கோவில் நுழைவாயிலை மிதித்தால் என்ன அர்த்தம்? அதையே தாண்டினால் என்ன அர்த்தம்? – Tamil VBC

கோவில் நுழைவாயிலை மிதித்தால் என்ன அர்த்தம்? அதையே தாண்டினால் என்ன அர்த்தம்?

கோவிலுக்குள் நுழைகின்ற பொழுது, சிலருக்கு நுழைவு வாயில் படியை ஏறி மிதித்து சென்று தான் பழக்கம். சிலரைப் பார்த்திருப்போம். அகலமான படியாக இருந்தாலும் அதைக் கஷ்டப்பட்டு தாண்டி தான் செல்வார்கள். இது பற்றி சாஸ்திரங்களும் பெரியவர்களும் என்ன சொல்கிறார்? ஏறிச் செல்வது சரியா தாண்டிச் செல்வது சரியா என்று பார்ப்போம்.

பெரியோர்களும் சரி, சாஸ்திரங்களும் சரி கோவில் நுழைவாயில் கதவைத் தாண்டித் தான் செல்ல வேண்டும் என்று குறிப்பிடுகின்றனர். அதற்கான காரணம் என்ன என்று பார்ப்போம்.

கோயிலின் நுழைவாயிலில் குறுக்காக இருக்கிற முதல் படிக்கட்டின் மேல் ஏறி நிற்கக் கூடாது. தாண்டி தான் செல்ல வேண்டும். அதாவது கோவிலுக்குள் நுழைவதற்கு முன்னால் ஆறோ குளமோ இருந்தாலும் சரி, அல்லது வெளியில் நிச்சயம் தண்ணீர் குழாய் இருக்கும். அதில் கால், பாதங்களைக் கழுவி விட்டு தான் கோவிலுக்குள் நுழைய வேண்டும்.

கை மற்றும் கால்களைக் கழுவிய பின்னர், சில துளிகள் தண்ணீரை எடுத்து தலையில் சுற்றித் தெளித்துக் கொள்ளுங்கள்.

துவார பாலகர்
இப்போது தான் கடவுளை வணங்குவதற்கு நம்முடைய உடலைத் தயார்ப் படுத்திக் கொண்டிருக்கிறோம். அடுத்ததாக, கோவிலுக்குள் நுழைவதற்கு முன்பே, கோவில் கோபுரத்தையும் அவற்றில் உள்ள கலசங்களையும் பார்த்து முதலில் வணங்கிக் கொள்ள வேண்டும்.

அதன்பின்னர், வாயிலில் காவலுக்கான நின்று கொண்டிருக்கிற துவார பாலகர்களை வணங்கி, அவர்களிடம் உள்ளே செல்வதற்கு அனுமதி வாங்கிக் கொண்டு, உள்ளே செல்ல வேண்டும்.

நுழைவாயில்
அப்படி அனுமதி வாங்கிக் கொண்டு உள்ளே செல்லுகிற போது, இருக்கின்ற நுழைவாயில் படியைக் கடக்க வேண்டும். அந்த படியை தாண்டிச் செல்கின்ற பொழுது, நாள் கொண்டு வந்திருக்கும் பாவங்கள், எதிர்மறை எண்ணங்கள், மனதுக்குள் இருக்கும் கவலைகள், வினையான காரியங்கள், ஆகிய கெட்ட விஷயங்கள் எல்லாவற்றையும் இங்கேயே விட்டுவிட்டு, கோவிலுக்குள் வெறும் சாதாரண மனிதனாக, எந்த எண்ண ஓட்டங்களும் இல்லாமல் தெளிவான நீரோடை போல தான் வருகின்றேன் என்று மனதில் நினைத்துக் கொண்டே அந்த படியைத் தாண்டிச் செல்ல வேண்டும்.

நேர்மறை எண்ணங்கள்
அதேசமயம் அந்த படிக்கட்டுக்களின் மேல் ஏறி, மிதித்து உள்ளே செல்கிறீர்கள் என்றால், மனதுக்குள் இருக்கும் அத்தனை எதிர்மறை எண்ணங்களையும் மனதுக்குள் சுமந்து கொண்டே தான் கோவிலுக்குள் வருகிறேன் என்று அர்த்தம்.

இறைவன் குடியிருக்கும் கோவில் என்பது, நாள் முழுவதும் கூறப்படுகின்ற மந்திரங்களினாலும் நாதஸ்வரம், கெட்டி மேளங்கள் போன்ற மங்களகரமான இசையினாலும் முழுக்க முழுக்க நேர்மறை அதிர்வுகளால் நிரம்பியிருக்கும். அதனாலேயே அந்த நுழைவு வாயிலைத் தாண்டிச் செல்ல வேண்டும் என்பது தான் ஐதீகம்.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *