ஐஸ்கட்டிகளால் உங்களுக்கு ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் என்னென்ன தெரியுமா? – Tamil VBC

ஐஸ்கட்டிகளால் உங்களுக்கு ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் என்னென்ன தெரியுமா?

கோடைகாலம் தொடங்கிவிட்டது, அனைவரும் வெயிலில் இருந்து தப்பிக்க குளிர்ச்சியான பொருட்களை தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம். இயற்கையான குளிர்ச்சியான பொருட்களை காட்டிலும் செயற்கையாக ஜில்லென்று இருக்கும் ஐஸ்கட்டிகளையும், ஐஸ்க்ரீமையும்தான் அதிகநபர்கள் விரும்புகிறார்கள்.

சிலருக்கு ஐஸ்கட்டிகளை சாப்பிடும் பழக்கம் இருக்கும், மேலும் மது அருந்தும்போது அதில் ஐஸ்கட்டிகளை போட்டு குடிக்கும் பழக்கமும் பலருக்கும் இருக்கிறது. இந்த ஐஸ்கட்டிகள் உடலுக்கு ஆரோக்கியமானதா? இல்லையா? என்பது பல ஆண்டுகளாக நிலவிவரும் கேள்வியாகும். அதற்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஐஸ்கட்டிகளை சாப்பிடலாமா?
ஐஸ்கட்டிகளை பல்வேறு வடிவங்களில் நாம் சாப்பிட்டு கொண்டுதான் இருக்கிறோம். இது கொஞ்சம் கொஞ்சமாக உங்களுக்கு பழக்கமாக மாறிவிடும். நீங்கள் நினைக்கலாம் இது வெறும் தண்ணீர்தான் என்று. ஆனால் உங்களுக்கு சில கெட்ட செய்திகள் காத்திருக்கிறது. தொடர்ந்து ஐஸ்கட்டிகளை நீங்கள் எடுத்துக்கொள்ளும்போது அது பல ஆரோக்கிய பிரச்சினைகளை உண்டாக்கும்.

பகோபாகியா
ஐஸ்கட்டியை கண்டிப்பாக சாப்பிட்டே ஆகவேண்டும் என்ற மனநிலைக்கு தள்ளப்படுவதற்கு பெயர் பகோபாகியா என்பதாகும். உங்கள் உடலில் இருக்கும் குறைபாடுகளின் அடையாளமாகக்கூட இது தோன்றாலம். மேலும் இதனாலும் உங்களுக்கு பல ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படலாம். என்னென்ன பிரச்சினைகளால் இந்த பழக்கம் ஏற்படும் என்பதை மேற்கொண்டு பார்க்கலாம்.

உணவுகோளாறுகள்
இந்த பழக்கம் ஏற்பட பிகா என்னும் உணவு கோளாறு ஒரு காரணமாக இருக்கலாம். ஐஸ்கட்டி சாப்பிடும் பழக்கமான பகோபாகியா இதன் ஒருவகையாகும். பிகா என்பது எந்த கட்டுப்பாடும் இன்றி உணவுகளை சாப்பிட தூண்டும் நோயாகும், இதற்கு என்ன உணவு என்ற பாகுபாடெல்லம் கிடையாது. குறிப்பாக சத்தே இல்லாத உணவுகளை சாப்பிட இந்த குறைபாடு தூண்டும்.

சேதமடைந்த பற்கள்
சீரற்ற அளவில் பனிக்கட்டிகளை சாப்பிடுவது உங்கள் பற்கள் மீது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். இது பற்கூச்சம் மற்றும் சேதமடைந்த ஈறுகள் ஏற்பட காரணமாக அமையும். ஐஸ்கட்டிகளை வாயில் பூட்டு சாப்பிடும்போது அதன் கூரான முனைகள் உங்கள் ஈறுகளை பதம் பார்த்துவிடும். பொதுவாகவே பற்களின் ஆரோக்கியத்திற்கு குளிர்ச்சியான பொருட்கள் ஏற்றதல்ல.

இரும்புசத்து குறைபாடு
உங்கள் உடலில் இரும்புசத்து குறைவாக உள்ளது என்பதற்கான அறிகுறி உங்கள் நாக்கில் ஏற்படும் வீக்கம், தொண்டைக்கோளாறுகள் மற்றும் வழக்கத்திற்கு மாறான உணவுகள். இரும்புசத்து குறைபாட்டை சரி செய்வதற்காக வாய்வழியாக எடுத்துக்கொள்ளும் மருந்துகளை ஐஸ்கட்டிகள் சாப்பிடுவது பயனற்றதாக மாற்றுகிறது. இந்த இரண்டிற்கும் இடையேயான தொடர்பு நெருக்கமானதாகும். எனவே உங்களுக்கு ஐஸ்கட்டிகளை சேர்த்து கொள்ளும் பழக்கம் இருந்தால் நீங்கள் மருத்துவரை அணுகவேண்டியது அவசியம்.

உணர்ச்சி சிக்கல்கள்
உணவு சிக்கல்கள் ஏற்பட முக்கிய காரணம் அதிக உணர்ச்சிவசப்படுவதும், உணர்ச்சிகள் தொடர்பான பிரச்சினைகளாலும், மனஅழுத்தம் போன்றவற்றாலும்தான். உங்கள் மனஅழுத்தத்தை சமாளிக்கும் பழக்கமாக ஐஸ்கட்டி சாப்பிடுவது இருக்கலாம். உங்களின் ஐஸ்கட்டி சாப்பிடும் பழக்கம் அதிகரித்து கொண்டே சென்றால் நீங்கள் கண்டிப்பாக மருத்துவரை அணுகியே ஆகவேண்டும்.

சாப்பிடலாமா? கூடாதா?
எந்தவித சந்தேகமும் இன்றி ஐஸ்கட்டி சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. உங்கள் பற்களின் ஆரோக்கியத்தை சிதைப்பது, மனஅழுத்தத்தை குறைப்பதை தவிர இதனால் வேறு எந்த பயனும் இல்லை. கர்ப்பிணி பெண்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கு. ஆனால் ஐஸ்கட்டிகளுக்கு பதிலாக ஐஸ் சிப்ஸ்களை எடுத்துக்கொள்ளலாம். இதன்மூலம் காலை நேர சோம்பல், குமட்டல், அதிக சூடு, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகளை சரி செய்யலாம்.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *