இயேசுநாததர் பூமியில் பிறக்கும்முன் எங்கிருந்தார்? என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா? – Tamil VBC

இயேசுநாததர் பூமியில் பிறக்கும்முன் எங்கிருந்தார்? என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா?

அன்பு, அஹிம்சை, தியாகம், மன்னிப்பு, சகோதரத்துவம் ஆகியவற்றைப் போதிக்க இயேசு கிறிஸ்து இப் பூமியில் மனிதனாக அவதரித்தார்.

இப் பூமிக்கு வருவதற்கு முன்னால் இயேசு கிறிஸ்து என்ன செய்து கொண்டிருந்தார் என்னும் கேள்விக்கு கிறிஸ்தவ மதம் தெளிவான பதிலைத் தருகிறது. ஏரோது (Herod) என்னும் பெரும் மன்னரின் ஆட்சிக் காலத்தில் இயேசு கிறிஸ்து, இஸ்ரேலில் உள்ள பெத்லேஹம் நகரத்தில் கன்னி மேரி மாதாவுக்கு மகனாகப் பிறந்தார்.

இயேசு பிறப்பு
“இயேசு கிறிஸ்து ஆண்டவராக இருக்கிறார். இயேசு என்பவர் மூன்று இறைத் திருவுருக்களில் (Trinity) ஒருவராக இருக்கிறார். இவருக்குத் தொடக்கமும் இல்லை. முடிவும் இல்லை.” என கிறிஸ்துவ தத்துவங்கள் கூறுகின்றன. இயேசு என்பவர் எப்பொழுதும் உயிர்த்திருப்பவர் என்றால் அவர் மனிதனாக அவதரிப்பதற்கு முன்னால் என்ன செய்து கொண்டிருந்தார்? ரோமப் பேரரசு நிலவிய காலத்தில் அவருடைய நிலை என்ன? என்கின்ற கேள்விகள் எழுகின்றன. இவற்றுக்கான விடைகளைக் காண ஏதேனும் வழிகள் உண்டா? மூன்று திருவுருத் தத்துவம் (Trinity) இக்கேள்விகளுக்கான விடைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளன.

பைபிள் என்ன சொல்கிறது?
ஆண்டவனைப் பற்றிய மூலத்தினை அறிவதற்கு ஆதாரமாக பைபிள் திகழ்கிறது. இயேசு கிறிஸ்து இவ்வுலகத்திற்கு வருவதற்கு முன்னால் என்ன செய்து கொண்டிருந்தார் என்கின்ற கேள்விக்கும் கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிள் விடை பகர்கிறது. இறைவனைப் பற்றியத் தகவல் களஞ்சியமாக பைபிள் திகழ்கிறது.

இயேசு உருவங்கள்
“ஆண்டவர் ஒருவரே. ஆனால் அவர் மூன்று திருவுருக்களில் ஜீவிக்கிறார்” என்று கிறிஸ்துவ மதம் போதி்க்கிறது. தந்தை, தேவகுமாரன், புனித ஆவி ஆகிய மூன்று நபர்களின் வழியாக ஆண்டவர் வாழ்கிறார். மூன்று திருவுருக்கள் பற்றி (Trinity) பைபிள் குறிப்பிடவில்லை என்றாலும், பைபிள் முழுவதும் இந்த மூன்று திருவுருக்கள் பற்றிய கொள்கைகளும் கோட்பாடுகளும் நிரம்பியிருக்கின்றன. மனிதர்களால் இந்த மூன்று திருவுருக்கள் (Trinity) பற்றிய கோட்பாட்டினை முழுவதுமாகப் புரிந்து கொள்ள முடியாது என்பதுதான் அடிப்படையான சிக்கல் ஆகும். மூன்று திருவுருக்கள் கோட்பாடு முழுவதும் நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டது.

உலகத் தோற்றம்
உலகம் தோன்றுவதற்கு முன்பே இயேசு உயிர்த்திருந்தார். மூன்று திருவுருக்களாகக் குறிப்பிடப்படும் (தந்தை, தேவகுமாரன், புனித ஆவி) அனைவருமே கடவுள்கள் தான். பிரபஞ்சம் மற்றும் படைப்புகள் உருவாக்கத்திற்கு முன்பே இயேசு இருந்தார்.

“அன்பே கடவுள் ( John 4:8, NIV)” என்று பைபிள் கூறுகின்றது. பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கு முன்பே மூன்று திருவுருக்களும் (Trinity) ஒருவரோடு ஒருவர் உறவாக இருந்தனர். மூன்று பேரும் ஒருவருக்கு ஒருவர் அன்பாக இருந்தனர். “தந்தை”, “மகன் (தேவ குமாரன்)” என்னும் சொற்கள் சிறு குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளன. மனிதனின் புரிதல்படி மகனுக்கு முன்பாக தந்தை பிறந்திருக்க வேண்டும். ஆனால் மூன்று திருவுருக்கள் தத்துவத்தை நாம் அவ்வாறாகக் கருத இயலாது.

தூய்மையான ஆவி
திருவுருக்களாகச் சொல்லப்படும் நபர்களான தந்தை, மகன், தூய ஆவி ஆகியோரை, அவர்களைக் குறிக்கப் பயன்படுத்தும் சொற்களின் அடிப்படையில் பொருள் புரிந்து கொண்டால், இயேசு என்பவர் படைக்கப்பட்ட உயிரினம் (created being) என்றாகி விடுவார். அப்படிப் புரிந்து கொண்டால் அக்கருத்து கிறிஸ்துவ மதத்துக்கு எதிரான சிந்தனையாக மாறிவிடும்.

இந்தக் குழப்பத்திற்கான பதிலையும் இயேசுவின் வார்த்தைகளின் மூலமாகவே பைபிள் நமக்குத் தருகிறது.

“இயேசு அவர்களிடம் சொன்னார்,” இன்றைய நாளைப் போலவே என்னுடைய தந்தை எப்பொழுதும் அவருடைய செயலில் கருத்தாக இருப்பார். அவரைப் போலவே நானும் செயலாற்றுகிறேன்” (John 5:17, NIV). எனவே, திருவுருக்கள் மூன்று பேரும் எப்பொழுதும் செயலாற்றிக் கொண்டே இருக்கின்றனர் எனத் தெரிய வருகின்றது.

பிரபஞ்சம் படைப்பு
பெத்லஹேமில் இயேசு தோன்றுவதற்கு முன்னால் இயேசு செய்த பணிகளுள் ஒன்று இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியது ஆகும். தந்தை அதாவது ஆண்டவர்தான் ஒரே படைப்பாளர் என ஓவியங்கள் மற்றும் திரைப்படங்களில் வாயிலாக இதுவரை நாம் அறியப் பெற்றோம். ஆனால் பைபிள் நமக்குக் கூடுதல் தகவல்களைத் தருகிறது.

“ஆதியில் சொல் இருந்தது. அந்தச் சொல் ஆண்டவருடன் இருந்தது. அந்தச் சொல் ஆண்டவராக இருந்தது. ஆதியில் அவர் ஆண்டவரோடு இருந்தார். அவர் மூலமாக அனைத்தும் உருவாக்கப்பட்டன. அவர் இல்லாமல் எதுவும் உருவாகியிருக்காது (John 1:1-3, NIV)

பிரபஞ்சப் பொருள்கள்
குமாரன் என்பது மறைவாய் இருக்கும் கடவுளின் படிமம். அவருக்காக அனைத்துப் பொருட்களும் உருவாக்கப்பட்டன.

“வானுலகில் உள்ளவையும்… மண்ணுலகில் உள்ளவையும்..கண்ணுக்குப் புலனாகும் பொருட்களும்… புலனாகாப் பொருட்களும்… சிம்மாசனங்களும்… அதிகாரங்களும்…ஆளுபவர்களும்… அதிகாரிகளும்.. இப்படியாக அனைத்தும் அவர் மூலமாக அவருக்காக உருவாக்கப்பட்டன (Colossians 1:15-15, NIV)”

மனித படைப்பு
“கடவுள் சொல்கிறார்” மனித சமூகத்தை நம்முடைய பிம்பமாக உருவாக்குவோம். நம்மைப் போலவே.. (Genesis 1:26″)”. என்கின்ற வசனங்கள், படைப்புகள் அனைத்தும் தந்தை, குமாரன், தூய ஆவி ஆகிய மூவராலும் இணைந்து உருவாக்கப்பட்டன என்பதை உணர்த்துகின்றன.

மூன்று திருவுருக்களும் (Trinity) ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. ஒருவர் இன்றி மற்றவர் தனித்து இயங்க முடியாது. ஒருவரைப் பற்றி மற்றவர் அறிகிறார். எல்லாவற்றிலும் அவர்கள் இணைந்தே செயல்படுகின்றனர். இந்த உறவின் நெருக்கத்தில் ஒரு முறை மட்டுமே விரிசல் ஏறடபட்டது. இயேசு சிலுவையில் ஏற்றப்படும் போது மட்டும் அவர் தனித்து விடப்பட்டார்.

இயேசுவின் மாறுபட்ட அவதாரம்
இயேசு பெத்லஹேமில் பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே இந்த பூமியில் தோன்றினார். மனிதனாக இல்லாமல் கடவுளின் தேவதையாகத் தோன்றினார் (Angel of the Lord) என பைபிள் ஆராய்ச்சியாளர்கள் பலர் கருதுகின்றனர். பழைய ஏற்பாட்டில் 50 இடங்களுக்கு மேல் கடவுளின் தேவதை குறித்த மேற்கோள்கள் வருகின்றன. இறை உயிரான கடவுளின் தேவதை (“the” angel of the Lord) படைக்கப்பட்ட தேவதையிலிருந்து (created angels) மாறுபட்டவர்.

தேவதை
இந்த தேவதை இயேசுவின் மாறுவடிவமாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. இந்தத் தேவதை கடவுளின் சார்பாக அவ்வப்போது மனிதர்களிடம் உறவாடியது. இந்தக் கடவுளின் தேவதைதான் சாராவின் பணியாள் ஹாகரையும் அவளுடைய மகன் இஸ்மாயேலையும் (Hagar and her son Ishmael) ஆபத்திலிருந்து மீட்டெடுத்தது. இந்த தேவதைதான் மோசஸ் முன் தோன்றியது. இவர்தான் கடவுளின் தூதர் இலியாவுக்கு (Elijah) உணவளித்தது. இவர்தான் கிதியோனை (Gideon) அழைப்பதற்காக வந்தார். இக்கட்டான காலங்களில் எல்லாம் கடவுளின் தேவதை தோன்றி உதவியது. “மனித குலத்திற்காக நான் எப்போதும் பரிவோடு இருப்பேன் (interceding for humanity)” என்கின்ற இயேசுவின் வார்த்தைகளை உணர்த்துவது போல கடவுளின் தேவதை வருகை இருந்துள்ளது.

மனித குலத்துக்காக
இயேசுவின் பிறப்புக்குப் பிறகு கடவுளின் தேவதை வருகை தரவில்லை என்பதும் இங்குக் கவனிக்கத் தக்கது. ஒரே சமயத்தில் மனித உயிராகவும், கடவுளின் தேவதையாகவும் அவர் இயங்க முடியாதல்லவா? இயேசு மனிதனாக அவதரிப்பதற்கு முன்னர் நிகழ்ந்த இந்த நிகழ்வுகள் எல்லாம், “theophanie” அல்லது “christophanies” என அழைக்கப்படுகிறது அதாவது “மனித குலத்துக்காகக் கடவுளின் தோற்றம்” எனக் கருதப்படுகிறது.

அடிப்படைகளைப் புரிந்து கொள்வோம்.
மேற்கண்ட விசயங்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் பைபிள் தெளிவாக விளக்கம் சொல்லவில்லை. அடிப்படையான குறிப்புகளை மட்டுமே தருகின்றது. பல தகவல்களுக்கு உரிய தெளிவான விளக்கங்கள் கிடைக்கவில்லை. பல விசயங்கள் மனிதனுடைய புரிந்து கொள்ளும் திறனுக்கு அப்பாற்பட்டவையாக உள்ளன.

கடவுளாக இருக்கும் இயேசு எப்பொழுதும் மாறாமல் இருக்கிறார். மனித குலத்தைப் படைப்பதற்கு முன்பிருந்தே அவர் கருணை உடையவராகவும், மன்னிக்கும் தாராள குணம் கொண்டவராகவும் இருந்து வருகிறார்.

அவர் பூமிக்கு அவதரித்த போது தன்னுடைய தந்தையின் அதாவது கடவுளின் முழுமையான பிரதிபலிப்பாகத் திகழ்ந்தார். தந்தை, குமாரன், தூயஆவி ஆகிய மூவரும் முழுமையானவர்களாகவும் ஒருவரோடு ஒருவர் இசைவு கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். மனித அவதாரத்திற்கு முன்னர் இருந்த இயேசுவைப் பற்றிய உண்மைகள் நமக்குத் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும் அவர் எப்பொழுதும் அன்பின் வடிவமாகவும் அன்பை மட்டுமே போதிப்பவராகவும் இருந்து வருகிறார் என்பது மறுக்க முடியாத உண்மை.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *