தோனிக்கு ஏன் 7 நம்பர் பிடிக்கும்! அந்த சீக்ரெட் தெரிஞ்சா உங்களுக்கும் இனி 7 தான் பிடிக்கும்..! – Tamil VBC

தோனிக்கு ஏன் 7 நம்பர் பிடிக்கும்! அந்த சீக்ரெட் தெரிஞ்சா உங்களுக்கும் இனி 7 தான் பிடிக்கும்..!

‘தல’ தோனியின் ஜெர்ஸியை கவனிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. ‘7’ என்ற எண் தோனியின் பனியனில் பொறிக்கப்பட்டிருக்கும்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் புகழுக்குக் காரணம் அவரது ஈடு இணையற்ற திறமையும், கடின உழைப்பும்தான் என்ற போதிலும், அவர் ‘ஏழு’ என்ற எண்ணை விரும்புகிறார் என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது. ஆம், எண் ஏழு வியத்தகு வினைகளுக்கு காரணமாகும்.

எண்ணியலில் ஏழாம் எண்ணின் சக்தி
சிலர் தங்கள் பிறந்தநாளுக்கான எண்ணியல் எண்ணை தங்கள் அதிர்ஷ்ட எண்ணாக கருதுவர். ஆனால், உலகம் முழுவதும் பெரும்பாலானவர்களால் அதிர்ஷ்ட எண்ணாக நம்பப்படுவது ‘ஏழு’ ஆகும். எடுத்த காரியம் வெற்றியாக முடிய அநேகர் எண் ‘7’ம் நம்பரையே பயன்படுத்துகின்றனர்.

எண் 7 ம் பாஸிட்டிவ் எனர்ஜியும்
ஒவ்வொரு எண்ணுக்கும் ஆன்மீக ரீதியான பலன் உண்டு. ஆனால், 7க்கான பலன் வேறு எந்த எண்ணிலும் கிடைக்காது. ஆன்மீகத்தின் அனைத்து பக்கங்களிலும் ‘ஏழு’ குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த எண்ணை பயன்படுத்துவர்கள் மீது அசாதாரண அளவில் இதன் தாக்கம் விளங்கும்.

மீண்டும் மீண்டும் 7 ம் எண் வருகிறதா?
எண்ணியலும் ஆன்மீகமும் இணையும்போது அது பல்வேறு அறிகுறிகளாக விரிவடைகிறது. எடுத்துக்காட்டாக, ஒருவர் மீண்டும் மீண்டும் ஓர் எண்ணை பார்க்கும்படி நேர்ந்தால் அதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. அப்படிப்பட்ட காட்சி, பிற்காலத்தில் நடக்க இருப்பதன் அறிகுறி என்றே நம்பப்படுகிறது.

தெய்வீக ஆசீர்வாதத்திற்குரிய 7
ஆன்மீகத்தில் 7 என்பது உண்மையை தேடுபவர்களை குறிக்கும் எண். ‘ஏழு’ எந்த குறிப்பிட்ட சமயத்திற்கும் உரியதல்ல. ஆனாலும் இதன் மீதான அருளை பின்பற்றுபவர்கள் ஒரே சக்திக்கு தங்களை சமர்ப்பித்துக்கொண்டவர்களாகவே இருப்பர். மீண்டும் மீண்டும் ஓர் எண் தோன்றுவதன் பலன் என்ன என்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்…

ஏழு என்றால் சரியான பாதை
தன்னுடைய வாழ்க்கையில் ஒருவர் மீண்டும் மீண்டும் எண் 7ஐ காண நேர்ந்தால், அந்த ஆணோ, பெண்ணோ இதுவரைக்கும் சரியான பாதையில்தான் வந்து கொண்டிருக்கிறார்கள் என்று பொருளாகும். அதே பாதையில் தொடர்ந்து பயணித்தால் வாழ்க்கையில் தங்கள் லட்சியத்தை அடைய முடியும்.

தொழிலில் ஏழு
வியாபாரத்தில் ஒருவர் 7 என்ற எண்ணை எதிர்கொள்ள நேர்ந்தால், எடுத்துக் கொள்கிற வேலையை முடிக்க வேண்டிய தேதி 7 என்று அமைந்தால், புதிதாக ஒரு வேலை ஏதாவது ஒரு மாதத்தில் 7ம் தேதியில் கைக்குக் கிடைத்தால் அல்லது பணம் அதேபோன்று தேதியில் கிடைத்தால் அது வெற்றிக்கான அறிகுறியாகும். உங்கள் வழியில் எதிர்ப்படும் எந்த சவாலையும் கடந்து வெற்றியை ருசிப்பீர்கள்.

777ம் தெய்வீக சக்தியும்
7 என்பதே பாஸிட்டிவ் எனர்ஜிக்கும் அதிர்ஷ்டத்திற்கும் உரியது. குறிப்பாக, 777 என்ற எண்ணை பயன்படுத்துபவர்கள் அல்லது 777 என்ற எண்ணை அடிக்கடி பார்க்க நேர்பவர்கள் தெய்வீக ஆற்றலை பெற்றிருப்பர். அது துரதிர்ஷ்டம் அணுகாமல் பாதுகாத்துக் கொள்ளும்.

ஏழாம் எண்ணும் ஆளுமைத் திறனும்
ஜோதிடத்தில் 7 என்பது நெப்டியூன் கிரகத்தை குறிக்கிறது. அது சந்திரனோடு நெருங்கிய தொடர்புடையது. இந்த எண்ணுக்குரியவர்கள் சுதந்திரமானவர்கள். உறுதியான ஆளுமை கொண்ட இவர்கள் அமைதியான முறையில் செய்யப்படும் கடினமான உழைப்பின் மீது நம்பிக்கை கொண்டவர்கள். ஓய்ந்திருக்க விருப்பமில்லாத இவர்கள், நம்பிக்கையுடன் அடி எடுத்து வைக்க தயங்காதவர்கள்.

பொருத்தமான துறைகள்
உண்மை, மேலும் மேலும் கற்றுக்கொள்வது, அறிவியல்பூர்வ விடைகளை தேடுவது போன்ற இயல்புகளே இத்தகைய மனிதர்களை நடத்தும். உற்சாகம், தர்க்கப்பூர்வமான ஆய்வு, காரண காரியங்களை ஆராய்வது போன்றவை இவர்களின் குணங்கள். இந்த எண்ணுடையவர்கள் விஞ்ஞானி, வல்லுநர், கண்டுபிடிப்பாளர், நிபுணர், சட்ட ஆலோசகர், முதலீட்டாளர், அமைச்சர், கல்வியாளர் ஆவதற்கு வாய்ப்பு உண்டு.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *