உங்க குலதெய்வத்தை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வரணுமா? இந்த 6 பொருள வாசல்ல கட்டுங்க… – Tamil VBC

உங்க குலதெய்வத்தை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வரணுமா? இந்த 6 பொருள வாசல்ல கட்டுங்க…

நாம் குலதெய்வத்தை வழிபடத் தவறி விட்டோம். நம்மடைய வீட்டுக்குள் நம்முடைய குலதெய்வம் வாசம் செய்யவில்லை என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்று பாருங்கள்.

நம்முடைய குடும்பத்தில் எதற்கெடுத்தாலும் நிறைய தொல்லைகள், தொடர்ந்த கஷ்டங்கள், உடல் நலக் கோளாறுகள், வறுமை, பிரச்சினைகள், எதற்கெடுத்தாலும் தொடர்ந்து தடைகள் ஆகியவை உண்டானால் நமக்கு குல தெய்வ அருள் இல்லாமல் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

என்ன குலதெய்வம்?
நம்மில் நிறைய பேருக்கு குலதெய்வம் எது என்றே தெரியாதே. சிலருக்கு தெரிந்திருக்கும். அதனால் குலதெய்வம் எது என்று தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் இருப்பார்கள். தெரிந்தவர்கள் குறைந்தது வருடத்திற்கு ஒருமுறையாவது குலதெய்வ கோவிலுக்குச் சென்று வழிபடுவது அவசியம்.

குலதெய்வ பரிகாரம்
குல தெய்வத்துக்கு பரிகாரம் என்று சொன்னதும் உடலை வருத்திக் கொள்வது, அதைச் செய்ய வேண்டும், இதைச் செய்ய வேண்டும் என்று பயமுறுத்துவார்கள். அப்படி எல்லாம் தேவையில்லை. மிக எளிதாக செலவே இல்லாமல் உண்மையான நம்பிக்கை மட்டும் இருந்தால் போதும். ஒரு சின்ன பரிகாரம் செய்வதன் மூலம் உங்களுடைய குலதெய்வத்தை உங்களுடைய வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வரலாம்.

தேவையான பொருள்கள்
சதுர வடிவ சிவப்பு நிற புது துணி – 1

விரலி மஞ்சள் – 1 துண்டு

சாம்பிராணி – (கட்டி, பவுடர்) ஏதாவது ஒன்று.

கரித்துண்டு – 1

சந்தனம் – சிறிது

குங்குமம் – சிறிது

திருநீறு – சிறிது

கருப்பு நிற நூல் – சிறிது

செய்முறை
முதலில் சதுர வடிவ சிவப்பு நிறத் துணியின் நடுவில் மஞ்சள், சாம்பிராணி, கரித்துண்டு ஆகியவற்றை வைத்துக் கொள்ளுங்கள்.அதன் மேல் சிட்டிகை அளவுக்கு குங்குமம், சந்தனம், திருநீறு ஆகியவற்றை போட்டுக் கொள்ளுங்கள்.பின்பு துணியின் நான்கு மூலைகளையும் ஒன்றாகப் பிடித்து, உருண்டையான அந்த பொருள்கள் உள்ள துணியை கருப்பு நிற நூலால் நன்கு இறுக்கமாகக் கட்டிக் கொள்ளுங்கள்.அவ்வளவு தான். உங்களுடைய பரிகாரப் பொருள்கள் இப்போது ரெடி.

எங்கே கட்ட வேண்டும்?
இப்படி தயார் செய்து வைத்திருக்கும் மூட்டையின் வீட்டின் நிலைப்படிக்கு மேலே, வீட்டின் வெளியே வேண்டாம். நிலைப்படியின் உட்புறத்தில் மேலே உள்ள சுவரில் சிறிதாக ஒரு ஆணி அடித்துக் கொள்ளுங்கள். அதில் இந்த துணி மூட்டையைத் தொங்க விடுங்கள்.

மாற்றம் உறுதி
இப்படி மாட்டி வைத்து ஒரு வாரத்துக்கு உள்ளாகவே நீங்கள் உங்கள் வீட்டில் உங்களுடைய குலதெய்வம் குடி கொண்டிருப்பதை உங்களால் உணர்ந்து கொள்ள முடியும். தொழிலில் லாபம் ஏற்படும். வீட்டில் இருந்த பிரச்சினை தீரும். உங்கள் குலதெய்வம் உங்கள் வீட்டில் வாசம் செய்வதை ஏதாவது ஒரு வகையில் உங்களால் உண்ர்ந்து கொள்ள முடியும்.

இதை அடிக்கடி மாற்ற வேண்டிய அவசியம் ஏதும் கிடையாது. வருடக்கணக்கில் கூட அப்படியே வைத்திருக்கலாம். ஏதுாவது விசேஷ நாட்களில் புதியது மாற்றலாம் என்று நினைத்தால், அப்போது இதேபோல் மீண்டும் செய்து மாட்டிக் கொள்ளுங்கள்.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *