இந்தியாவை பற்றிய வாய்பிளக்க வைக்கும் அதிர்ச்சிகரமான தகவல்கள் – Tamil VBC

இந்தியாவை பற்றிய வாய்பிளக்க வைக்கும் அதிர்ச்சிகரமான தகவல்கள்

இந்தியா உலகின் கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளின் பிறப்பிடமாக கொண்டாடப்படும் நாடு என்பதில் சந்தேகமே இல்லை. உலகம் முழுவதும் உள்ள மக்களின் கவனம் இந்தியாவை நோக்கி திரும்ப காரணம் நமது நாட்டில் இருக்கும் சிறப்புகள்தான். இயற்கை வளத்திலும், மனித வளத்திலும் உலகின் மிகப்பெரிய நாடாக உள்ள இந்தியாவிற்கு அதன் வளங்களுக்கு ஏற்ற அளவிற்கு வளர்ச்சி இல்லை என்பதுதான் எதார்த்த உண்மை. அதற்கு காரணமும் நாமும், நாம் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகளும்தான் காரணம் என்பது மறுக்கமுடியாத உண்மை.

தவறானவர்களின் கைகளில் இருந்தாலும் இந்தியா இன்றும் தனித்தன்மையுடன் இருக்க காரணம் அதன் பலவேறு சிறப்புகள்தான். இதில் துரதிஷ்டமான செய்தி என்னவென்றால் இந்தியாவின் பல்வேறு சிறப்புகளை பற்றி நமக்கே தெரியாது என்பதுதான். இந்தியாவின் முழுமையான சிறப்புகளை அறிந்துகொண்ட எவரும் எந்த சூழ்நிலையிலும் தான் ஒரு இந்தியர் என்று பெருமிதத்துடன் சொல்லலாம். உங்களை பெருமைப்பட வைக்கும் இந்தியாவின் பெருமைகளில் சிலவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்.

யுனெஸ்கோவின் பாரம்பரிய சுற்றுலாத்தலங்கள்
இந்தியாவின் தாஜ்மஹால் என்பது உலகின் மிகவும் பிரபலமான பாரம்பரிய சின்னம் ஆகும். ஆனால் அது மட்டுமின்றி இந்தியாவில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட மேலும் 31 பாரம்பரிய சின்னங்கள் உள்ளது. ஆனால் அமெரிக்காவில் 23 மட்டும்தான் உள்ளது. இந்தியாவின் பன்முகத்தன்மைக்கேற்ப இதில் அனைத்து மத அடையாளங்களும் உள்ளது. ராஜஸ்தானின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் சிம்லாவின் மலைப்பாதை, அஜந்தா, எல்லோரா குகைகள் மேலும் பல பூங்காக்கள் என பல உள்ளது. மேலும் யுனெஸ்கோ இன்னும் இந்தியாவை ஆராய்ந்துகொண்டுதான் இருக்கிறது.

அனைத்து மதங்களும் இந்தியாவில் உள்ளது
இந்தியாவில் வாழும் 80 சதவீத மக்கள் இந்துக்கள். இந்தியாவில் உலகின் மிகப்பெரிய மதங்கள் முதல் மிகச்சிறிய மதம் வரை அனைத்தும் உள்ளது.கேரளா கோவா போன்ற மாநிலங்களில் நீங்கள் அதிகளவு சர்ச்சுகளை பார்க்கலாம். டெல்லி, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் ஜெயின் மத கோவில்களை அதிகம் பார்க்கலாம். உத்திரபிரதேசம், பீகாரில் புத்தமத கோவில்களை பார்க்கலாம். இந்தியாவில் 14 சதவீத முஸ்லீம் மக்கள் இந்தியா முழுவதும் பரவியுள்ளனர். சொல்லப்போனால் உலகில் அதிகளவு முஸ்லீம் மக்கள் வாழும் இரண்டாவது நாடு இந்தியாதான்.

சைவ உணவு சாப்பிடுபவர்கள்
உலகிலேயே அதிகளவு சைவ உணவு சாப்பிடுபவர்கள் வாழும் நாடு இந்தியாதான். இந்தியாவில் உள்ள இந்துக்கள் அனைவரும் சைவ உணவு சாப்பிடுபவர்கள் இல்லை. இந்தியாவில் இருக்கும் 20 முதல் 40 சதவீதம் உள்ள இந்துக்கள் சைவ உணவு சாப்பிடுபவர்கள்.

தபால்துறை
இந்தியாவின் தபால்துறை உலகின் மிகப்பெரிய தபால்துறைகளில் ஒன்று. இந்தியாவில் சில அசாதாரண சூழல்களிலும், இடங்களிலும் தபால்நிலயம் உள்ளது. இமாசலப்பிரதேசத்தில் உள்ள ஹிக்கிம் நகரில் உள்ளதுதான் உலகின் மிகப்பெரிய தபால்நிலையம் ஆகும். 70 களில் ராஜஸ்தானில் ஒட்டகங்கள் மூலம் கடிதங்கள் விநியோகிக்கப்பட்டது என்பது சுவாரஸ்யமான ஒன்று.

வாரணாசி
உலகின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்று வாரணாசி ஆகும். புனித நகரமான வாரணாசி 3000 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டது, இன்றும் அதே கம்பீரத்துடன் உள்ளது. இந்துக்கள் இந்த நகரம் இன்னும் பழமையானது என்றும் சிவபெருமானால் நிறுவப்பட்டது என்றும் நம்பப்படுகிறது.

அதிக ஆங்கில மொழி பேசும் நாடு
உலகில் அதிகமாக ஆங்கிலம் பேசுபவர்கள் வாழும் இரண்டாவது பெரிய நாடு இந்தியா ஆகும். இந்தியாவில் அலுவலக மொழிகளான 22 மொழிகளில் ஆங்கிலமும் ஒன்றாகும் மேலும் அரசாங்கத்தின் கூட்டு மொழியாகவும் இருக்கிறது.

கும்பமேளா
இந்தியாவின் மிகமுக்கியமான விழாக்களில் ஒன்று கும்பமேளா ஆகும். சில இடங்களில் 3 ஆண்டுக்கு ஒரு முறையும், சில இடங்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் நடைபெறுகிறது. குறிப்பாக அலகாபாத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் இந்த கும்பமேளா மிகவும் பிரபலமானது. 2013ல் நடைபெற்ற கும்பமேளாவில் 1 கோடி மக்கள் கலந்துகொண்டனர். உலகில் மிகஅதிக மக்கள் கலந்து கொண்ட விழா இதுதான்.

மேகாலயா
இந்தியாவின் மேற்கில் இருக்கும் ராஜஸ்தான் அதன் பாலைவனங்களுக்காக புகழ்பெற்றது, அதேபோல அதன் வடகிழக்கில் இருக்கும் மேகாலயா தண்ணீருக்கு புகழ்பெற்றது. உலகிலேயே அதிக ஈரப்பதம் மிக்க இடம் என்றால் அது இதுதான். காசி மலையில் இருக்கும் மாவ்சினிராம் என்ற கிராமம் உள்ளது. இங்கு ஆண்டிற்கு 467 மில்லி மீட்டர் மழைபெய்கிறது. உலகில் இருக்கும் மற்ற எந்த இடங்களை காட்டிலும் இதுதான் மிகஅதிகமான அளவாகும். இங்கிருந்து 10 கிமீ தொலைவில் இருக்கும் சிரபுஞ்சி இரண்டாவது இடமாகும்.

கரி பாவோலி
உலகின் மிகப்பெரிய மசாலா பொருட்களின் சந்தை இந்தியாவில்தான் உள்ளது. பழைய டெல்லி சாலைகளில் நீங்கள் நடக்கும் போது மசாலா பொருட்களின் வாசனைகள் உங்களை கரி பாவோலியை நோக்கி இழுத்து செல்லும். நான்கு நூற்றாண்டுகள் பழமையான இந்த சந்தை மசாலாப்பொருட்கள், இனிப்புகள், தானியங்களுக்கு புகழ்பெற்றது.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *