முகநூல் நேரலையில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற பெண்… பொள்ளாச்சி போல் காரைக்குடியிலும் பயங்கரம்? – Tamil VBC

முகநூல் நேரலையில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற பெண்… பொள்ளாச்சி போல் காரைக்குடியிலும் பயங்கரம்?

இளம் பெண் ஒருவர் முகநூல் நேரலையில் தான் வேலை செய்யும் செல்போன் கடையில் சக பெண் பணியாளர் ஒருவரும், மற்ற ஆண் பணியாளர்களும் சேர்ந்து தன் வாழ்க்கையையே நிர்மூலமாக்கி விட்டதாக அழுதுகொண்டே விஷம் குடிக்கும் வீடீயோ வேகமாக பரவி வருகிறது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் கார்த்திகா. காரைக்குடியில் உள்ள செல்போன் விற்பனையகம் ஒன்றில் பணி செய்து வந்தார். இவர் தனது முகநூல் நேரலையில் வீடீயோ ஒன்றை போட்டார். அதில் தபி, தேம்பி அழுதுகொண்டே பேசும் அவர்…அதில் கூறுவது குறித்து தெரிந்துகொள்ள மேலே படியுங்கள்…

என் பெயர் கார்த்திகா. நான் காரைக்குடியில் ஒரு செல்போன் கடையில் வேலை செய்கிறேன். என்னுடன் இங்கு அமுதா, சபரி, வைரவன், செபஷ்டின் ஆகியோர் வேலை செய்கின்றனர்.

இதில் வேலை செய்யும் ஆண் ஒருவர் என்னிடம் உன் விலை என்ன ஆயிரமா? இரண்டாயிரமா? என ஜாடைமாடையாக பேசுகிறார். மேலும் இங்கு வேலை செய்யும் அமுதா, என்னிடம் நீ அவர்களுக்கு அட்ஜஷ் செய்து போனால் நன்றாக வாழலாம் என்றும் பேசுகிறார்.

இதற்கு நான் உடன்படாததால் என் கணவருக்கு. போன் செய்து நான் பல ஆண்கள் உடன் பேசிக் கொண்டே இருப்பதாக பொய் சொல்லி உள்ளார். இதை என் கணவரும் நம்பிவிட குடும்ப வாழ்க்கையிலும் சிக்கல் ஏற்பட்டு விட்டது.

என்னைப் போல் நிலை இன்னொரு பெண்ணுக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்று தான் வீடியோ போடுகிரேன். நான் இதனால் மனம் உடைந்து விஷம் குடிக்கிரேன். என பக்கத்தில் இருப்பதை எடுத்து மடக்..மடக்கென குடிக்கிரார்.

ஆனால் அவர் குடித்தது உண்மையான விஷம் தானா? இது தொடர்பாக போலீசார் ஏதும் வழக்குப்பதிவு செய்து இருக்கிறதா என்ற விபரம் தெரியவில்லை.

செல்போன் கடை சமாச்சாரம் என்பதால் பொள்ளாச்சி சம்பவம் போல் ஏதும் மர்மங்கள் வெளியாகுமா என்பதும் தெரியவில்லை.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *