இப்படி ஆகி போச்சே..!! அவசரமாக நாடு திரும்பிய நட்சத்திர வீரர்..!! உலக கோப்பையில் என்ன நடக்குது? – Tamil VBC

இப்படி ஆகி போச்சே..!! அவசரமாக நாடு திரும்பிய நட்சத்திர வீரர்..!! உலக கோப்பையில் என்ன நடக்குது?

லண்டன்: இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவின் மாமியார் காலமானதால் அவர் அவசரமாக நாடு திரும்பியுள்ளார்.

உலகக்கோப்பை தொடரில் இலங்கை விளையாடிய 4 போட்டிகளில் ஒன்றில் தான் வெற்றி பெற்றுள்ளது. செவ்வாய்கிழமை நடைபெறுவதாக இருந்த வங்கதேசத்துக்கு எதிரான முக்கியமான போட்டி, மழையால் கைவிடப்பட்டது. இது இலங்கைக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான நுவான் பிரதீப், காயம் காரணமாக விலகியிருப்பது கூடுதல் பின்னடைவு. காரணம்… இலங்கை தான் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பிரதீப் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றியவர்.

இந்நிலையில் இலங்கை அணியின் அனுபவ வீரர் மலிங்காவின் மாமியார் கந்தி பெரா காலமானதால், அவர் உடனடியாக நாடு திரும்பி இருக்கிறார். அவரது இறுதிச் சடங்குகள் நாளை நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால், நடைபெற உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மற்றொரு முக்கிய போட்டியில் மலிங்கா பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது. அவர் பங்கேற்பாரா, இல்லையா என்பது குறித்து எந்த அறிவிப்பையும் இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் வெளியிட வில்லை.

தற்போது புள்ளிகள் பட்டியலில் 5வது இடத்தில் இருக்கிறது இலங்கை. அரையிறுதிக்கு தகுதி பெற… அடுத்து வரக்கூடிய ஆட்டங்களில் வெற்றி என்பது அந்த அணிக்கு அவசியமாகிறது. இந்த சூழ்நிலையில், மலிங்காவும் தாய்நாடு திரும்பி உள்ளதால் இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் கவலை அடைந்துள்ளது.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *