தோனி எப்படி தவற விட்டார்.. முக்கியமான நேரத்தில் சொதப்பிட்டாரே.. முதல்முறை விமர்சனத்தில் சிக்கினார்! – Tamil VBC

தோனி எப்படி தவற விட்டார்.. முக்கியமான நேரத்தில் சொதப்பிட்டாரே.. முதல்முறை விமர்சனத்தில் சிக்கினார்!

லண்டன்: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் முன்னணி வீரர் தோனி செய்த தவறு ஒன்று பெரிய சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது.

உலகக் கோப்பை தொடரின் மிக முக்கியமான லீக் ஆட்டமான இந்தியா பாகிஸ்தான் போட்டி நேற்று மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்றது. மூன்று முறை இந்த போட்டியில் மழை குறுக்கிட்டது.

இதனால் பாகிஸ்தான் இன்னிங்ஸ் மட்டும் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த போட்டியில் இந்திய அணி அதிரடியாக ஆடி வென்றது.

எப்படி வெற்றி
நேற்று டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவெடுத்தது. இதில் மொத்தம் 50 ஓவரில் இந்திய அணி 5 விக்கெட்டிற்கு 336 ரன்கள் எடுத்துள்ளது. 40 ஓவரில் 212 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் டக் வொர்த் லீவிஸ் முறையில் 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

கொடுக்கவில்லை
ஆனால் நடுவர் இதற்கு அவுட் கொடுக்கவில்லை. இதை சரியாக கவனித்த கோலி டிஆர்எஸ் எடுக்கலாமா என்று தோனியிடம் ஆலோசனை கேட்டார். ஆனால் தோனி பந்து பேட்டில்தான் பட்டது என்று கூறினார். எப்போதும் மிக சரியாக கணிக்கும் தோனியின் பேச்சை அப்படியே சொன்னபடி கேட்பதுதான் கோலியின் வழக்கம். இதனால் அவர் தோனியின் பேச்சை கேட்டு எல்பிடபிள்யூ கேட்கவில்லை.

என்ன நடந்தது தெரியுமா?
ஆனால் ரீப்ளேயில்தான் உண்மை தெரிந்தது. அப்போதுதான் பந்து பேட்டில் படவில்லை, பேடில்தான் பட்டது என்பது தெரிந்தது. மேலும் சரியாக லைனில் வந்து நடு ஸ்டம்பை நோக்கி பந்து சென்றுள்ளது. அதனால் இது விக்கெட்தான் என்பது தெளிவாக தெரிந்தது. ஆனால் தோனி இது தெரியாமல் கோலியிடம் விக்கெட் இல்லை என்று கூறிவிட்டார். இதனால் கோலி டிஆர்எஸ் கேட்கவில்லை. இதனால் பாபர் விக்கெட்டை அப்போது வீழ்த்த முடியவில்லை.

தோனி இப்படி
பொதுவாக தோனி டிஆர்எஸ் எடுப்பதில் வல்லவர். மிக சரியான நேரத்தில் டிஆர்எஸ் கேட்டு, இவர் விக்கெட்டுகளை எடுத்து இருக்கிறார். ஆனால் கடந்த போட்டியில் இவர் எப்படி தவறு செய்தார் என்று தெரியவில்லை. முதல்முறை டிஆர்எஸில் தோற்று தோனி விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளார்.. இருக்கட்டும் இருக்கட்டும் துண்டு ஒருமுறைதான் தவறும்!

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *