நோ தாலி.. நோ மேளம்.. பத்தே விநாடியில் சிம்பிளாக முடிந்த பிக் பாஸ் பிரபலத்தின் திருமணம்! – Tamil VBC

நோ தாலி.. நோ மேளம்.. பத்தே விநாடியில் சிம்பிளாக முடிந்த பிக் பாஸ் பிரபலத்தின் திருமணம்!

சென்னை: பிக் பாஸ் சீசன் 2 மூலம் பிரபலமான வைஷ்ணவிக்கு அவரது காதலர் அஞ்சனுடன் மிக எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

பிக் பாஸ் இரண்டாவது சீசன் மூலம் தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமானவர் வைஷ்ணவி. எழுத்தாளர் சாவியின் பேத்தியான இவர், ஆர்ஜேவாக பணி புரிந்து வந்தார்.

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக இருந்தபோது மற்றவர்களைப் பற்றி அதிகம் புறணி பேசியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. முதல் சீசனில் ஜூலி போன்று, இரண்டாவது சீசனில் இவரை ஜூலி என்று மக்களும், சக போட்டியாளர்களும் குறிப்பிட்டனர்.

தோழி:
மக்களிடையே போதுமான ஆதரவு கிடைக்காததால், நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார் வைஷ்ணவி. பிக் பாஸ் வீட்டில் இருந்த போது பாடகி ரம்யா தான் இவரது தோழியாக இருந்தார். நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பிறகும் இருவரும் நல்ல தோழிகளாக இருந்து வருகின்றனர்.

காதலர்:
அஞ்சன் ரவி எனும் விமானியை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தார் வைஷ்ணவி. இதனை தனது சமூகவலைதளப் பக்கம் வாயிலாக அவரே உறுதி செய்திருந்தார். அவ்வப்போது தனது காதலருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார்.

எளிமையாக திருமணம்:
இந்நிலையில், தனது காதலரை எளிமையாக திருமணம் செய்து ஆச்சர்யப் படுத்தியுள்ளார் வைஷ்ணவி. சென்னை பெசண்ட் நகரில் உள்ள அஷ்டலட்சுமி கோவிலில் ஆடம்பரம் இல்லாமல் இத்திருமணம் நடைபெற்றுள்ளது.


வித்தியாசமான திருமணம்:
அதிக தங்க நகைகள் அணியாமல், தாலி கட்டாமல், மோதிமரம் மாற்றாமல் வித்தியாசமாக நடந்து முடிந்துள்ளது இவரது திருமணம். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் 10 விநாடிக்கும் குறைவான நேரத்தில் மாலை மாற்றி இருவரும் திருமணம் செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

புகைப்படங்கள்:
அதில் நீல நிற சேலையில் வித்தியாசமான ஹேர்ஸ்டைலில் காணப்படுகிறார் வைஷ்ணவி. அவரது காதலரும் வேட்டி சட்டையில் உள்ளார். திருமணத்தின் போது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் வைஷ்ணவி.

விலங்குகள் நலன்:
திருமணத்தை இவ்வளவு எளிமையாக வைஷ்ணவி நடத்தியதற்கு பின்னணியில் ஒரு நல்ல விசயம் உள்ளது. தங்களது திருமணத்துக்காக திட்டமிட்டிருந்த பணத்தை விலங்குகள் நலனிற்காக பயன்படுத்தப்போவதாக அவர் தெரிவித்துள்ளார். கூடவே, ‘காதலை நிரூபிக்க ஆடம்பரம் தேவையில்லை’ எனவும் அவர் கூறியுள்ளார்.

சாக்லேட் பார்ட்டி:
திருமணத்தை எளிமையாக நடத்திய வைஷ்ணவி, தனது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ஒரு பார்ட்டியும் வைத்துள்ளார். அதில் கேக் வெட்டி, திருமணத்திற்கு வந்தவர்களுக்கு சாக்லேட் வழங்கி தனது மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *