அதிக சம்பளம் வாங்கும் குழந்தை நட்சத்திரங்கள் யார் யார்னு தெரியுமா? இவங்கதான் அது… – Tamil VBC

அதிக சம்பளம் வாங்கும் குழந்தை நட்சத்திரங்கள் யார் யார்னு தெரியுமா? இவங்கதான் அது…

ஒரு காலத்தில் இந்திய சினிமாக்களில் குழந்தை நட்சத்திரங்களாக நடிப்பவர்கள் பெரும்பாலும் ஏற்கனவே சினிமாக்களில் நடித்து வருகின்ற கலைத்துறையில் இருக்கிறவர்களின் பிள்ளைகள் யாரையாவது நடிக்க வைத்து விடுவார்கள்.

இதற்காக பெரிதாக மெனக்கெடுவதில்லை. அதில் நன்றாக நடிக்கிற குழந்தைகள் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்புகள் வர வர அதைப் பிடித்துக் கொண்டு மேலே வந்து விடுவார்கள். ஹீரோ, ஹீரோயின்களுக்காக அலைந்து திரிந்து தேடுவது போல குழந்தை நட்சத்திரங்களுக்கு கிடையாது.

ஹீரோவின் சிறுவயது பாத்திரம்
அவ்வளவு ஏன் ஹீரோவின் சிறுவயது பாத்திரமாக நடிப்பதாக இருந்தாலும் அதற்காகப் பெரிதாக மெனக்கெடவே மாட்டார்கள். ஏதாவது முகப்பொருத்தம் மட்டும் கூடி வருவது போன்று, கொஞ்சம் நடிக்கத் தெரிந்தாலே போதும் என்று நடிக்க வைத்து விடுவார்கள்.

குழந்தை நட்சத்திர தேடல்
ஆனால் சமீப சில காலங்களாக குழந்தை நட்சத்திரங்கள் கைதேர்ந்த நடிகர்களை விட நடிப்பில் முதல்முறை நடிக்கும் போதே பின்னி பெடலெடுக்கிறார்கள். அதிலும் படங்களில் குறிப்பிட்ட குழந்தை கதாபாத்திரம் மையமான கதாபாத்தரமாக இருந்தால் அதற்காக மெனக்கெட்டு தேடுகிறார்கள்.

குழந்தை நட்சத்திரங்களாக புகழ்பெற்று, அவர்களுடைய கால்ஷீட்டுக்காக நிறைய இயக்குநர்கள் அலைவதுண்டு. அதேபோல் திறமையைத் தேடித் தேடி நடிக்க வைக்கவே இன்றைய இயக்குநர்கள் விரும்புகிறார்கள்.

தமிழ் குழந்தை நட்சத்திரங்கள்
அந்த வகையில் படு பிரபலாமான குழந்தை நட்சத்திரங்கள் தமிழ் சினிமாவில் உண்டு. அதில் மிக முக்கியமான குழந்தை நட்சத்திரம் என்றால் அது நம்ம சாரா பாப்பா தான். ஆமாங்க. தெய்வத் திருமகள் நிலாவே தான். அடுத்து தங்கமீன்கள் பாப்பா, நடிகை மீனாவின் மகள் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

அந்த வகையில் பாலிவுட்டிலும் தங்களுடைய நடிப்புத் திறமையால் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த பல குழந்தை நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் தங்களுடைய திறமையால் உயர்ந்து, வாய்ப்பு கிடைத்தால் போதும் என்பதையும் தாண்டி, லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குகிறவர்களாக இருக்கிறார். அப்படி அதிக சம்பளம் வாங்கும் குழந்தை நட்சத்திரங்கள் பற்றித் தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

பேபி சாரா அர்ஜூன்
நம்ம சாரா பாப்பாவை யாராவது மறக்க முடியுமா? நிலான்னு யாராவது கூப்பிட்டா முதலில் நினைவுக்கு வருவது நம்ம சாராவாதான் இருக்க முடியும். தெய்வத் திருமகள் படத்தில் நடித்த பின்பு தமிழ் சினிமாவில் தூக்கிக் கொண்டாடப்பட்ட குழந்தை நட்சத்திரம் தான் நம்ம சாரா. அந்த படத்துக்காக பல லட்சங்கள் அவருக்கு சம்பளமாகக் கொடுக்கப்பட்டது. அதேபோல பாலிவுட்டிலும் அதிக சம்பளம் பெறும் குழந்தை நட்சத்திரம் என்றால் அது சாரா தான்.

தர்ஷீல் குமார்
தர்ஷீல் குமார் – இந்த குட்டிப்பையன பார்த்திருக்கீங்களா இல்லையா? பிரதர்ஸ், டிஷ்யூம், பிரேம் ரத்தன் தன் பயோ ஆகிய படங்களில் நடித்து தன்னுடைய நடிப்புத் திறமையால் அவ்வளவு பேரையும் கவர்ந்தவர். இதில் டிஷ்யூம் படத்துக்காக வெறும் 6 நாள் ஷூட்டுக்காக 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கியிருக்கிறார்.

தியா சல்வத்
தன்னுடைய நடிப்பால் ஒட்டுமொத்த பாலிவுட் நடிகர்கள், ரசிகர்களால் வியந்து பார்த்த குழந்தை தான் தியா. கிக், பிட்சா, ராக்கி ஹேண்ட்சம் ஆகிய படங்களில் தன்னுடைய நடிப்பால் மிரள வைத்தவர். இந்த படங்களுக்கு கிட்டதட்ட 31 நாட்கள் கால்ஷீட் கொடுத்தார். அதற்கு ஒரு நாளைக்கு 25 ஆயிரம் சம்பளம் வாங்கியிருக்கிறார். இதுவே விளம்பரப் படங்களாக இருந்தால் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை வாங்குகிறார்.

ஹர்ஸ் மயார்
ஐ ஆம் கலாம் (i am kalam) என்னும் படத்தில் சிறு வயது கலாமாக நடித்து, பெரிய நடிகர்களே ஏற்க மறுக்கும் மிகப்பெரிய சவாலாக கலாம் கதாபாத்திரத்தை ஏற்று தன்னுடைய நடிப்பால் பிரமிக்க வைத்த சிறுவன். இந்த படத்துக்காக 21 நாள் ஷூட்டிங்குக்காக ஒரு லட்சம் ரூபாய் சம்பளமாகக் கொடுக்கப்பட்டது.

ஹர்ஷாலி மல்கோத்ரா
இந்த குழந்தையை தெரியாதவர்களும் பார்த்து வியக்காத சினிமா ரசிகர்களு இருக்க முடியாது. சில ஆண்டுகளுக்கு முன்பு சல்மான் கான் நடிப்பில் வெளிவந்து பெரும் வெற்றியடைந்த படம் பஜ்ரங்கி பஜ்ஜான். இதில் சல்மான்கானுக்கு நிகராக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்திய சிறுமி தான் ஹர்ஷாலி. அந்த படத்தில் அந்த ரோலுக்காக சில பல லட்சங்கள் சம்பளமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

மிகெய்ல் காந்தி
என்ன பார்த்தவுடனே அப்படியே கடிச்சி சாப்பிடணும் போல இருக்கா? இவர் தாங்க மிகெய்ல் காந்தி. இவர் யாரா நடிச்சிருக்காரு தெரியுமா? சச்சின் தெண்டுல்கரின் சுயசரிதை திரைப்படமான சச்சின்: எ பில்லியன் ட்ரீம்ஸ் என்ற படத்தில் குட்டி சச்சினாக நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்துக்காக 300 குழந்தைகள் ஃபோட்டோ ஷூட் செய்யப்பட்ட பின், மிகெய்ல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். உண்மையாவே குட்டி சச்சின் மாதிரி தான்ப்பா இருக்கார். இந்த படத்துக்காக சில லட்சங்கள் சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *