ஐபிஎல் பைனல் போட்டி பக்காவாக பிக்சிங் செய்யப்பட்டது.. ஆதாரங்களை அடுக்கும் நெட்டிசன்கள்! – Tamil VBC

ஐபிஎல் பைனல் போட்டி பக்காவாக பிக்சிங் செய்யப்பட்டது.. ஆதாரங்களை அடுக்கும் நெட்டிசன்கள்!

ஹைதராபாத்: ஐபிஎல் 2019, இறுதி போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனிக்கு, ரன் அவுட் கொடுக்கப்பட்ட விவகாரத்தை வைத்து, நெட்டிசன்கள் கடுமையாக விளாசி வருகிறார்கள்.

ஐபிஎல் பைனல் போட்டி நேற்று, ஐதராபாத்தில் நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும், மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப் பரிட்சை நடத்தின.

டாஸ் வென்று முதலில் ஆடிய மும்பை அணி 149 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய சென்னை அணி ஒரு பக்கம் விக்கெட்டுகளை பறி கொடுத்தாலும், மறுமுனையில் வாட்சன் நங்கூரமிட்டு ஆடினார்.

தோனி விக்கெட்
நான்காவது விக்கெட்டுக்கு, வாட்சனுடன், அணித் தலைவர் தோனி ஜோடி சேர்ந்தார். ஆட்டம் எந்த திசையில் சென்றாலும், அதை தனது அணிக்காக, திருப்ப கூடிய திறமை பெற்றவர் தோனி என்பதால், அவர் களத்தில் நிற்கும் ஒவ்வொரு நிமிடமும் எதிரணிக்கு ஆபத்து என்பதை ரசிகர்கள் உணர்ந்து கரகோசம் எழுப்பியபடி இருந்தனர். மைதானமே தோனி.. தோனி என உணர்ச்சி பெருக்குடன் கோஷமிட்டுக் கொண்டிருந்தது. தோனியும், ஒரு பெரிய இன்னிங்ஸ் ஆடுவதற்கான முன்னெச்சரிக்கையோடு முதல் சில பந்துகளை சந்தித்தார். ஆனால், தோனி, 2 ரன்கள் எடுத்து இருந்தபோது ஓவர் த்ரோவை பயன்படுத்தி 2 ரன்கள் ஓட முற்பட்டார். அப்போது, லாங் ஆப் திசையில் பந்தை பிடித்த இளம் வீரர் இஷான் கிஷன், சரியாக குறி வைத்து, நேராக ஸ்டம்ப்பில் எறிந்தார்.

கிரிக்கெட் விதிமுறை
இதையடுத்து 3வது நடுவருக்கு அப்பீல் சென்றது. 3வது நடுவர் ரீப்ளே செய்து பார்த்தபோது, தோனி கிரீசில் பேட்டை வைத்த தருணமும், பந்து ஸ்டெம்பில் பட்ட தருணமும் ஒன்றாக இருந்தது. ஆனால், அகல ஆங்கிளில் பார்த்தபோது, கிரீசின் நுனி பகுதியை தோனி பேட் தொட்டபோது, ஸ்டெம்பில் பந்து பட்டது தெரியவந்தது. நீண்ட யோசனைக்கு பிறகு 3வது நடுவர், தோனிக்கு அவுட் கொடுத்தார். ஆனால், சந்தேகம் இருந்தால், அதன் பலன் பேட்ஸ்மேனுக்குத்தான் போக வேண்டும் என்பதே கிரிக்கெட் விதிமுறை. இதை மீறி, தோனிக்கு நடுவர் அவுட் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள் பாருங்கள்.

பணத்துக்காக காத்திருப்பு
3வது நடுவர் பணத்தை எதிர்பார்த்து காத்திருந்துவிட்டு, அது கிடைத்ததும், தோனிக்கு அவுட் கொடுத்துள்ளார். இது ஐபிஎல் அல்ல. பணம் மற்றும் திறமைக்கு நடுவேயான லீக் போட்டி. இறுதியில் பணம் வென்றது. எப்போதுமே, தோனி மற்றும் சென்னை ரசிகர்தான் நான். இவ்வாறு சொல்கிறார் இந்த நெட்டிசன்.

மேட்ச் பிக்சிங்
ஐபிஎல் பைனல் 110 சதவீதம் ஃபிக்ஸ் செய்யப்பட்டது. தோனி ரன்அவுட்டை பெரிதாக பேசுவோரை நினைத்து வருத்தப்படுகிறேன். ஷேன் வாட்சன் வேண்டுமென்றே ரன்அவுட்டானார். ஹர்பஜன்சிங் நன்கு பேட் செய்யக்கூடியவர். ஆனால் அவருக்கு பதிலாக கடைசி ஓவரில் தாக்கூர் பேட் செய்ய அனுப்பப்பட்டார். 5 மணி நேரம் வீணாகிவிட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கப்பை வாங்கிட்டீங்களே
தோனியுடையது ரன்அவுட்டே இல்லை. இதை டிவி வர்ணணையாளர்கள் கூட தெரிவித்தனர். மற்றொரு கோப்பையை வாங்கியதற்காக அம்பானி குடும்பத்திற்கு வாழ்த்துக்கள். சிஎஸ்கே சிறப்பாக விளையாடியது. முகேஷ் அம்பானி சிறப்பாக கொடுத்தார். இவ்வாறு சொல்கிறார் இந்த நெட்டிசன்.

சரிதாம்ப்பா
அதேநேரம், கேமரா கோணத்தை 3வது நடுவர் மாற்றி பார்த்தபோது, அவுட் என தெரியவந்தது என்று கூறும் நெட்டிசன்களும் உள்ளனர். அவர்கள் இந்த புகைப்படத்தை குறிப்பிட்டு, அது அவுட்தான் என சொல்கிறார்கள்.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *