வரலாற்றில் முதல்முறை.. வெறும் 6 சிக்ஸில் மே. இந்தியா தீவுகளை வீழ்த்திய நாகினி.. எப்படி நடந்தது! – Tamil VBC

வரலாற்றில் முதல்முறை.. வெறும் 6 சிக்ஸில் மே. இந்தியா தீவுகளை வீழ்த்திய நாகினி.. எப்படி நடந்தது!

லண்டன்: நேற்று மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம் அணி அதிரடியாக வெற்றிபெற்று இருக்கிறது. உலகக் கோப்பை வரலாற்றில் இப்படி ஒரு வெற்றியை பார்த்ததே இல்லை என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

நேற்று உலகக் கோப்பை போட்டியில் நடந்த சம்பவம் மிகப்பெரிய அதிசயம் என்றுதான் கூற வேண்டும். போட்டிக்கு முன்பே ”மேற்கு இந்திய தீவுகளின் ஷாட் பந்துகளை நாங்கள் சமாளிப்போம்” என்று கூறிவிட்டுதான் வங்கதேசம் அணி களமிறங்கியது.

ஆனால் அவர்கள் பந்துகளை சமாளிக்க மட்டும் செய்யவில்லை.. நேற்று வங்கதேச வீரர்கள் களத்தில் செய்தது எல்லாம் வில்லத்தனமான ஹீரோயிசம் என்றுதான் கூற வேண்டும்.

மோசமாக திணறல்
நேற்று வங்கதேசம் மற்றும் மேற்கு இந்திய தீவுகள் போட்டி டவுண்டன் மைதானத்தில் நடைபெற்றது. டவுண்டன் மைதானம் பேட்டிங் செய்வதற்கு சாதகமான மைதானம் ஆகும். ஆனால் தொடக்கத்தில் இருந்தே வங்கதேச பவுலர்கள்தான் போட்டியில் ஆதிக்கம் செலுத்தினார்கள். களமிறங்கிய விண்டீஸ் வீரர்களை எல்லாம் தங்கள் யார்க்கர் பந்துகளாக திணற அடித்தார்கள்.

வாவ்
தொடக்கத்திலேயே விண்டீஸ் அணிக்கு பெரிய அதிர்ச்சி காத்து இருந்தது.அதிரடி வீரர் கெயில் சையபுதீன் பந்தில் களமிறங்கிய உடன் டக் அவுட்டாகி வெளியேறினார். அதன்பின் விண்டீஸ் அணி திணறும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் லீவிசும், ஹோப்பும் அணிக்கு ஹோப் கொடுத்தார்கள். லீவிஸ் 70 ரன்கள் மற்றும் ஹோப் 96 ரன்கள் எடுத்தனர்.

கடைசி நேரம்
கடைசி நேரத்தில் ஹெட்மயரும், ஹோல்டரும் 50 மற்றும் 33 ரன்கள் என்று அதிரடி காட்டி அணிக்கு பலம் சேர்த்தார்கள். இதனால் அந்த அணி 50 ஓவரில் 321 ரன்கள் எடுத்தது. இவ்வளவு பெரிய ஸ்கோரை எப்படி வங்கதேசம் எடுக்க போகிறது என்றுதான் எல்லோரும் நினைத்துக் கொண்டு இருந்தார். ஆனால் நடந்தது வேறு கதை. ஆம் வங்கதேசம் வைத்திருந்த பிளான் வேறு.

சூப்பர்
சரியான பார்மில் இல்லாத வங்கதேச வீரர் தமீம் இஃபால் இந்த போட்டியில் பார்மிற்கு திரும்பி 53 பந்தில் 6 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் எடுத்தார். அவர் அவுட்டான பின் சவுமியா சர்காரும் 23 ரன்களுக்கு அவுட்டானார். அதன்பின் வரிசையாக வங்கதேச விக்கெட்டுகளை வீழ்த்தி விடலாம் என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் நாகினிகளின் நாகினியான பெரிய நாகினி ஷாகிப் அல் ஹசன் களமிறங்கினார்.

செம பாஸ்
தொடக்கத்தில் இருந்து வந்த பந்துகளை எல்லாம் பவுண்டரிக்கு பறக்க விட்டார். சிக்ஸ் அடித்து அவுட்டாக கூடாது என்பதால், பவுண்டரிகளும், 3 ரன்களும் எடுத்து ரன் ரேட்டை உயர்த்திக் கொண்டே சென்றார். இன்னொரு பக்கம் ரஹீம் 1 ரன்களில் அவுட்டாக லிடோன் தாஸ் களமிறங்கி வெளுத்து வாங்க துவங்கினார்.

எப்படி வெற்றி
ஹசன் வெறும் 99 பந்துகளில் ஹசன் 124 ரன்கள் எடுத்தார். இதில் 16 பவுண்டரி அடக்கம். அதேபோல் லிடோன் 69 பந்தில் 94 ரன்கள் எடுத்தார். இதில் 8 பவுண்டரி 4 சிக்ஸர் அடக்கம். இந்த அதிரடியால் வெறும் 41.3 ஓவர்களில் வங்கதேசம் 322 ரன்களை எடுத்தது. வங்கதேசம் அணி நேற்று 6 சிக்ஸர் மட்டுமே அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

செம வெற்றி
நேற்று போட்டியில் வங்கதேச அணிக்கு மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட வாய்ப்பு இருந்தது. இதனால் டிஎல்எஸ் முறையில் தோல்வி அடைய கூடாது என்பதால் தொடக்கத்திலேயே அதிக ரன்களை குவித்து வெற்றியை தனதாக்கி இருக்கிறது வங்கதேசம்.

ads

Recommended For You

About the Author: Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *