உங்க கால்ல பலமே இல்லாம இருக்கீங்களா? இத செய்ங்க… ரொம்ப ஸ்ட்ராங்காகிடுவீங்க…! – Tamil VBC

உங்க கால்ல பலமே இல்லாம இருக்கீங்களா? இத செய்ங்க… ரொம்ப ஸ்ட்ராங்காகிடுவீங்க…!

வயதாக வயதாக கை, கால்கள் எல்லாம் பலவீனமாக ஆரம்பித்து விடும். பலவீனமான கால்கள் வலிமையை வலியையை அதிகரித்து விடும். இப்படி கால்கள் பலவீனமாக ஆக இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருத்தல், நரம்பு பாதிப்பு, அதீத வேலை செய்வது, உடற்பயிற்சி இன்மை, ஆர்த்ரிட்டீஸ் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் சில மருத்துவ விளைவுகளும் கால்களை பலவீனமாக்குகிறது.

அறுவை சிகிச்சை பிறகு ஏற்படும் வலி, மருந்துகளின் பக்க விளைவுகள், போதிய நீர்ச்சத்து இல்லாமல் இருத்தல், டயாபெட்டீஸ், அனிமியா, முதுகுவலி, ஊட்டச்சத்து பற்றாக்குறை, தீவிர உடல் உபாதைகள் போன்றவை கால்களை பலவீனமாக்குகிறது.

இந்த பலவீனம் ஒரே ஒரு கால்களை அல்லது இரண்டு கால்களையுமே பாதிப்படையச் செய்யலாம். இது கொஞ்சம் கொஞ்சமாக தீவிரம் அடையலாம்.

அறிகுறிகள்
கால்கள் பலவீனமாக உள்ளதை கீழ்க்கண்ட அறிகுறிகளைக் கொண்டு அறிந்து கொள்ளலாம்.

உணர்வின்மை

கீழ் கால்களில் வலி

தசைகளில் வலி

எரிச்சல்

சிவந்து போதல்

வீக்கம்

முதுகு வலி

உடல் வலி

தசைகளின் ஒத்துழையாமை

சமநிலையின்மை

கால்களின் பலவீனத்தை போக்க ஆரோக்கியமான உணவு, போதுமான நீர், நல்ல உடற்பயிற்சி, போதிய ஓய்வு போன்றவற்றை எடுக்க வேண்டும். வீட்டிலேயே சில இயற்கை சிகிச்சைகளை மேற்கொண்டு கால்களை வலிமையாக்க முடியும். நாள்பட்ட கால் வலி இருந்தால் உடனே மருத்துவரை அணுகி விடுவது நல்லது.

மசாஜ்
தினசரி உங்கள் கால்களுக்கு நல்ல மசாஜ் செய்யும் போது இரத்த ஓட்டத்தை அதிகரித்து ஊட்டச்சத்துக்கள் பலவீனமான தசைகளுக்கு செல்கிறது. இதன் மூலம் கால்கள் வலிமையாகும்.

கால்வலி, அழற்சி மற்றும் வீக்கத்தை குறைக்கிறது. பயம், மன அழுத்தம் போன்றவற்றை போக்குகிறது. ஆலிவ், தேங்காய் மற்றும் கடுகு எண்ணெய்யை லேசாக சூடாக்கி கால்களில் தடவி மசாஜ் செய்யுங்கள்.

10-15 நிமிடங்கள் பலவீனமான கால்களில் மசாஜ் செய்யுங்கள். தினமு‌ம் இரண்டு முறை இதை செய்து வாருங்கள்.

தினசரி நடைபயிற்சி
தினசரி நடைபயிற்சி உங்கள் கால்களில் உள்ள தசைகளை வலிமையாக்கும். இதுவு‌ம் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். குறைந்தது 30 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்ளலாம். வாரத்திற்கு 5 தடவையாவது நடுங்கள். நடப்பதற்கு சிரமமாக இருந்தால் மருத்துவரின் உதவியை நாடுங்கள்.

நடத்தல், ஓடுதல், நீச்சல் அடித்தல், குதித்தல், பைக்கிங், ட்ரக்கிங் இதை வாரத்திற்கு சில தடவை என செய்து வந்தால் பலவீனமான கால்கள் கூட வலிமையாகும்.

வலிமையாக்கும் உடற்பயிற்சிகள்
பலவீனமான கால்களை உடையவர்கள் அதை வலிமையாக்க சில உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். ஹீல் ஸ்லைடு, குவாட்டரும் பிரஸ், கால்களை நேராக்கும் பயிற்சி, ஹேம்ஸ்ட்ரிங், சுவீஸ் பால், நுரையீரல்கள், இடுப்புப் பயிற்சி, பக்கவாட்டு உடற்பயிற்சி, கூட்டிணைவு பயிற்சிகள், முழங்கால் நீட்டி மடக்குதல், ஹேம்ஸ்ட்ரிங் கேர்ள்ஸ் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இதை வாரத்திற்கு 3-4 தடவை என செய்து வந்தால் கால்கள் வலிமையாகும். யோகா பயிற்சிகளைக் கூட நீங்கள் மேற்கொள்ளலாம். இந்த உடற்பயிற்சிகளை உங்கள் மருத்துவரின் துணை கொண்டு கூட செய்து வரலாம்.

சூரிய ஒளி
2002 ஆம் ஆண்டு அமெரிக்க க்ளினிக்கல் நியூட்ரிஷன் நாளிதழ் படி விட்டமின் டி பற்றாக்குறை கால்களில் பலவீனத்தை ஏற்படுத்துகிறது. கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை ஆரோக்கியமான எலும்புகளுக்கு முக்கியம்.

எனவே சூரிய ஒளியில் இருப்பது எலும்புகளுக்கு தேவையான விட்டமின் டி சத்தை கொடுக்கிறது. எனவே அதிகாலையில் 10-15 நிமிடங்கள் இருப்பது நல்லது.

அதே மாதிரி விட்டமின் டி அதிகமான உணவுகளான சால்மன், சேர்டைன்ஸ், மாக்குரெல், ஃபோர்பிட்டேடு பால், ஆரஞ்சு ஜூஸ், தானியங்கள் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது.

அதிகமாக தண்ணீர் பருகுங்கள்
உடம்பில் நீர்ச்சத்து இல்லாமல் இருப்பதும் கூட தசைகள் பலவீனமாக காரணமாக அமைகிறது. எனவே உடம்புக்கு தேவையான போதுமான நீர்ச்சத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

எனவே தினசரி போதுமான தண்ணீர் குடித்து வாருங்கள். தண்ணீர் சத்துள்ள பழங்கள், காய்கறிகளை எடுத்துக் கொள்ளுங்கள். காபினேட்டேடு, ஆல்கஹால் பானங்களை தவிருங்கள்.

குறிப்பு : சிறுநீரக கோளாறு இருப்பவர்கள் தண்ணீர் அதிகமாக எடுத்துக் கொள்வதை மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளலாம்

கருப்பட்டி
பலவீனமான கால்களுக்கு வலிமை தர ஊட்டச்சத்துக்கள் தேவை. இரும்புச் சத்து, விட்டமின்கள் பி, கால்சியம், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் கருப்பட்டியில் உள்ளது.

இரும்புச் சத்து அனிமியாவை போக்குகிறது, விட்டமின் பி தசைகளுக்கு மிகவும் அவசியம், கால்சியம் தசைகளுக்கு ஆற்றலை தருகிறது. பொட்டாசியம் உடம்பில் உள்ள எலக்ட்ரோலைட்டை சமநிலையில் வைக்கிறது.

1 டேபிள் ஸ்பூன் கருப்பட்டி பாகுவை சூடான பால் அல்லது வெந்நீரில் கலந்து குடியுங்கள். ஒரு நாளைக்கு ஒருமுறை அல்லது இரண்டும் முறை குடித்து வாருங்கள்.

2 டீ ஸ்பூன் கருப்பட்டி பாகுவை ஆப்பிள் சிடார் வினிகருடன் 1 கப் தண்ணீர் சேர்த்து ஒரு நாளைக்கு ஒரு முறை என குடித்து வாருங்கள்.

ஆப்பிள் சிடார் வினிகர்
பலவீனமான கால்களுக்கு ஆப்பிள் சிடார் வினிகரும் சிறந்த ஒன்று. இதில் பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம், விட்டமின் பி போன்ற சத்துக்கள் உள்ளன. இதை தசைகளுக்கு வலிமை தருகிறது. இதன் அமிலத் தன்மை கால்களில் உள்ள தசைகள் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சு கொள்ள உதவுகிறது.

1-2 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகரை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் தேன் மற்றும் லெமன் ஜூஸ் சேர்த்து கொள்ளுங்கள். இந்த டானிக்கை 1 அல்லது 2 வேளை என குடித்து வாருங்கள்.

பால்
பாலில் உள்ள கால்சியம் கால்களின் வலிமைக்கு அவசியமானது. கால்சியம் மற்றும் புரோட்டீன் போன்ற சத்துக்கள் தசைகளின் கட்டமைப்புக்கு உதவுகிறது. எலக்ட்ரோலைட் உங்கள் உடலுக்கு போதுமான நீர்ச்சத்தை தருகிறது.

தினமும் 1 கிளாஸ் குறைந்த கொழுப்பு உள்ள பாலை குடித்து வந்தால் கால்கள் வலிமையாகும். ஒரு கிளாஸ் குறைந்த கொழுப்பு உள்ள பாலில் அத்திப்பழம், டேட்ஸ், பாதாம் பருப்பு போன்றவை சேர்த்து குடியுங்கள். எலும்புகள் வலிமையாகும்.

குதிரை வாலி
ஆயுர்வேத மருத்துவர்கள் கால்களின் வலிமைக்கு பெரிதும் பயன்படுகிறது. இதிலுள்ள அதிகப்படியான சிலிக்கா தசைகளின் வலிமைக்கும், தசைகளின் சுருக்கத்திற்கும், எலும்புகளின் அடர்துதிக்கும் பயன்படுகிறது.

இது உடம்பில் உள்ள கால்சியத்தை உறிஞ்சி எலும்புகளுக்கு வலிமையை கொடுக்கிறது.

பயன்படுத்தும் முறை

தினமும் 2-3 கப் குதிரை வாலி டீ போட்டு குடித்து வரலாம். 2 வாரத்திற்கு மேல் குடிக்க வேண்டாம். 1 டீ ஸ்பூன் குதிரை வாலியை 1 கப் கொதிக்கின்ற நீரில் போட்டு 5 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். பிறகு அதை வடிகட்டி அதனுடன் தேன் சேர்த்து குடியுங்கள். மருத்துவரின் ஆலோசனை பேரில் குதிரை வாலி மாத்திரைகளைக் கூட சாப்பிட்டு வரலாம்.

ஆரோக்கியமான உணவுகள்
ஆரோக்கியமற்ற உணவுகளும் கால்களின் பலவீனத்திற்கு காரணமாகிறது. ஊட்டச்சத்து பற்றாக்குறை சோர்வு, தசைகளின் பலவீனம், பிடிப்பு, வலி போன்றவை களை ஏற்படுத்துகிறது.

போதிய புரோட்டீன் இல்லை என்றால் கால்கள் பலவீனமாகும். முட்டைகள், யோகார்ட், சோயா உணவுகள், நட்ஸ் போன்ற புரோட்டீன் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஊட்டச்சத்துக்கள்
பொட்டாசியம் பற்றாக்குறை தசைகளை வலிமையற்றதாக மாற்றுகிறது. பொட்டாசியம் உள்ள உணவுகளான சர்க்கரை வள்ளிக்கிழங்கு, வாழைப்பழம், பிளம்ஸ், உலர்ந்த திராட்சை, தக்காளி ஜூஸ், பூர்ண ஜூஸ் போன்ற உணவுகளை சாப்பிடுவது நல்லது.

மக்னீசியம் தசைகளின் ஆரோக்கியத்திற்கு அவசியமானது. பூசணிக்காய் விதைகள், சூரிய காந்தி விதைகள், பாதாம் பருப்பு, பீன்ஸ், கீரைகள் போன்ற மக்னீசியம் அதிகமான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

விட்டமின் பி பற்றாக்குறை கால்களில் உணர்வின்மை பிரச்சினையை ஏற்படுத்துகிறது. விட்டமின் பி உள்ள உணவுகளான தானியங்கள், முட்டை, பயிறு வகைகள், வாழைப் பழம், கோதுமை, பீன்ஸ், மீன்கள், ஓட்ஸ், சீஸ் மற்றும் யோகார்ட் சேர்த்து கொள்ளுங்கள்.

டிப்ஸ்கள்
ஒரே இடத்தில் நீண்ட நேரம் நிற்காதீர்கள் மற்றும் உட்காராதீர்கள். புகைப்பிடித்தலை விட்டு விடுங்கள். சேச்சுரேட்டேடு உணவுகளை விட்டு விடுங்கள்.

உப்பை குறைத்து கொள்ளுங்கள் (நீர் தேக்கம்) உடம்பில் உள்ள நீரை வெளியேற்றி விடும். கால்களை தூக்கி வைத்துக் கொள்ளுங்கள், இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

அக்குபஞ்சர், அக்கு ப்ரஷர் போன்ற இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் வேலைகளை செய்யலாம். லைசின், கோ என்சைம் Q10 போன்ற தசைகளின் பலவீனத்தை போக்குகிறது. மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *