இந்த 4’ல ஒன்னு சூஸ் பண்ணுங்க, உங்க லைப் பத்தி நாங்க சொல்றோம்…! – Tamil VBC

இந்த 4’ல ஒன்னு சூஸ் பண்ணுங்க, உங்க லைப் பத்தி நாங்க சொல்றோம்…!

வாழ்க்கை என்பது பல நிலைகளை கொண்டிருக்கிறது. இந்த ஒவ்வொரு நிலையிலும் ஒருவரிடம் பலவகையிலான குணாதிசய வேறுபாடுகள், பொறுப்பு, அறிவுநிலை, மனநிலை, மனிதநேய மாற்றங்களை, மேன்மைகளை நாம் காண இயலும்.

பொதுவாக இவை நான்கு நிலைகளாக பிரித்துப் பார்க்கப்படுகிறது. இந்த நிலைகளில் அனைவரும் ஒரே மாதிரி செயல்படுவது இல்லை. தற்போதைய உங்களது செயல்பாடு, மன எண்ணங்கள், வாழ்வியல் குறித்து பார்வை போன்றவற்றை வைத்து.., நீங்கள் உங்களின் வாழ்க்கையில் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதை அறிந்துக் கொள்ளலாம்.

நான்கில் ஒன்னு…
நமது மனதின் எண்ணங்களை பொருத்து தான் நமது தேர்வு அமையும். அப்படி சுவிட்சர்லாந்தினை சேர்ந்த ஆய்வாளர். இந்த நான்கு குறிகளில் ஒன்று தேர்வு செய்வதன் மூலம், வாழ்வில் நான்கு நிலையில் ஒருவர் எந்த நிலையில் இருக்கிறார் என்று அறிந்துக் கொள்ள முடியும் என்று ஒரு பர்சனாலிட்டி டெஸ்ட் தயார் செய்தார்.

வாருங்கள்! உங்களது தேர்வு என்ன? அது சார்ந்து நீங்கள் உங்கள் வாழ்வில் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்று தெரிந்துக் கொள்ளலாம்….

#1 தடகள நிலை
இதை வாழ்வின் நான்கு நிலைகளாக பிரித்து கொள்ளலாம். அதில் நீங்கள் தேர்வு செய்திருக்கும் இந்த தடகள நிலையானது, ஒருவருக்கு சுயநலம், சுய லாபம், தான், நான் நல்லா இருந்தா போதும் என்ற மனநிலை அதிகமாக இருக்கும் காலம் ஆகும்.

தோற்றம்!
இந்த காலக்கட்டத்தில் இருக்கும் நபர்கள் தங்கள் தோற்றம், உடல் வடிவம், அழகு என சின்ன, சின்ன விஷயங்கள் மீது அதிக கவனம், அக்கறை எடுத்துக் கொள்வார்கள். இது சார்ந்த அவசியமற்ற கவலை அவர்களிடம் அதிகம் காணப்படும்.

கவலை!
இவர்களது இந்த முதிர்ச்சியற்ற தன்மையால், இந்த உலகமே இவர்களை சுற்றி தான் இயங்கிக் கொண்டிருக்கிறது, உலகில் நடக்கும் எந்த ஒரு சம்பவமும் தன் மீது தாக்கம் ஏற்படுத்துகிறது என்றே எண்ணிக் கொண்டிருப்பார்கள். இதனால், மற்றவர்கள் நிஜத்தில் என்ன கவலை கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் இவர்கள் இந்த நிலையில் இருக்கும் போது யோசிக்கவே மாட்டார்கள்.

சுயநலம்!
இதில், சுயநலம் தான் இந்த நிலையின் கருவியாக இருக்கிறது. இந்த சுய நலமே இவர்களது தன்னம்பிக்கை மற்றும் சுய மரியாதையை வளர விடாமல் செய்யும். இவை இரண்டுமே இரண்டு உச்சம் என்று கூறலாம். இவர்களது ஈகோவே, இவர்களது நம்பிக்கை மற்றும் வெற்றியை அழித்துவிடும்.

சிக்கல்!
அடிக்கடி இவர்கள் வெறும் வெளித்தோற்றம் வைத்து கணக்குப் போட்டு அதில் தோல்வி அடைவார்கள். பெரும்பாலும் பதின் வயதில் இருப்பவர்கள் இந்த நிலையில் அதிகம் சிக்கிக் கொள்வது உண்டு. (குறிப்பு: பதின் வயதில் இருப்பவர்கள் மட்டும் தான் இந்த நிலையில் இருப்பார்கள் என்றில்லை.)

#2 போர்வீரன் நிலை
தடகள நிலை என்பதை நாம் அவசர நிலை என்றும் கூறலாம். எதை பற்றியும் கவலை அடையாமல் தன்னலம் மற்றும் சார்ந்து ஓடிக் கொண்டே இருப்பார்கள். ஒருவர் தடகள நிலையை தாண்டி அடுத்து வருவது இந்த போர்வீரன் நிலை தான். இதில் நிறைய பயிற்சியும், போராட்டமும் இருக்கும்.

முதிர்ச்சி!
ஒரு நபருக்கு மன முதிர்ச்சி உண்டாவது இந்த போர்வீரன் நிலையில் தான். இதில், தங்களின் செயல் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் மற்றும் தாக்கங்களுக்கு அவர்களே பொறுப்பு ஏற்க வேண்டும். அதன் எதிர்வினைகளை தாங்கிக் கொள்ள வேண்டும், எதிர்கொள்ள வேண்டும். அது மட்டுமின்றி, அந்த சூழல் மற்றும் விளைவுகளினால் தன்னை சுற்றி இருக்கும் மக்கள் மத்தியில் ஏற்பட்ட தாக்கங்களையும் இவர்கள் கையாள வேண்டும்.

பாடம்!
இந்த போர்வீரன் நிலையில் தான் நிறைய வாழ்க்கை பாடம், படிப்பினை, அனுபவங்கள் கற்றுக் கொள்ள இயலும். இதில் ஒரு நன்மை உண்டு, இங்கே கற்கும் பாடங்கள் எதிர்வரும் காலம் மற்றும் நிலைகளில் எப்படியாக செயல்பட வேண்டும் என்ற திட்டமிடலை, செயல்பாட்டு முறையை முன்னவே தீர்மானம் செய்ய அறிவை கொடுக்கும். இந்த உலகில் நீ எப்படி வாழ வேண்டும், எப்படி பயணிக்க வேண்டும் என்ற வழிகாட்டியாய் இந்த போர்வீரன் நிலை அமையும்.

அவமானம்!
இந்த நிலையில் நிறைய அவமானம், தோல்வி, எதிர்ப்பு, காயங்கள் ஏற்படலாம். ஆனால், அவை எல்லாம் தான் ஒரு நாள் நல்ல பலனையும், பழம் போல ருசியான வாழ்க்கை அமைய வித்தாக அமையும். இந்த நிலையில் தான் உண்மையான அழகு என்ன, வெற்றி என்ன, நாம் எதை நோக்கி பயணிக்க வேண்டும், என்ன சாதனைகள் புரிய வேண்டும் என்று புரிய வைக்கும்.

வளர்ச்சி!
அதுவரை சிறுவனாக, சிறுப்பிள்ளை தனமாக இருந்தவனை ஒரு மனிதனாக உருவாக்கும் நிலை தான் இந்த போர்வீரன் நிலை. இது கரியாய் இருப்பவரை வைரமாக்கும், கல்லாய் இருந்தவனை சிற்பமாக்கும்., மாணவனை ஆசானாக்கும். நல்ல அறிவாற்றல் மற்றும் அனுபவங்களை கொடுக்கும் பாடசாலை இந்த போர்வீரன் நிலை.

#3 பிரகடன நிலை
வாழ்க்கையின் அடுத்த கட்டம் என்ன என்பதை உணர்த்தும் நிலை இது. சற்றே கடினமான நிலை. இருப்பவனை இல்லாதவன் ஆக்கி வேடிக்கை பார்க்கும் நிலை இது. நம்மிடம் எல்லாமே இருக்கிறதே, நம்மை மிஞ்சிட ஒருவன் இருக்கிறானா? நம்மை யாரால் வெல்ல முடியும், நாம் வெற்றியடைய போகிறோம், சாதிக்க போகிறோம் என்று இருக்கும் போது, காலம் மாறும்… பரமபதத்தில் வெற்றியின் அருகே சென்று ராஜ நாகத்திடம் அடிப்பட்டு மீண்டும் ஆட்டத்தின் ஆரம்பத்தில் இருந்து துவங்கும் நிலைக்கு தள்ளப்படுவோமே அப்படியான ஒரு நிலை இது.

கவனம்!
இந்த நிலையில் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் மிக கவனமாக இருக்க வேண்டும். எல்லாருமே இங்கே கீழே விழுவார்கள் என்று கூறிவிட இயலாது. இங்கே உங்களின் செயல் உங்களை மட்டுமின்றி உங்களை சுற்றி இருப்பவரின் மீதும் தாக்கத்தை உண்டாக்கும். எனவே, அதிகமான கடமை மற்றும் பொறுப்புகள் உங்கள் மீது இருக்கும் நிலை தான் இந்த பிரகடன நிலை.

பெருமை!
சில சமயம் இந்த நிலையானது உங்களை மனசோர்வு அடைய செய்யும். அச்சுறுத்தும். பிள்ளைகளை பெற்று, அவர்களை வளர்த்து, அவர்களை ஒரு நல்ல நிலையில் பார்க்க வைக்கும் நிலை இது. வாழ்க்கையில் பல முக்கியமான தருணங்கள் நீங்க காணும் நிலை இது. பல விஷயங்களில் நீங்கள் பெருமைப்பட போகும் நிலை இது.

சுய மதிப்பீடு!
நீங்கள் அதுனால் வரை செய்த சாதனைகள், வெற்றிகள் குறித்து நீங்களே சுய மதிப்பீடு செய்யும் காலம் இது. வாழ்வில் நீங்கள் உண்மையில் சாத்தித்தது என்ன, உங்களது உண்மையான வெற்றி என்ன என்பதை கூறும் நிலை தான் பிரகடன நிலை. நீங்கள் உங்கள் குழந்தைக்கு செய்தவை, உங்களுக்கு பெருமையாக பலனளிக்கும். நீங்கள் நன்கு படிக்க வைத்திருந்தால், அவர்கள் நல்ல நிலைமைக்கு வந்து, இவன் இன்னார் பிள்ளை என்று பெருமை அடையும் செயல்கள் செய்வான்.

#4 ஆன்மீக நிலை
இது தான் வாழ்வின் கடைசி நிலை. இது தான் அனைவரும் கடைசியாக அனுபவிக்கப் போகும் நிலை. இது முழுக்க, முழுக்க ஆன்மாவை சார்ந்தது. இந்த உலகில் நீங்கள் ஏன் பிறந்தீர்கள், உங்கள் பிறப்பினால் உண்டான பயன்கள் என்னென்ன, வினைகள் என்னென்ன, விளைவுகள் என்னென்ன என்று நீங்கள் கண்டறியும் நிலை. பணம், சொத்து, உறவுகள், அழகான, ஆடம்பரான பொருட்கள், வெற்றிகள் என அனைத்தும் முக்கியம் தான். ஆனால், இதை அனைத்தையும் கடந்து இருக்கும் ஆன்மா / ஆன்மீகத்தை நீங்கள் உணரும் நிலை தான் இது.

பிரபஞ்சம்!
இந்த நிலையில் தான் இந்த பிரபஞ்சத்துடன் நீங்கள் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும். இந்த வாழ்க்கை துவக்கமும் முடிவும் அற்ற பிரபஞ்சத்தை போன்றது. அது ஒரு சக்தி / ஆன்மா. என்ன நடந்தாலும், இதுவும் கடந்து போகும் என்பதை போல, அனைத்தையும் கடந்து போகும் ஒரு நிலை தான் இந்த ஆன்மீக நிலை.

முடிவு!
ஆன்மீக நிலைக்கும் நுழைந்த பிறகு, உங்கள் வாழ்க்கை ஒரு வெளிச்சத்தை தேடியதாக இருக்கும். அதில் எதிர்பார்ப்புகள் என்று எதுவும் இருக்காது. இதில், நீங்கள் பிறருக்கு உங்கள் அனுபவங்களை எல்லாம் வரித்து வாழ்க்கையை பற்றி ஒரு ஆசானாக கற்றுக் கொடுத்துக் கொண்டு இருப்பீர்கள். இது, ஆனந்தமான துவக்கம் கொண்ட வாழ்க்கையின் முடிவு நிலை.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *