ஊட்டி அரசுக் கல்லூரி மாணவர்கள் இந்திய கால்பந்து அணிக்குத் தேர்வு! – Tamil VBC

ஊட்டி அரசுக் கல்லூரி மாணவர்கள் இந்திய கால்பந்து அணிக்குத் தேர்வு!

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைக் கல்லூரி மாணவர்களான ரவிச்சந்திரன் ராகுல், பிரவீன் இவான் மற்றும் அஜித் குமார் ஆகிய மூன்று மாணவர்கள் தேசிய அளவில் ஹரியானாவில் நடைபெற்ற கால்பந்துப் போட்டியில் தமிழக அணிக்காகச் சிறப்பாக விளையாடியதன் மூலம் இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ளனர்.


கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே இளங்கலை பொருளாதாரம் பயிலும் மாணவர் ரவிச்சந்திரன் ராகுல், 21 வயதுக்குட்பட்ட இந்திய கால்பந்து அணியில் இடம் பெற்ற தகவல் கிடைத்துள்ளது. இவரின் தந்தை கூலித் தொழிலாளி என்பதால், செக் குடியரசு நாட்டில் நடைபெறவுள்ள கால்பந்துப் போட்டியில் பங்கேற்க பாேதிய நிதி இல்லாததால், கல்லூரி முதல்வர் ஈஸ்வர மூர்த்தியிடம் முறையிட்ட நிலையில், கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து ரூ.65,000 நிதி திரட்டிக் காெடுத்துள்ளனர். இந்த நிலையில், இளங்கலை வரலாறு படிக்கும் வாகன ஓட்டுநர் மகன் பிரவீன் இவான் மற்றும் இளங்கலை பாதுகாப்பு பயிலும் துப்புரவுத் தாெழிலாளியின் மகன் அஜித் குமார் ஆகிய இரண்டு மாணவர்களும் இந்திய கால்பந்து அணிக்குத் தேர்வாகியுள்ள தகவல் தெரியவந்துள்ளது.

இது குறித்து ஊட்டி அரசுக் கலைக் கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி கூறுகையில், “ 21 வயதுக்குட்பட்ட இந்திய கால்பந்து அணிக்கு அதிகபட்சமாக சண்டிகர் மாநிலத்திலிருந்து 7, குஜராத் மாநிலத்திலிருந்து 3, டில்லியிலிருந்து 1, தமிழகத்திலிருந்து 3 என 14 பேர் தேர்வாகியுள்ளனர். தமிழகத்திலிருந்து தேர்வாகியுள்ள 3 மாணவர்களும் ஊட்டி அரசுக் கலைக் கல்லூரி மாணவர்கள் என்பதில் பெருமை காெள்கிறேன். இந்த 3 மாணவர்களும் விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் கல்லூரிப் படிப்பை பயின்று வருகின்றனர். மேலும், மாவட்ட, மாநில அளவு கால்பந்துப் பாேட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் மூலம், 21 வயதுக்கு உட்பட்டாேருக்கான இந்திய அணியில் இடம்பிடித்து செக் குடியரசு நாடு, அந்த நாட்டில் நடத்தும் மினி கால்பந்து உலகக் காேப்பைக்கான இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ளனர்’’ என்றார்.

இது குறித்து இந்திய கால்பந்து அணிக்குத் தேர்வாகியுள்ள மாணவர்கள் மற்றும் ஊட்டி அரசு கலைக் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் மோசஸ் டானியல் கூறுகையில், “கடின உழைப்புக்குக் கிடைத்த பரிசாக இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ளதைப் பார்க்கிறோம். செக் குடியரசு நாட்டில் நடைபெறவுள்ள போட்டியில் சிறப்பாகச் செயல்படத் தயாராகி வருகிறோம். வரும் 28-ம் தேதி முதல் அக்டாேபர் 2-ம் தேதி வரை மும்பையில் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. 2-ம் தேதி மும்பையிலிருந்து செக் குடியரசு நாட்டுக்குப் புறப்படவுள்ளோம். 3-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை மினி உலகக் காேப்பை கால்பந்துப் போட்டிகள் நடக்கவுள்ளன. போட்டிக்குத் தேர்வாகியுள்ளது மகிழ்ச்சியளித்தாலும், செக் குடியரசு நாட்டுக்குச் சென்று வர சுமார் ரூ.2 லட்சம் வரை செலவாகும் என்பதால், என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளோம். ஸ்பான்சர்கள் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கையாேடு எங்கள் பயிற்சியைத் தாெடர்கிறோம்’’ என்றனர்.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *