இந்தியர்களின் பாரம்பரியத்திற்கு பின்னால் இருக்கும் அறிவியல்!! – Tamil VBC

இந்தியர்களின் பாரம்பரியத்திற்கு பின்னால் இருக்கும் அறிவியல்!!

உலகின் தலைசிறந்த கலாச்சாரங்களில் ஒன்றாக நமது இந்திய கலாச்சாரம் இருக்கிறது. நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கு பின்னும் ஒரு காரணமும், அறிவியலும் இருக்கிறது. இப்போதிருக்கும் விஞ்ஞானி கண்டறிந்ததை நமது முன்னோர்கள் பல நூற்றாண்டுகளுக்கு கண்டறிந்தோடு மட்டுமில்லாமல் நமது அன்றாட பழக்கவழக்கங்களிலும் அவற்றை பின்பற்றும்படி செய்துள்ளனர்.

நாகரிகம் என்ற பெயரில் நம் முன்னோர்கள் நமக்கு கற்றுக்கொடுத்த பல ஆரோக்கிய செய்லகளை நாம் இப்போது தவிர்த்து வருகிறோம். அவர்கள் நமக்குபழக்கப்படுத்திய செயல்களுக்கு பின்னால் இருக்கும் அறிவியலையும் அவற்றை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தையும் இங்கே பார்க்கலாம்.

வணக்கம் சொல்லுதல்
இந்திய கலாச்சாரத்தின்படி, ஒருவரை சந்திக்கும்போது இருகைகூப்பி ” வணக்கம் ” அல்லது ” நமஸ்காரம் ” என்று கூறுவது பழக்கமாக இருந்து வருகிறது. பொதுவாக இது மரியாதையின் அடையாளமாக கருதப்படுகிறது. ஆனால் இதற்கு பின்னால் மிகப்பெரிய அறிவியல் ஒன்று உள்ளது. இரண்டு கைகளையும் ஒரே புள்ளியில் இணைப்பது நமது கண்கள் மற்றும் மூளையினை சுறுசுறுப்பாக்க அனுப்பப்படும் சிக்னலாகும். இவ்வாறு நம் மூளைக்கு அழுத்தம் கொடுத்துவிட்டு ஒருவருடன் பேசும்போது அவரை சீக்கிரம் மறக்கவும் மாட்டோம் அதேபோல பேசிய விஷயங்களும் நினைவில் இருக்கும்.

மெட்டி அணிவது
நமது கலாச்சாரத்தின்படி திருமணமான பெண்கள் மெட்டி அணிவது வழக்கம், மெட்டி அணிவது திருமணமான பெண் என்பதற்கான அடையாளம் மட்டுமல்ல. ஏன் இரண்டாவது விரலில் மெட்டி அணிவிக்கிறோம் என்றால் இரண்டாவது விரலில் இருந்து செல்லும் ஒரு நரம்பு கருப்பை வழியாக இதயத்தை இணைக்கிறது. எனவே இரண்டாவது விரலில் மெட்டி அணிவது கருப்பையை பலப்படுத்தும். இதன்மூலம் கருப்பைக்கு சீரான அளவில் இரத்தம் செல்வதோடு மாதவிடாய் சுழற்சியை சீராக்கும். வெள்ளி ஒரு சிறந்த ஆற்றல் கடத்தும் பொருள், எனவே காலில் மெட்டி நிலத்திலிருந்து கிடைக்கும் நேர்மறை ஆற்றலை உடலுக்கு கடத்தும்.

ஆற்றில் காசு போடுதல்
இதற்கு நாம் நினைத்து கொண்டிருக்கும் காரணம் ஆற்றில் காசு போட்டால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதுதான், ஆனால் உண்மை அதுவல்ல. பழங்காலத்தில் அனைத்து நாணயங்களும் செம்பு எனப்படும் தாமிரத்தால் செய்யப்பட்டவையாய் இருந்தது. தாமிரம் மனித உடலுக்கு பல நன்மைகளை வழங்கக்கூடிய ஒரு உலோகமாகும். எனவே ஆற்றில் நாணயத்தை போடுவது நம் உடலுக்கு தேவையான தாமிரத்தை தரக்கூடும். ஏனெனில் அந்த காலத்தில் ஆற்றுநீரே குடிநீராக பயனப்டுத்தப்பட்டு வந்தது. நம் முன்னோர்கள் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது.

கோவில் மணி
கோவிலுக்கு வருகை தருபவர்கள் முதலில் மணியை அடித்துவிட்டு கடவுளை வணங்குவது நமது வழக்கமாக உள்ளது. இதற்கு நாம் நினைக்கும் காரணம் மணியோசை தீயசக்திகளை விரட்டி நல்ல சக்திகளை நம் அருகில் கொண்டுவரும் என்பது. ஆனால் இதற்கு பின்னல் இருக்கும் அறிவியல் என்னவென்றால் மணியோசை நமது மனதை தூய்மைப்படுத்தி நமது எண்ணம் முழுவதையும் கடவுளை நோக்கி இருக்கும்படி செய்கிறது. ஏனெனில் கோவில் மணி அந்த விதத்தில்தான் செய்யப்பட்டிருக்கும், மணியோசை கேட்கும்போது அது நமது இடதுபக்க மூளையையும், வலதுபக்க மூளையையும் ஒன்றாக இணைத்து வைக்கிறது. கோவிலை மணியை அடித்தவுடன் அது ஏற்படுத்தும் எதிரொலி குறைந்தது 7 நொடிகள் இருக்கும். இந்த இடைவெளி நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களையும் விழித்துக்கொள்ள செய்யும்.

உணவில் ஏன் முதலில் காரத்தையும், இனிப்பை இறுதியிலும் சாப்பிட வேண்டும்?
நமது மூதாதையர்கள் சாப்பிடும்போது முதலில் காரமான உணவையும், இறுதியில் இனிப்பையும் சாப்பிட வேண்டுமென்று கூறியுள்ளனர். இதன் பின்னால் இருக்கும் காரணம் யாதெனில் கார உணவுகளை முதலில் சாப்பிடும்போது அது செரிமானத்தை ஏற்படுத்தும் அமிலங்களை தூண்டுவதோடு செரிமானத்தையும் சுறுசுறுப்பாக்குகிறது. இதனால் செரிமானம் விரைவாகவும் எந்த பிரச்சினையும் இன்றி நடைபெறும். அதேசமயம் இனிப்புகளில் உள்ள கார்போஹைடிரேட்டுகள் செரிமானத்தை அதிக சிக்கலாக்கும். எனவேதான் இனிப்பை இறுதியாக சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது.

சூரிய நமஸ்காரம்
பழங்கால இந்தியர்கள் காலை நேரத்தில் ஆற்றங்கரையில் சூரிய நமஸ்காரம் செய்வதை தினசரி வழக்கமாக கொண்டிருந்தனர். ஏனெனில் காலை நேரத்தில் சூரிய ஒளிக்கதிர்களை நீரில் பார்ப்பது பார்வைதிறனை அதிகரிக்க செய்யும். அதுமட்டுமின்றி காலை நேரத்தில் இதை செய்வது நம்மை நாள் முழுவதும் உற்சாகமாய் வைத்திருக்கும்.

அரசமரத்தை வணங்குதல்
நமக்கு பெரும்பாலும் அரசமரம் நிழலுக்கு தவிர வேறு எதற்கும் பயன்படுவதில்லை என்ற எண்ணம் உள்ளது. அரசமரத்தில் சுவையான பழங்கள் இல்லை, இதன் விறகு மிகவும் வலிமையானதும் அல்ல, இருப்பினும் நம் முன்னோர்கள் அனைத்து தெருக்களிலும் இதனை வளர்த்துவந்தாரக்ள் தெரியுமா? நம் முன்னோர்கள் அறிவார்கள் இரவு நேரத்திலும் ஆக்சிஜனை வெளியிடும் வெகுசில மரங்களில் அரசமரமும் ஒன்று. அதனால்தான் பெரும்பாலும் தெருவின் தொடக்கத்தில் அரசமரத்தை வளர்த்துவந்தனர். அதுமட்டுமின்றி அரசமர இலைகள் எண்ணற்ற மருத்துவ குணங்கள் வாய்ந்தது.

கோவிலுக்கு ஏன் செல்ல வேண்டும்?
கோவில்கள் பெரும்பாலும் பூமியின் வடக்கு மற்றும் தெற்கு துருவங்களின் நேர்மறை ஆற்றல் அதிகம் இருக்கும் இடங்களிலியே கட்டப்பட்டிருக்கும். கோவிலின் மூலவர் கர்பகிரஹத்தில் இருப்பார், மூலவரை வைத்தபின்தான் பெரும்பாலும் கோவிலையே கட்டத்தொடங்குவார்கள். இந்த கர்பகிரஹத்தில்தான் அதிக காந்த சக்தி இருக்கும். மூலவருக்கு அருகிலே செப்புத்தகட்டில் வேதமந்திரங்கள் எழுதி பதிக்கப்பட்டிருக்கும். இதன் காரணம் என்னவென்றால் செப்புத்தகடு பூமியின் காந்த அலைகளை கிரகித்து அதனை சுற்றுப்புறம் முழுவதும் பரவச்செய்யும். ஒருவர் கோவிலுக்குச் சென்று கர்பகிரஹத்தை கடிகாரம் சுழலும் திசையில் சுற்றினால் அவரின் உடல் அதிகளவு நேர்மறை சக்திகளை பெரும். நமது ஆரோக்கிய வாழ்விற்கு முக்கியமே இந்த நேர்மறை சக்திதான்.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *