செய்வினையை கண்டுபிடிக்க சித்தர்கள் சொல்லும் ரகசியம் இதுதான்… நீங்களே அதை விரட்டவும் செய்யலாம்…! – Tamil VBC

செய்வினையை கண்டுபிடிக்க சித்தர்கள் சொல்லும் ரகசியம் இதுதான்… நீங்களே அதை விரட்டவும் செய்யலாம்…!

எல்லா உயிரினங்களுடைய ஆசையும் பிறவியை அறுப்பது தான் என்று தான் இந்து மத் குறிப்பிடுகின்றது. ஒவ்வொரு பிறவியாக எடுத்து திரும்ப உலகில் பிறக்கின்றவர்கள் அவர்கள் செய்த கர்ம வினைகளையும் அதற்கான பலன்களையும் அனுபவித்தே ஆக வேண்டும்.கர்ம வினை பலன் என்றால் வெறுமனே தீமையை மட்டும் குறிப்பது இல்லை.

நாம் செய்த வினைகளுக்கு ஏற்றவாறு அது நன்மையாகவும் இருக்கலாம் தீமையாகவும் இருக்கலாம். அந்த வகையில் நாம் பயப்படுகிற செய்வினை இருக்கிறதல்வா அது கூட நம்முடைய கர்ம வினையின் பலனாகத்தான் நடக்கிறது என்றே சித்தர்கள் குறிப்பிடுகிறார்கள்.

செய்வினை
மற்றவர்கள் மீது பொறாமையும் வஞ்சனையும் கொண்ட மனிதர்கள் நேரடியாக அவர்களை எதிர்க்கத் துணிவில்லாமல், மறைமுகமாகத் தாக்கி அழிக்கவே நினைக்கிறார்கள். அதற்காக அவர்கள் எடுக்கும் மிகப்பெரிய ஆயுதமாகத் தான் இந்த ஏவல், பில்லி சூன்யங்கள், செய்வினைகள் செய்யப்படுகின்றன. நம்முடைய நாட்டில் மட்டும் தான் இந்த பழக்கம் இருக்கின்றது என்று நினைக்காதீர்கள். வெளிநாடுகளிலும் இந்த கொடுமை இருக்கிறது. அதேபோல் இந்த விஷயங்களுக்கு எந்த மதமும் கூட விதிவிலக்காக இருக்கவில்லை.

மாந்திரீகம்
மாந்திரீகத்தின் மூலமும் அடுத்தவர்களுக்குக் கெடுதலை உண்டாக்குகின்ற மனிதர்கள் யாரும் இந்த உலகத்தில் நிம்மதியாக இருக்க முடியாது. அப்படிப்பட்டவர்கள் இந்த உலகின் தீய சக்திகளாக இருப்பார்கள். அவர்குள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்கான மற்றவர்களுடைய நிம்மதியைக் கெடுக்க நினைப்பார்கள். இப்படிப்பட்டவர்களிடம் மாட்டிக் கொண்டு, முழிக்கிற நல்லவர்கள் தான் பூமியில் ஏராளம். இப்படி செய்வினையில் மாட்டிக் கொண்டவர்கள் அதை சரிசெய்து கொள்ள, மந்திரவாதிகளை நாடுகின்றனர். ஆனால் நூறுக்கு தொன்னூற்று ஐந்து பேர் தீர்வு கிடைக்காமல் தான் மாட்டிக் கொண்டு முழிக்கிறார்கள். இதற்கெல்லாம் சித்தர்கள் சில வழிமுறைகளைக் கூறியிருக்கிறார். அதைப் பற்றி இப்போது பார்ப்போம்.

புராண வரலாறு
செய்வினையினால் பெரிய பெரிய மகான்களும் கூட, பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அருணகிரிநாதர், ஆதிசங்கரர் ஆகியுாருமு் கூட இதற்கு விதிவிலக்கல்ல. மனிதர்கள் மட்டும் இல்லை. தெய்வத்திற்கே செய்வினை வைத்த காமெடிகள் கூட உண்டு. பண்டாசூரன் விக்ன எந்திரத்திரங்களின் மூலம் சக்தி தேவியின் சேனைகளை குழைத்தான். ஆனால் சக்தி தேவியால் அவனை வெற்றி பெற முடியவில்லையாம். சக்தி தேவிக்கு நிறைய அபசகுனங்களும் ஏற்பட்டது. அதற்குப்பிறகு, சக்தியின் பிள்ளையாகிய விநாயககரை வேண்டிக் கொண்டாராம். விநாயகப் பெருமான் அந்த விக்ஞன எந்திரத்தைக் கிழித்து கடலில் தூக்கி எநிற்தார்.

செய்வினைகளை அழிக்க என்ன செய்ய வேண்டும்?
செய்வினைகள், ஏவல், பில்லி சூன்யங்கள், திருஷ்டிப்படுதல் ஆகியவற்றை அழிப்பதற்கு மந்திரவாதிகளைத் தேடிப் போக வேண்டிய அவசியமே கிடையாது. அதற்கு நம்முடைய சித்தர்கள் சில வழிமுறைகளைக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். அதைச் செய்தாலே போதும்.

தேவையான பொருள்கள்

வெண்கடுகு – 250 கிராம்

நாய்க்கடுகு – 250 கிராம்

மருதாணி விதைகள் – 250 கிராம்

சாம்பிராணி பொடி – 250 கிராம்

அருகம்புல் பொடி – 50 கிராம்

வில்வ இலை பொடி – 50 கிராம்

வேப்பிலை பொடி – 50 கிராம்

செய்முறை
மேற்கண்ட இந்த எல்லா பொருள்களையும் எடுத்துக் கொண்டு, ஒரு குடுவைக்குள் போட்டு அடைத்து வைக்க வேண்டும். இந்த பொடியை செவ்வாய் மற்றும் வியாழக் கிழமைகளில் உங்களுடைய வீடு முழுவதும் சாம்பிராணி புகை போடுவது போல புகை போடுங்கள். நேரம் இருந்தால் இந்த முறையை தினமும் கூட செய்யலாம். அதனால் தவறு ஏதும் கிடையாது.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *