கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் மீன்; 174 ஆண்டுகளாக உலகம் அறியாத தகவல்! – Tamil VBC

கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் மீன்; 174 ஆண்டுகளாக உலகம் அறியாத தகவல்!

கோவிலுக்கு ஆஸ்துமா நோயுடன் வரும் பக்தர்களுக்கு மீன்கள் பிரசாதமாக வழங்கப்படுகின்றன சம்பவம் குறித்த ருசிகர தகவல்கள் வெளியாகியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத்தில் உள்ள ஒரு கோவிலிலே இவ்வாறு மீன்கள் பிரசாதமாக வழங்கப்படுகின்றது வழக்கத்தில் உள்ளது.

இது தொடர்பில் மேலும்,

ஆஸ்துமா நோய்க்கு மீன் சிறந்த உணவாகும், ஆனால், இந்த மீன், ஒரு கோவிலில் பிரசாதமாக வழங்கப்படுகிறது என்றால் ஆச்சரியமாகதான் இருக்கின்றது.

குறித்த கோவிலில் சுவாச பிரச்சனைகளோடு வரும் பக்தர்களுக்கு மீன்களை பிரசாதமாக வழங்கும் நடைமுறை 174 ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளதாகவும் அறியமுடிகிறது.

இந்த நடைமுறை தொடர்பில் அக்கோவிலின் நிர்வாகிகள் கூறுகையில்.,

தங்கள் குடும்பத்தினர் மட்டுமே அறிந்த இந்த ரகசியத்தை, மூச்சு திணறல் மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளுடன் கோவிலுக்கு வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு பயனளிக்கும் வகையில் மீன் பிரசாதமாக வழங்கப்படுகிறது,

மேலும் இதற்காக எவ்வித பணமும் பெறுவதில்லை எனவும், இந்த மீன் சிகிச்சை இலவசமாகவே வழங்கப்பட்டு வருகிறது எனவும் அக்கோவில் நிர்வாகிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்த மீன் பிரசாத மருத்துவ முகாம் 45 நாட்களுக்கு நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *