இன்டர்நெட்டில் வைரலாகும் கரப்பான்பூச்சி சேலஞ்ச்… என்ன செய்றாங்கனு நீங்களே பாருங்க… – Tamil VBC

இன்டர்நெட்டில் வைரலாகும் கரப்பான்பூச்சி சேலஞ்ச்… என்ன செய்றாங்கனு நீங்களே பாருங்க…

இணைய உலகில் இது இதற்குத்தான் சேலஞ்ச் விடணும்னு எந்த எல்லையும் இல்லாமல் விட்டுக்கொண்டிருக்கிறார்கள். தங்கள் நெருங்கிய நட்பு வட்டத்தை திருப்திப்படுத்த பதின்ம வயதினர் இந்த சவால்களை கண்மூடித்தனமாக பின்பற்றுகின்றனர்.

ஐஸ் சேலஞ்ச், மூவிங் கார் சேலஞ்ச் என்று ஆபத்தான சவால்களும் இவர்கள் மத்தியில் பரபரப்பாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இளம் கன்று பயமறியாது என்பதை மெய்ப்பிப்பது போல சாதனை என்று நினைத்து இந்த சவால்களை இளம் தலைமுறையினர் கெத்துக்காக எதிர்கொள்கின்றனர். அவற்றின் மத்தியில் முகஞ்சுளிக்க வைக்கும் சில சவால்களும் முன் வைக்கப்படுகின்றன.

கரப்பான்பூச்சி சவால்
அலெக்ஸ் ஆங் (Alex Aung) என்ற ஃபேஸ்புக் பயனர், கரப்பான்பூச்சியை தன் முகத்தின்மீது வைத்து செல்ஃபி எடுத்து அதை தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்து, “புதிய சவால், உங்களால் இதை செய்ய முடியுமா?” (“New challenge, can you do this?”) என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அமெரிக்காவில் ஆரம்பம்
இந்த சவால் அமெரிக்காவில் தொடங்கியது. அங்கு கரப்பான்பூச்சி தீங்குவிளைவிக்கும் பூச்சியாக கருதப்படுகிறது. ஆகவே, இதற்கு வரவேற்பு இருக்காது என்று நம்பப்பட்டது. அலெக்ஸ் இதை பகிர்நது கொண்டபோது யாரும் இதை சட்டை செய்யமாட்டார்கள் என்றே கருதினார்கள். ஆனால், இது வைரலாக பரவி வருகிறது.

நான் பண்ணிட்டேன்… அப்போ நீங்க?
குறிப்பாக, மியான்மர், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளிலுள்ள பதின்ம வயது பயனர்கள் கரப்பான்பூச்சியை முகத்தின்மேல் வைத்து செல்ஃபி எடுத்து பதிவிட்டு, மற்றவர்களையும் இதை செய்யும்படி அழைப்பு விடுத்து வருகின்றனர்.

ரெடியா?
என்ன மக்களே ஊர்ல யார் எதாவது புதுசா செஞ்சாலும் அது நம்ம ஊர்ல தான் ரொம்ப பிரபலமாகிடுமே. நீங்களும் இந்த கரப்பான்பூச்சி சேலஞ்ச்சுக்கு ரெடி ஆகிட்டீங்களா? நீங்க எங்க கிளம்பிட்டீங்க? கரப்பான்பூச்சியை தேடிதானே!

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *