நேர்கொண்ட பார்வை குறித்து ட்வீட் செய்த விஜய் 63 தயாரிப்பாளர்.! கடுப்பான ரசிகர்கள்.! – Tamil VBC

நேர்கொண்ட பார்வை குறித்து ட்வீட் செய்த விஜய் 63 தயாரிப்பாளர்.! கடுப்பான ரசிகர்கள்.!

இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தனது 63 வது படத்தில் நடித்து வருகிறார். பெண்கள் கால்பந்து ஆட்டத்தை மையமாக எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தினை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் தயரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி சமீபத்தில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை ‘ படத்தின் ட்ரைலர் குறித்து ட்வீட் செய்துள்ளார்.

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ட்ரைலர் நேற்று (ஜூன் 12 )மாலை 6 மணிக்கு வெளியாகி இருந்தது. ரசிகர்கள் அவளுடன் எதிர் பார்த்த இந்த படத்தின் ட்ரைலர் வெளியான சில மணி நிமிடங்களில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

மேலும் #Nerkondapaarvaitrailer என்ற ஹேஷ் டேக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்து வந்தனர். இந்த ட்ரைலர் வெளியான வெறும் 20 நிமிடத்தில் 467,299 views கடந்து 159K லைக்ஸ் பெற்றுள்ளது. இதுவரை இந்த ட்ரைலரை 5,353,657 பேர் பார்த்துள்ளனர். மேலும், இந்த ட்ரைலருக்கு 633k லைக்குகளும் வந்துள்ளது.

இந்த டிரைலரைப் பார்த்து சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதேபோல் தளபதி 63 படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி நேர்கொண்ட பார்வை டிரைலர் குறித்து h வினோத் மற்றும் படக்குழு அனைவரையும் பாராட்டியுள்ளார்.

இந்த டீவீட்டை கண்டு அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தலும் விஜய் ரசிகர்கள் சற்று கடுப்பாகி உள்ளனர். அதற்கு காரணமே விஜய் 63 படத்திற்கு பின்னர் தொடங்கப்பட்ட ‘நேர்கொண்ட பார்வை ‘ அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகின. ஆனால், விஜய் 63 குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாமல் இருப்பதால் விஜய் ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.

Thanks:Behind Talkies

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *