காய்லான் கடை பொருட்களை வைத்து விமானம் உருவாக்கிய மாணவர்கள்.. குவியும் பாராட்டுக்கள்! – Tamil VBC

காய்லான் கடை பொருட்களை வைத்து விமானம் உருவாக்கிய மாணவர்கள்.. குவியும் பாராட்டுக்கள்!

கேப்டவுண்: தென்னாப்பிரிக்காவில் பழைய உதிரி பாகங்களைக் கொண்டு புதிய விமானம் ஒன்றை உருவாக்கி அசத்தியுள்ளனர் உயர்கல்வி மாணவர்கள் சிலர்.

விமானம் என்பது இன்றும் நம்மில் பலருக்கு ஆச்சர்யத்தில் அண்ணாந்து பார்க்கும் ஒரு விசயம் தான். விமானப் பயணம் என்பது பலருக்கும் இன்னும் எட்டாக்கனியாகத் தான் இருக்கிறது. இப்படி அதிசயமாக பார்க்கும் விமானத்தை அசால்ட்டாக பழைய பொருட்களைக் கொண்டு செய்து பாராட்டுக்களைப் பெற்றுள்ளனர் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 20 மாணவர்கள்.

உயர்கல்வி மாணவர்களான இவர்கள், விமானத்தின் உதிரி பாகங்களைக் கொண்டு சிறிய ரக விமானம் ஒன்றை வீட்டிலேயே தயாரித்து உள்ளனர். ஆயிரக்கணக்கான உதிரி பாகங்களை கொண்டு இந்த விமானம் உருவாக்கப்பட்டுள்ளது. 4 பேர் அமரக் கூடிய வகையிலான சிறிய விமானமாக இது உள்ளது.

மூன்று வார உழைப்பில் இந்த விமானத்தை அவர்கள் கட்டமைத்துள்ளனர். இந்த விமானமானது தென் ஆப்பிரிக்காவின் தலைநகர் கேப்டவுனில் இருந்து எகிப்தின் கெய்ரோ நகரம் வரையிலான தன் முதல் பயணத்தை அண்மையில் தொடங்கியது. இந்த விமானத்தை 17 வயதான மேகன் வெர்னர் என்கிற பெண் இயக்கினார்.

வெர்னர் என்பவரின் தலைமையில் இந்த விமானத்தை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். சுமார் ஆயிரம் மாணவர்களில் இருந்து இந்தக் குழுவை வெர்னர் தேர்ந்தெடுத்துள்ளார். இந்த விமானத்தை இயக்குவதற்காகவே ஆறு மாணவர்கள் விமான ஓட்டிக்கான பயிற்சியைப் பெற்றுள்ளனர். தாங்கள் உருவாக்கிய விமானம் பாராட்டுகளைப் பெற்று வருவதால் அதிக மகிழ்ச்சியில் உள்ளது இந்த மாணவர் குழு.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *