பலவீனங்கள்
பதட்டமானவர்கள், சீரற்றவர்கள், தனியாக இருப்பது இவர்களுக்கு பிடிக்காது.

துலாம்
இவர்கள் நியாயமான மற்றும் அமைதியான நபர்கள். சமூகத்தில் ஒன்றி இருப்பதே இவர்களுக்கு பிடிக்கும். தனியாக இருப்பதை விரும்பாதவர்கள்.

பலங்கள்
கூட்டுறவு கொண்டவர்கள், இராஜதந்திரம் உடையவர்கள், கருணை மற்றும் மென்மையானவர்கள் இவர்கள். மோதல்கள் என்றால் இவர்களுக்கு பிடிக்காது. அதை தவிர்க்கவே விரும்புவார்கள்.

பலவீனங்கள்
சுயபரிதாபம், மனக்கசப்பு இவர்களின் பெரிய குறை. எவ்வளவு விலை கொடுத்தாலும் யாருடனும் மோதலை அறவே தவிர்ப்பவர்கள்.

நீரை அடையாளமாக கொண்ட ராசிகள் விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் சிறந்த தலைவர்கள். எவ்வளவுக்கு எவ்வளவு சகிப்புத்தன்மை கொண்டவராக இருக்கிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு வன்முறை கொண்டவர்கள் இவர்கள். உண்மையான நண்பர்களாக இருப்பார்கள்.பொறமையும் வன்முறையும் இவர்கள் கூடவே பிறந்தது. இவர்களின் புத்திசாலித்தனமும் சமயோசித புத்தியும் தான் இவர்களை தலைமைப் பொறுப்பில் நிற்க வைக்கிறது. உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக் கூடியவர்கள். அதே நேரத்தில் நன்றாகவே உணர்வுகளை கட்டுப்படுத்த தெரிந்தவர்கள்.

கடகம்
குடும்பம் மற்றும் உறவுகளுக்கு ஆழ்ந்த அக்கறை காட்டுபவர்கள். அதே நேரத்தில் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவராக இருப்பார்கள்.

பலங்கள்
உறுதியான தன்மை, விசுவாசம், அனுதாபம் மற்றும் கற்பனை எண்ணம் கொண்டவர்கள்.

பலவீனங்கள்
அடிக்கடி மனநிலை மாறுவார்கள், அவநம்பிக்கை, சந்தேகம், பாதுகாப்பற்ற உணர்வு இவர்களின் பலவீனங்கள்.

மீனம்
இவர்கள் மற்றவர்களிடம் நண்பர்களாகவும் அன்புடனும் பழகக் கூடியவர்கள்.

பலங்கள்
கலை உணர்வு உள்ளவர்கள், இரக்கமுள்ளவர்கள், உள்ளுணர்வு கொண்டவர்கள், புத்திசாலி, மென்மையானவர்கள் மற்றும் இசையில் நாட்டம் கொண்டவராக இருப்பார்கள். மன்னிக்கக் கூடியவர்கள், தண்டனை வழங்குபவர்கள் கிடையாது.

பலவீனங்கள்
இவர்களுக்கு விமர்சிக்கப்படுவது பிடிக்காது, கொடுமையை ஒருபோதும் பொருத்துக் கொள்ள மாட்டார்கள்.

காற்று மற்றும் நெருப்பு
இந்த இரண்டையும் அடையாளமாக கொண்ட ராசிக்காரர்கள் இணையும் போது குடும்பத்தில் ஒரு பிணைப்பு எளிதில் உண்டாகிறது. இவர்கள் குடும்பத்தில் ஆற்றலுடன், உற்சாகம் மற்றும் குறும்புகளுடன் இருப்பார்கள். இதனால் இவர்கள் உறவுகளில் வேடிக்கை மற்றும் சந்தோஷத்திற்கு பஞ்சமில்லை. இருப்பினும் சில நேரங்களில் தீயை அடையாளமாகக் கொண்டவர்கள் உறவுகளில் அதீத ஆர்வம் உடையவராகவும், காற்றை அடையாளமாகக் கொண்டவர்கள் உறவுகளில் இருந்து சற்று விலகி இருப்பதாக தோன்றலாம்.

நிலம் மற்றும் நீர்
இந்த இரண்டையும் அடையாளமாகக் கொண்ட ராசிகள் இணையும் போது குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பயனடைகின்றனர். இவர்களுக்கிடையேயான குடும்ப உறவு வலுவாக இருக்கும். நீரை அடையாளமாகக் கொண்டவர்களின் மனநிலையையும் சிக்கல்களையும் சமாளிக்க நிலத்தை அடையாளமாகக் கொண்ட ராசிகளில் முடியும். ஏனெனில் இவர்கள் மிகவும் பொறுமைசாலிகள். மாறாக நீரை அடையாளமாகக் கொண்ட நபர்கள் நிலத்தை அடையாளமாகக் கொண்டவர்களுக்கு உணர்வுப் பூர்வமான பாதுகாப்பை கொடுத்து உதவுகின்றனர். ஆனால் இந்த அதிகமாக உணர்வே மற்றவரை எரிச்சலூட்ட வாய்ப்பு உள்ளது.

நெருப்பு மற்றும் நீர்
இவர்கள் இருவரும் இணையும் போது குடும்பத்தில் ஒரு ஒழுங்கற்ற தன்மையும், நிலையற்ற தன்மையும் இருக்கக் கூடும். நீரின் புதிரான போக்கு இவர்கள் வாழ்க்கைக்கு சரிவராது. எனவே இவர்கள் இருவரும் நல்ல பொருத்த மாக இருக்க முடியாது.

காற்று மற்றும் நிலம்
இந்த இரண்டு அடையாளங்களும் குடும்பத்தில் இணையும் போது பொதுவான ஆளுமை பண்புகள் இவர்களிடம் தென்பட்டாலும் சிறந்த உறவுகள் உருவாகுவதில்லை. காற்றின் கணிக்க முடியாத தன்மை மற்றும் வெறித்தனமான ஆற்றல் பூமியின் நடைமுறை இயல்புக்கு பொருத்தம் அல்ல. இருப்பினும் ஒருவருக்கொருவர் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் இடையே நிறையா இருக்கும். சரியாக வேலை செய்து செயல்பட்டால் அவர்கள் ஒரு சிறந்த உறவை உருவாக்கலாம். நீங்கள் உங்கள் துணையுடன் டேட்டிங் செய்து புரிந்து கொள்வது நல்லது. இது உங்கள் குடும்ப உறவை சீர்படுத்தும்.

நெருப்பு மற்றும் நிலம்
இரண்டு அடையளயாளங்களுமே எதிரெதிர் தன்மை கொண்டது. எனவே இவர்கள் இருவர் இணைந்தால் குடும்ப உறவு என்பது சவால்கள் நிறைந்ததாக இருக்கும். ஆனால் இவர்கள் நாணயத்தின் இரண்டு பக்கங்களை போன்ற வர்கள். இதனால் வேறு விதமான நன்மைகளும் கிடைக்கும். நெருப்பு அடையாளத்தின் உந்து சக்தி நிலத்தின் புதிய அனுபவங்களை தழுவி ஊக்குவிக்கும்.

காற்று மற்றும் நீர்
இவர்கள் இருவரும் குடும்ப உறவில் இணைந்தால் நிறைய முயற்சிகள் மற்றும் கடின உழைப்புகள் தேவை. ஏனெனில் இவர்கள் இருவரும் வித்மியாசமானவர்கள். இருப்பினும் இந்த வேறுபாடு குடும்பத்தை பொறுத்த வரை சமநிலை காரணியாக செயல்படும். ஒருத்தர் இல்லாத குறையை ஒருத்தர் பூர்த்தி செய்வார். இதனால குடும்பம் சமநிலையுடன் செயல்படும்.

ads

Recommended For You

About the Author: Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *