ஆளே மாறிப் போன அஜித்: வைரல் புகைப்படம்..! – Tamil VBC

ஆளே மாறிப் போன அஜித்: வைரல் புகைப்படம்..!

சென்னை: அஜித்தின் புது லுக் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியாக உள்ளது. நேர்கொண்ட பார்வை பிங்க் இந்தி படத்தின் ரீமேக் தான் என்றாலும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப கதையில் சில மாற்றம் செய்துள்ளார் வினோத். இந்த படத்தை அடுத்து மீண்டும் வினோத் இயக்கத்தில் நடிக்கிறார் அஜித்.

அந்த படத்தையும் நேர்கொண்ட பார்வையை தயாரித்த மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரே தயாரிக்கிறார்.

அஜித்
வினோத், அஜித் மீண்டும் சேர்ந்து பணியாற்ற உள்ள படம் ரீமேக் கிடையாது. வினோத்தின் சொந்த கதையாகும். அந்த படத்திற்காக அஜித் தனது உடல் எடையை குறைத்துக் கொண்டிருக்கிறார். ஜிம்முக்கு சென்று ஒர்க்அவுட் செய்து கும்மென்று ஆகிக் கொண்டிருக்கிறார். பார்த்து தல, ஓவரா ஒர்க்அவுட் செய்ய வேண்டாம் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வைரல் புகைப்படம்
அஜித் ஜிம்முக்கு மட்டும் செல்லவில்லை தனது தாடி, மீசையை ஷேவ் செய்து ஹேர்ஸ்டைலையும் மாற்றியுள்ளார். அஜித் கிளீன் ஷேவ் செய்த பிறகு எடுத்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. வெள்ளைத்தாடி, மீசையுடன் வலம் வந்த அஜித் இப்படி கிளீன் ஷேவ் செய்துள்ளதை பார்த்து ரசிகர்கள் அசந்தே போய்விட்டனர்.

மகிழ்ச்சி
அஜித்தின் புதிய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இப்போ தான் தலயை பார்க்க பழைய தல மாதிரி உள்ளார் என்கிறார்கள். அஜித், வினோத் மீண்டும் சேரும் படத்தில் அவர் கார் பந்தய வீரராக வரக்கூடும் என்று கூறப்படுகிறது. அஜித்துக்கு வேகம் என்றால் எவ்வளவு பிடிக்கும் என்பதை பார்த்து வியந்தேன். அடுத்த படத்தில் வேகம் இருக்கும் என்றார் போனி கபூர். இந்நிலையில் அஜித் தனது கெட்டப்பை மாற்றியுள்ளார்.

கவலை
அஜித் ரேஸராக நடிப்பது மகிழ்ச்சி தான். ஆனால் ரேஸ் காட்சியில் டூப் எல்லாம் போடக் கூடாது நானே தான் நடிப்பேன் என்று அஜித் அடம்பிடிப்பாரே. அடி எதுவும் படாமல் நல்லபடியாக நடிக்க வேண்டுமே என்று அவர் ரசிகர்களுக்கு கவலை இல்லாமல் இல்லை.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *