2050-ல இந்தியால 150 கோடி பேர் இருப்பாய்ங்க.. அத்தன பேருக்கும் தண்ணி இருக்காய்யா..? – Tamil VBC

2050-ல இந்தியால 150 கோடி பேர் இருப்பாய்ங்க.. அத்தன பேருக்கும் தண்ணி இருக்காய்யா..?

டெல்லி : இந்தியா மக்கள் தொகையில் சீனாவிற்கு அடுத்த இடத்தில் இருந்தாலும், இனி வரும் காலங்களில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்திற்கு வந்து விடும் என்று கருதப்பட்டு வருகிறது. அதை நிரூபிக்கும் விதமாகவே தற்போது பல ஆய்வறிக்கைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

குறிப்பாக இந்த ஆய்வின் படி, இந்தியாவில் அடுத்த எட்டு ஆண்டுகளில் சீனாவை விட இந்தியாவின் மக்கள் தொகை அதிகரிக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

இந்த நிலையில் 2050ல் இந்தியாவில் மக்கள் தொகை சுமார் 27 கோடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாம். அவர்களுக்கான தண்ணீர் (Water) இருக்கிறதா..? என்கிற கேள்விக்கு பதில் இல்லை.

இந்தியா மக்கள் தொகை அதிகரிக்கலாம்
ஆமாங்க.. இந்தியாவில் 2050க்குள் மக்கள் தொகை 273 பில்லியன் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதுவே நைஜீரியாவில் 200 பில்லியானாக அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறதாம். இது உலக அளவில் மக்கள் தொகையில் 23 சதவிகிதம் என்றும் ஐ.நா கூறியுள்ளது.

சீனாவில் மக்கள் தொகை குறையலாம்
அதே நேரம் சீனாவில் மக்கள் தொகை குறையலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2050ம் ஆண்டுக்கு இடையே 2.2 சதவிகிதம் குறைந்து 3.14 கோடி மக்கள் தொகை குறையலாம் எனவும் கூறியுள்ளது இந்த ஆய்வு.

அமெரிக்கா மூன்றாவது இடம்
அதோடு சீனாவில் 2019ல் 1.43 பில்லியன் மக்கள் இருக்கின்றனராம். இதுவே இந்தியாவில் 1.37 பில்லியன் மக்கள் இருக்கின்றனராம். ஆமாங்க.. நீண்ட காலாமாகவே இந்த நாடுகளும் தான் உலகின் மிகப்பெரிய மக்கள் தொகையாக இருக்கின்றனவாம். குறிப்பாக உலக மக்கள் தொகையில் சீனா 19 சதவிகிதமும், இந்தியா 18 சதவிகிதமும் பிடித்துள்ளனவாம். இதனையடுத்து தான் அமெரிக்கா உள்ளதாம்.

200 கோடி மக்கள் தொகை அதிகரிக்கலாம்
இந்த நிலையில் ஐ.நா உலக மக்கள் தொகை கண்ணோட்டம் என்ற பெயரில் ஒர் ஆய்வறிக்கையை, ஐ.நாவின் பொருளாதாரம் சமூக விவகாரத்துறை வெளியிட்டுள்ளது. இதன் படி அடுத்த 30 ஆண்டுகளில் உலக மக்கள் தொகை 200 கோடி அதிகரிக்குமாம். தற்போது உலகின் மக்கள் தொகை 770 கோடியாக உள்ள நிலையில், இது 2050ல் 970 கோடியாக அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறதாம்.

மொத்த மக்கள் தொகையில் 50% பங்களிப்பு
அதிலும் இந்த மொத்த மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தை 9 நாடுகள் ஆக்கிரமிகும் என்றும் கருதப்படுகிறது. குறிப்பாக இந்தியா, நைஜீரிய, பாகிஸ்தான், காங்கோ, எத்தியோப்பியா, டான்சானியா, இந்தோனோஷியா, எகிப்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

மக்கள் தொகையை குறைக்க நடவடிக்கை
அதேசமயம் மக்களின் ஆயுட்காலமும் அதிகரிக்கும் என்றும், மக்கள் தொகை அதிகரிப்பை குறைக்கும் நாடுகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு 2050ல் உலகில் ஆறு பேருக்கு ஒருவர் 65 வயதுக்கும் மேல் (16% பேர்) இருப்பார்கள் என்றும், அதே போல 80 வயதுக்கும் மேற்பட்டோர் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படி சமாளிக்க போகிறதோ இந்தியா?
ஏற்கனவே தற்போது இருக்கும் மக்கள் தொகைக்கே தண்ணீர் பிரச்சனை நிலவி வருகிறது. இந்த நிலையில் தற்போது இருக்கும் 120 கோடி பேருக்கே இங்கு தண்ணி இல்ல. இதுல இன்னும் 27 கோடி பேர் அதிகரிச்சா? தண்ணிக்கு என்ன பண்ணும்?

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *