வித்தியாசமா காதலை சொல்றதுல இந்த 4 ராசிகள் தான் கில்லாடிகளாம்… யார் யார்னு தெரியுமா? – Tamil VBC

வித்தியாசமா காதலை சொல்றதுல இந்த 4 ராசிகள் தான் கில்லாடிகளாம்… யார் யார்னு தெரியுமா?

காதலை வெளிபடுத்த பல்வேறு வழிகள் உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஒவ்வொருவரும் ஒரு வழியை தேர்ந்தெடுக்கின்றனர். நீங்கள் எந்த வழியில் உங்கள் காதலை வெளிப்படுத்துவீர்கள்?

அதற்கும் நம்முடைய ராசிக்கும் தொடர்பு இருக்கிறதா என்று கேட்டால் ஜோதிட வல்லுநர்கள் இருக்கின்றது என்று தான் குறிப்பிடுகிறார்கள். அதிலும் சில குறிப்பிட்ட ராசிகள் தங்களுடைய காதலை வெளிப்படுத்துவதில் வித்தியாசமான போக்கை கடைபிடிக்கும் கில்லாடிகளாகவே இருக்கிறார்கள்.

ஜோதிடம்
ஜோதிடம் மூலம் நாம் நம் வாழ்க்கையின் பல விஷயங்களை அறிந்து கொள்கிறோம். கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் வருங்காலத்தைப் பற்றி நமக்கு கூறுவது ஜோதிடம், இன்னும் சொல்லப் போனால், நமது குணநலன்களைக் கூட ஜோதிடம் மூலம் அறிந்து கொள்ள முடியும். இன்னும் ஒரு விஷயம் சொல்லவா? காதலை நீங்கள் எப்படி வெளிப்படுத்துவீர்கள் என்பது கூட ஜோதிடத்தின் மூலம் அறிய முடியும். கேட்கவே ஆச்சர்யமாக இருக்கிறதா?

காதல்
சிலர் தனது காதலை இரண்டு நிமிட பேச்சில் வெளிபடுத்துவார்கள், சிலர் ஒரு நெருக்கமான அணைப்பின் மூலம் வெளிபடுத்துவார்கள். சிலர் கண்களால் பேசி தனது காதலை தெரிவிப்பார்கள். இன்னும் சிலர் உடல் மொழி மூலம் அதாவது தொடுதல் மூலம் தனது காதலை வெளிபடுத்துவர்கள். இதனைப் பற்றி தான் நாம் இந்த பதிவில் காணவிருக்கிறோம். உங்கள் ராசிப்படி, நீங்கள் தொடுதல் மூலம் காதலை வெளிபடுத்துபவரா என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவைப் படியுங்கள்.

மேஷம்
மேஷ ராசியினருக்கு வார்த்தையை விட செயல் சிறப்பாக வரும். அவர்களுடைய உணர்வுகளை உடல் மொழி மூலம் வெளிபடுத்துவதை பழக்கமாக கொண்டிருப்பார்கள். அவர்கள் சாதாரணமாக பேசும்போது கூட மற்றவர்களின் தோளைப் பிடித்துக் கொண்டு பேசுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். இது காதலுக்கும் பொருந்தும். இரவு உணவிற்கு வெளியில் செல்லும்போது தனது காதலின் கைகளைப் பற்றி கொண்டு நடப்பது அவர்களுக்கு பிடிக்கும். காலை நேர நடைபயிற்சியிலும் இதே பழக்கம் அவர்களுக்கு உண்டு. மேஷ ராசியினரின் காதல் தொடுதல் என்ற உடல் மொழி வழியாக உணரப்படும் என்பதை மற்றவர்கள் புரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
ரிஷப ராசியினர் எப்போதும் தீவிர சிந்தனையில் இருந்து கொண்டிருப்பார்கள். அவர்களின் முகத்தைப் பார்த்து அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையை கணிக்க முடியாது. அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி யாரிடமும் எதையும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள், அவர்களின் காதல் வாழ்க்கையைப் பற்றி வெளியில், பொது இடங்களில் தெரிவிக்கவும் மாட்டார்கள். எந்த ஒரு சூழ்நிலையையும் அலட்சியம் செய்வதில் அவர்களை விட புத்திசாலி வேறு யாரும் இருக்க முடியாது. ஆகவே பலரையும் அவர்கள் கவனிக்க தவறிவிடுகின்றனர். ஆனால் தனது காதல் துணையிடம் அவர்கள் உடல் மொழியால் தொடுதல் மூலமாக காதலை வெளிபடுத்துகின்றனர். அதனால் ரிஷப ராசியினரின் காதல் ஜோடி, அவரின் முழு கவனத்தையும் தன் வசம் வைத்துக் கொள்கின்றனர்.

விருச்சிகம்
விருச்சிக ராசியினரை பேச்சில் யாராலும் வெல்ல முடியாது, ஆனால் காதல் என்று வந்துவிட்டால், அவர்கள் உடல் மொழியான தொடுதலை தேர்ந்தெடுக்கின்றனர். அவர்கள் தங்கள் காதலை வெளிபடுத்த கைகள் மற்று ஒட்டுமொத்த உடல் பாகங்களையும் பயன்படுத்தி காதலை வெளிபடுத்துகின்றனர். அவர்கள் நேசிப்பதை உணரவும், தங்களுடைய அன்பை வெளிக்காட்டவும் அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழி தொடுதல் மொழி.

தனுசு
தனுசு ராசியினர், எதையும் வெளிக்காட்டத் தெரியாதவர். ஆனால், நீங்கள் அவருக்கு மிகவும் சிறப்பானவர் என்பதை உங்களுக்கு உணர்த்த தொடுதல் மொழியை அவர் தேர்வு செய்கிறார். எந்த ஒரு விவாதத்திலும் நீண்ட நேரம் பேசி, ஆதிக்கம் செலுத்தி விருச்சிக ராசியினருக்கு நல்ல ஒரு போட்டியாக வரலாம். ஆனால் காதலில் தனுசு ராசியினர் அடங்கிப் போக விரும்புவார். அவரின் காதல் துணை ஆதிக்கம் செலுத்துவதை அதிகம் விரும்புவார். அவரின் காதல் ஜோடி, தொடுதல் மூலம் காதலை வெளிபடுத்தலாம். இது அவரின் உணர்ச்சி மிகுந்த தன்மை மட்டுமல்ல, அவரின் உண்மையான அன்பையும் ஒரு சிறு நட்பான அணைப்பின் மூலம் வெளிபடுத்த விரும்புவார்.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *