இந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ்.! புராணங்களை ஆய்வு செய்யும் நாசா.! – Tamil VBC

இந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ்.! புராணங்களை ஆய்வு செய்யும் நாசா.!

அமெரிக்காவின் கலிப்போர்னியா மாகாணத்தில், மனிதனுக்கு அப்பாற்ப்பட்ட சக்தியுடனும், உடல் மொழியுடனும், மனிதர்களோடு மனிதனாக வாழ்வதாக ஹாலிவுட் சினிமாக்களால் வர்ணிக்கப்பட்ட ஏலியன்ஸ், இந்தியாவில் இருந்ததாகச் சொல்கிறது மேலை நாட்டு மீடியாக்கள்.

ஆனால், அவர்கள் ஏலியன்ஸ் என்று கைகாட்டுவது நாம் வணங்கும் கடவுள்களை. அதற்கு ஆதாரமாக அவர்கள் சமர்பிப்பது நமது புராணங்களை. இப்படியொரு தகவல் வெளியாகி நமக்கும் அதிர்ச்சி தரும் விஷியமாக இருக்கின்றது.

இந்து கடவுகள் மட்டும் அல்லாமல் பல்வேறு மத கடவுள்களும் இதற்குள் அடங்கியிருக்க கூடும் என்று ஆச்சரியமூட்டும் விசியமும் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர்களின் கூற்றுப்படி :
இந்து புராணங்களின்படி, கடவுள் என்பவர் மனித ரூபத்திலேயே இருந்ததில்லை. ஆறு முகங்கள், நாலைந்து கைகள், நீல நிற உடல் என மனிதர்களிடம் இருந்து வேறுபட்டே காணப்பட்டனர். அவர்கள் மந்திரங்கள் சொல்லி சாதாரண வில்லை எடுத்துவிட்டால் கூட வானில் மின்னல்கள் எழும்பின.

இன்று நாசா எந்த எரிபொருளும் இல்லாமல் பறக்கும் இயந்திரம் கண்டுப்பிடிக்க, அது விமானங்கள் என்ற பெயரில் இந்து கடவுள்களிடம் அப்போதே இருந்தது. அதைத்தான், ‘ஏலியன்ஸின் பறக்கும்தட்டு’ என்கிறோம்.

அணு ஆயுதம் பயன்படுத்தினார்கள்:
இப்படி, இன்றைய அறிவியலின் மூலம் மனிதன் கண்டுப்பிடித்த சாதனங்கள் பல ஆயிரம் வருடங்கள் முன்பே அவர்கள் பயன்படுத்தியிருக்கின்றனர். அவர்கள் மழையை வர வைத்தார்கள், மலையைக் கையால் தூக்கினார்கள், தூர தேசத்தில் நடப்பவற்றை, இருந்த இடத்திலேயே பார்த்தார்கள். என்பவர்கள் ஒரு படி மேலே போய், அவர்கள் அணு ஆயுதத்தைவிட மேம்பட்ட ஆயுதத்தைப் பயன்படுத்தினார்கள் என்கிறார்கள்.

இந்துக்களின் புராணங்களில் ஆய்வு:
ராமாயணத்தில், ராவணன் வாழ்ந்ததாகச் சொல்லப்படுவது, கடல் மட்டத்தில் இருந்து 600-அடிக்கு மேல் இருக்கும் சிகிரியா மலையில். இதை இலங்கை அரசு சுற்றுலாத் தளமாக அறிவித்துள்ளது. இந்த மலையில் உள்ள ஒவியங்களில் பெண்கள் சிலர் அரை நிர்வாணத்துடன், மேகங்களிடையே பறப்பது போல் உள்ளன. இதை, பத்துத் தலைகொண்ட ராவணன் விண்ணுலகத்துக்கும், பூவுலகத்துக்கும் பிறர் வந்து செல்ல துறைமுகமாக இருக்க நினைத்து எழுப்பியதாகச் சொல்கிறார்கள்.

பறக்கும் விமானம்:
மகாபாரதத்துக்குப் பல யுகங்களுக்கு முன்னால் நடந்த ராமயணத்தில் சீதையைக் கடத்த, ராவணன் பறக்கும் விமானத்தையே பயண்படுத்தியாகப் புராணங்கள் எடுத்துரைக்கிறது. தமிழகத்தில் உள்ள பல கோவில்கள், ‘அரசரின் கனவில் இறைவன் கோயில் எழுப்பச் சொன்னார், அரசர் வைத்த போட்டிகளில் பங்கேற்றார்’ என்பது போன்ற குறிப்புகள் உள்ளன.

தமிழக கோயில்கள்:
பழங்கால அரசருடன் கடவுள்கள் தொடர்பு வைத்தாகவே நம்பப்படுகிறது. அந்த வகையில் தமிழகக் கோயில்கள் கடவுளின் வழிகாட்டுதலின் பெயரிலேயே கட்டப்பட்டுள்ளதாகக் கருதுக்கின்றனர்.

இந்து கடவுள்களை மட்டுமல்லாமல்ல :
இயேசு, புத்தர், டாவின்சி, போப் எனச் சகலரையும் இந்த விஷயத்தில் இழுக்கிறார்கள். இயேசுவை சித்தரிக்கும் பல பழமைவாய்ந்த ஒவியங்களில் பறக்கும் தட்டுக் காட்சியளிக்கிறது. ‘வாடிகன் சிட்டியில் ஏலியன்ஸின் பிணங்கள் உள்ளன, புத்தர் ஆற்றின் மேல் நடந்தது ஏலியன்ஸூடன் வைத்த தொடர்பால்தான், டாவின்சி வரைந்த ஒவியங்கள் நாம் இன்று உபயோகிக்கும் ஆயுதங்களைப் பற்றியுள்ளன’ என்று ஒவ்வொன்றும் இருக்கிறது.

அமெரிக்காவின் நாசா ரகசியமாக ஆராய்ச்சி:
ஆனால் இவர்களை எல்லாம் ஏலியன்ஸுடன் தொடர்பு வைத்துள்ளவர்கள் லிஸ்டில் சேர்த்து, இந்து கடவுள்களை மட்டும் ஏலியன்ஸ் என்கிறார்கள். இப்படிக் கடவுள்களை ஏலியன்ஸாக வரையறுப்பதை இந்தியாவில் பலர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

‘அவர்களிடம் பறக்கும் தட்டு இருந்தும் அவர்கள் ஏன் இந்தியாவைவிட்டு மற்ற நாட்டுக்கு செல்லவில்லை? அவர்கள், இப்போது எங்கு இருக்கிறார்கள்? எங்கிருந்து வந்தார்கள்? மீண்டும் வருவார்களா? வந்தால் எப்போது வருவார்கள்? இப்போது அவர்களிடம் இன்னும் மேம்பட்ட அதி நவீன ஆயுதங்கள் இருக்கக்கூடுமா, அவர்கள் வேறு எதையாவது விட்டு சென்றிருக்கிறார்களா, அவர்களுக்கு என்று ஒரு கிரகம் இருக்கிறதா, அவர்கள் ஏன் நம்முடன் தொடர்பு வைத்துக் கொள்ள ஆசைப்பட்டார்கள்’ இப்படிப் பல கேள்விகளுக்குப் பதில் தெரியாமல் நம்மால் எந்தச் சார்ப்பு நிலைக்கும் வர முடியாது.

இப்போதே இந்துக்களின் புராணங்களான வேதங்களை அமெரிக்காவின் நாசா ரகசியமாக ஆராய்ச்சி செய்வதாகச் சிலர் இணையதளங்களில் குரல் கொடுத்து வருகின்றனர்.

கடல் ஆராய்ச்சியில் அதிசயம்:
‘2001-ல் ‘கல்ப் ஆப் கம்பாட்’ பகுதியில் அகழ்வாராய்ச்சியில் ஈடுப்பட்டபோது கடலுக்குள் ஒரு பெரிய நகரத்தைக் ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்தனர். கண்டு பிடிக்கப்பட்ட அந்த நகரமானது, பெரிய துறைமுகமாகச் செயல்பட்டிருக்க வேண்டும். சிதைந்து கிடக்கும் அந்த நகரத்தின் மீது பல வான் வழி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அங்குச் சிதைக்கப்பட்டிருக்கும் கட்டடங்கள், நம்மைவிட டெக்னாலஜியில் மேம்பட்டவர்களால் கட்டப்பட்டுள்ளது. அந்த டெக்னாலஜியை, மனிதன் கண்டுப்பிடிக்க இன்னும் பல ஆயிரம் வருடங்கள் பிடிக்கும்” என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

உலகப்போரில் தான் மனிதன் வான் வழி தாக்குதலில் ஈடுபட்டான். ஆனால், அதற்குப் பல கோடி வருடங்கள் முன்னரே, இது நடந்தது என்றால் அது ஏலியன் டெக்னாலஜி மூலமே சாத்தியமாகும் என்றும் சொல்கின்றனர்.

ஏலியன் கண்டுபிடிக்க வழிமுறைகள்.!!
ஏலியன் எனும் வேற்றுக் கிரகவாசம் குறித்த உண்மை தகவல்களை அறிய உலகில் பலரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். இது தெரிந்தோ அல்லது பாதுகாப்புக் காரணங்களைக் காட்டியோ உலகின் பல்வேறு நாட்டு அரசுகளும் ஏலியன் குறித்த தகவல்களை மறைத்து வருவதாகப் பல்வேறு சதியாலோசனை கோட்பாட்டாளர்களும் கருதுகின்றனர்.

உலக மக்களில் பலரும் கடவுளைத் தாண்டி ஏலியன்கள் சார்ந்த விடயத்தில் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். இவை குறித்த தேடல்களில் ஏலியன் இருப்பதை நிரூபிக்கும் தெளிவான ஆதாரங்கள் இன்று வரை நம்மிடம் இல்லை என்பதே உண்மை.

ஏலியன் குறித்த சந்தேகம் நம் அனைவருக்கும் இருக்கின்றது என்பதைத் தாண்டி, ஏலியன்களை எங்குத் தேட வேண்டும் என்றும் அதற்கான தொழில்நுட்ப வளர்ச்சிகளும் இன்று நம்மிடம் இருக்கின்றது. இனி வரும் காலங்களில் ஏலியன் சார்ந்த தேடலில் பல்வேறு புரிதல் மற்றும் இவை குறித்த தெளிவான பார்வை அல்லது ஆதாரங்கள் கிடைக்கப் பெறலாம்.

ரேடியோ சிக்னல்
இன்று நம்மிடம் இருக்கும் ரேடியோ தொலைநோக்கிகளைப் பயன்படுத்திப் பூமியை சுற்றி என்னென்ன நடக்கின்றது என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது. இதன் விளைவாக நாம் ஏற்கனவே வாவ் சிக்னல் மற்றும் எல்ஜிஎம் போன்றவை பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பின.

தூரம்
நம்மை விடச் சுமார் 300 கோடி ஒளியாண்டு தூரத்தில் இருந்து கிடைக்கும் சிக்னல்கள் குறித்து இன்று வரை ஏன் ஏற்படுகின்றது என்ற கேள்விக்குத் தெளிவான விளக்கம் இல்லை. பல ஆண்டுக் காலமாகத் தொடர்கின்றது.

விண்வெளி ஆய்வு
பிரபஞ்சத்தை நன்கு அறிந்து கொள்ள விண்வெளி ஆய்வு மிகவும் முக்கியமானதாகும். இதற்கென அமெரிக்காவின் நாசா 1977 ஆம் ஆண்டுச் சூரிய குடும்பத்தை விட்டு வெளியே செல்லும் திறன் கொண்ட வொயேஜர் 1 என்ற விண்ணுளவியை விண்ணில் செலுத்தியது.

நோக்கம்
மனிதன் தயாரித்து அதிகத் தூரம் விண்வெளியில் பயணித்த முதல் விண்ணுளவி என்ற பெருமையை வொயேஜர் 1 பெற்றுள்ளது. இதன் மூலம் வேற்றுகிரகவாசம் கண்டுபிடிக்கப்படலாம் அல்லது வேற்றுகிரகவாசிகள் நம்மைத் தொடர்பு கொள்ளலாம் என நம்பப்படுகின்றது.

பயோசிக்னேச்சர்
பயோசிக்னேச்சர் என்பது விண்வெளியில் மிதக்கும் அல்லது காணப்படும் ஒன்றாகும். இது ஏற்கனவே வாழ்ந்த அல்லது வாழும் வாழ்க்கையை விளக்கும் அறிவியல் ஆதாரம் ஆகும்.

தேடல்
பிரபஞ்சத்தில் பூமியை தவிற மனிதர்கள் வாழத்தகுந்த கிரகங்களைத் தேட அமெரிக்காவின் நாசா 2018 ஆம் ஆண்டிற்குள் விண்வெளியில் விண்கலங்களை ஏவத் திட்டமிட்டுள்ளது.

மாசு
ஆராய்ச்சியாளர்கள் நம் பிரபஞ்சத்தின் வெளியே தேடும் வேற்றுக்கிரக வாசிகளும் நம்மைப் போல் இருக்கலாம், இந்நிலையில் அவர்களும் நம்மைப் போல் கிரகத்தினை மாசுபடுத்தலாம். முன்பு குறிப்பிடப்பட்ட பயோசிக்னேச்சர் முறையைக் கொண்டு வேற்றுக்கிரகத்தில் மாசு இருப்பதைக் கொண்டு அங்கு யாரோ வாழ்ந்து வருகின்றனர் என்பதை மட்டுமாவது முதலில் உறுதி செய்ய முடியும்.

தொழில்நுட்பம்
தற்சமயம் முழு இருளில் இருக்கும் வெளிக் கோள்களில் இருந்து வரும் வெளிச்சத்தைக் கொண்டு அங்கு யாரேனும் வாழ்வது குறித்த முடிவு செய்யலாம். ஆனால் இதனைக் கண்டறிய நம்மிடம் இன்று தொழில்நுட்ப வசதி இல்லை.

மின்சக்தி
ஏலியன்களும் நம்மை போன்றே நட்சத்திரங்களில் இருந்து மின்சாரம் எடுக்கலாம். கர்தஷேவ் ஸ்கேல் முறையை பயன்படுத்தி அவர்கள் எந்தளவு மேம்பட்டிருக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ள முடியும். இம்முறையானது அவர்கள் எதை கொண்டு மின்சக்தியை உற்பத்தி செய்கின்றனர் என்பதை வைத்து கூறுவதாகும்.

கண்டுபிடிப்பு
வேற்றுகிரக வாசிகள் தங்களது விண்கலங்களை அதாவது அடையாளம் தெரியாத பறக்கும் பொருளினை காமாக்கதிர்களை கொண்டு சக்தியூட்டலாம். இவைகளை வைத்து ஏலியன் நடமாட்டம் அல்லது குறைந்த பட்சம் அவர்கள் இருப்பதையாவது உறுதி செய்ய முடியும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ads

Recommended For You

About the Author: Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *