தி.மலை அருகே ரேஷன் கடையில் நெரிசலில் சிக்கி மூதாட்டி உயிரிழப்பு! – Tamil VBC

தி.மலை அருகே ரேஷன் கடையில் நெரிசலில் சிக்கி மூதாட்டி உயிரிழப்பு!

திருவண்ணாமலை அருகே ரேஷன் கடையில் அரிசி வாங்கச் சென்ற மூதாட்டி, கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவண்ணாமலை அடுத்த இனாம்காரியந்தல் கிராமம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பெரமண்ட ஆசாரி மனைவி தனபாக்கியம் (68). அவர் நேற்று காலை அதே கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்க சென்றார். அப்போது, கடை முன்பு கூட்டம் அதிகமாக இருந்ததால் தனபாக்கியம் வரிசையில் காத்திருந்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதில் கூட்ட நெரிசலில் சிக்கி தனபாக்கியம் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, “இனாம்காரியந்தல் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் 908 குடும்ப அட்டைகள் உள்ளன. வாரத்துக்கு ஓரிரு நாட்கள் மட்டுமே கடை திறக்கப்படுகிறது. மேலும், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் பொருள் கிடைப்பது இல்லை. மாதத்தில் 2 வாரங்களுக்குப் பிறகு செல்பவர்களுக்கு பொருட்கள் இல்லை என்று கூறி விற்பனையாளர் திருப்பி அனுப்புகிறார். இதனால், ரேஷன் கடை முன்பு கூட்ட நெரிசல் ஏற்பட்டு மூதாட்டி தனபாக்கியம் உயிரிழந்துள்ளார். இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க, கூடுதலாக ரேஷன் கடையை திறந்து, அனைவருக்கும் தடை இல்லாமல் பொருட்களை வழங்க வேண்டும்” என்றனர்.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *