திருமணம் தள்ளிப் போகுதா? இந்த பெண் தெய்வத்தை வழிபடுங்க… அடுத்த முகூர்த்தத்துலயே டும் டும் டும்… – Tamil VBC

திருமணம் தள்ளிப் போகுதா? இந்த பெண் தெய்வத்தை வழிபடுங்க… அடுத்த முகூர்த்தத்துலயே டும் டும் டும்…

திருமணம் தொடர்பான பிரச்சனைகள் நீங்க தேவி காத்யாயனியை வழிபடுங்கள்

ஆமாங்க!. தேவி துர்கையின் ஒன்பது வடிவங்களை நவராத்திரியில் வழிபட்டு அவள் ஆசியை நாம் பெறுகிறோம். ஆதி சக்தி துர்கை அவளின் பக்தர்களின் வாழ்வில் உள்ள எல்லா பிரச்சனைகளையும் போக்கி அவர்கள் வாழ்க்கையில் இன்பத்தை தருகிறாள்.

இந்த ஒன்பது வடிவங்களில் ஓர் வடிவமாகிய காத்யாயனி தேவியை வழிபடுவதால் , திருமணம் தொடர்பான எல்லா பிரச்சனைகளும் தீருவதாக நம்பப்படுகிறது. மாங்கல்ய தோஷம் போன்ற கடுமையான தோஷங்களையும் நிவர்த்தி செய்யும் சக்தி தேவி காத்யாயனிக்கு உள்ளதாக கூறப்படுகிறது.

காத்யாயினி
காத்யாய முனிவரின் மகளாக இவள் பிறந்ததால் காத்யாயனி என்று அழைக்கப்படுகிறாள். நான்கு கைகள் கொண்டு, இடது மேல் கையில் ஒரு தாமரை மலரும், கீழ் இடது கையில் ஒரு நீண்ட வாளும் கொண்டு காட்சி தருகிறாள். வலது கைகளில் அபயம் மற்றும் வரத முத்திரையுடன் காட்சி தருபவள் தவி காத்யாயனி. மஞ்சள் நிற புடவையில் ஒரு சிங்கத்தின் மீது வீற்றிருப்பாள்.

நன்மைகள்
தேவி காத்யாயனியை வழிபடுபவர் இல்லத்தில் அமைதியும் செல்வமும் தழைத்து வளரும். திருமணம் தொடர்பான சிக்கல்களை அனுபவித்து வரும் நபர்கள் தேவி காத்யாயனியை வழிபடுவது சிறப்பு. தாமதமாகும் திருமணம், கணவன் மனைவி இடையில் அடிக்கடி மனக்கசப்பு, சரியான துணையை கண்டுபிடிக்க முடியாமல் இருப்பது, போன்ற பிரச்சனைகளை அனுபவிப்பவர்கள் நவராத்திரியில் காத்யாயனி தேவியை நோக்கி விரதம் இருப்பதால் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். காளிகா புராணத்தில் இந்த தேவியைப் பற்றி விளக்கப்பட்டுள்ளது. வலிமையின் கடவுளாகவும் தேவி காத்யாயனி அறியப்படுகிறாள். ஆகவே பயத்தைப் போக்கவும் இந்த தேவியை நாம் வழிபடலாம்.

பூஜை
ஜாதகத்தில் 12ம் வீட்டோடு தொடர்புடையவர் தேவி காத்யாயனி :

பிறந்த ஜாதகத்தில் வியாழன் கிரகத்தோடு தொடர்புடைய கடவுளாக இவர் அறியப்படுகிறார். தேவி காத்யாயனி பிரம்ம மண்டலத்தின் ஆதிஷ்ரஷ்டி தேவியாக அறியப்படுகிறாள். இறைவன் கிருஷ்ணரின் அன்பைப் பெறுவதற்காக கோகுலத்தில் உள்ள பெண்கள் காத்யாயனி தேவியை நோக்கி வழிபாடு நடத்தியதாகக் கூறுவர். பாகவத புராணத்தில் இவள் யமுனை நதியில் குளித்தாகக் கூறப்படுகிறது. அதனால் தேவி காத்யாயனிக்கு சந்தனக் கட்டை, பூக்கள், ஊதுபத்தி போன்றவற்றை கொண்டு பூஜை செய்து விரதம் இருந்து வழிபடுவர்.

மகா காத்யாயனி மந்திரம்
திருமணம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் கீழே உள்ள மந்திரங்களை ஜெபித்து திருமண தடை நீங்கப் பெறலாம்.

மகா காத்யாயனி மந்திரம் :
காத்யாயனி மஹாமாயே
மகாயோகின்யதீச்வரி
நந்தகோபசுதம் தேவி
பதிம் மீ குருதே நமஹ

திருமணத்திற்கான காத்யாயனி மந்திரம் :
ஓம் ஹ்ரிங் காத்யாயனியை ஸ்வாஹா, ஹ்ரிங் ஷ்ரிங் காத்யாயனியை ஸ்வாஹா

சீக்கிரம் திருமணம் நடைபெற
சீக்கிரம் திருமணம் நடைபெற காத்யாயனி மந்திரம் :
காத்யாயனி மஹாமாயே
மகாயோகின்யதீச்வரி
நந்தகோபசுதம் தேவி
பதிம் மீ குருதே நமஹ

திருமணம் தாமதம்
திருமண தாமதம் ஆகிக்கொண்டே புாகிறதென்றால், அந்த தடை நீங்குவதற்கு நீங்கள் கீழ்கண்ட காத்யாயின் மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.
ஹே கௌரி ஷங்கர் அர்தங்கி யதா த்வம் ஷங்கர் பிரியா
ததா மாம் குரு கல்யாணி கான்டகம் சுதுர்லபம்

திருமண தடைகள் நீங்க
திருமண தடைகள் நீங்க நீங்கள் ஜெபிக்க வேண்டிய காத்யாயனி மந்திரம்

ஹே கௌரி ஷங்கர் அர்தங்கி யதா த்வம் ஷங்கர் பிரியா
ததா மாம் குரு கல்யாணி கான்டகம் சுதுர்லபம்
திருமண தாமதத்தை போக்க காத்யாயனி சூரிய மந்திரம்
ஓம் தேவேந்திரனி நமஸ்துப்யம் தேவேந்திரப்ரிய பாமினி
விவாஹம் பாக்கியம் ஆரோக்கியம் ஷீக்ர லாபம் ச தேஹி மீ

விரும்பிய துணையை அடைய
நீங்கள் விரும்பிய துணையை உங்கள் வாழ்க்கையில் அடைய வேண்டுமென்றால் நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் இதுதான்.
ஓம் தேவேந்திரனி நமஸ்துப்யம் தேவேந்திரப்ரிய பாமினி
விவாஹம் பாக்கியம் ஆரோக்கியம் ஷீக்ர லாபம் ச தேஹி மீ

ஆசிர்வதிக்கப்பட்ட திருமணம்
ஆசிர்வதிக்கப்பட்ட திருமண வாழ்க்கை பெற இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்.
ஓம் ஷங் சங்கராய சகல் ஜன்மர்ஜீத் பாப் வித்வன்ஸ் நாய்
புருஷார்த் சதுச்தை லாபய் ச பதிம் மீ தேஹி குரு குரு ஸ்வாஹா

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *