உலகின் விசித்திரமான பெண்ணின் வலிமிக்க வாழ்க்கை! – Tamil VBC

உலகின் விசித்திரமான பெண்ணின் வலிமிக்க வாழ்க்கை!

எல்லாருடைய வாழ்க்கையும் ஒரே மாதிரி அமைவதில்லை. ஒருவருக்கு பண பிரச்சனை, ஒருவருக்கு உறவு பிரச்சனை, ஒருவருக்கு உடல்நல பிரச்சனை என பிரச்சனைகள் பல வடிவங்களில் வந்து வாழ்க்கையை சோதிக்கலாம். பிரச்னைகளை எதிர்கொள்ள மன வலிமை மற்றும் உடல் வலிமை மிகவும் அவசியம். ஆனால், உடல் வலிமையே பிரச்சனை என்றால்? என்ன செய்ய முடியும்.

உடல் சார்ந்த பிரச்சனைகளில் சில அரியவகை கோளாறுகளும் இருக்கின்றன. மருத்துவத்தில் பெரிதாக தொழில்நுட்ப வளர்ச்சிகள் எட்டப்படாத 19ம் நூற்றாண்டில் ஒரு விசித்திரமான பிரச்சனையில் பாதிக்கப்பட்ட எல்லா ஹார்பர் என்ற பெண்ணை குறித்து தான் நாம் இந்த கட்டுரையில் காணவிருக்கிறோம்…

எல்லா ஹார்பர்!
எல்லா ஹார்பர் (Ella Harper), வரலாற்றி வினோதமானவர்கள், விசித்திரமானவர்கள் என்று ஒரு பட்டியலை எடுத்து பார்த்தால் அதில், எல்லார் ஹாபரும் நிச்சயம் இடம் பிடித்திருப்பார். 19ம் நூற்றாண்டில் பிறந்த ஹார்பர் ஒரு வினோதமான எலும்பு பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆகையால், இவரை கேமல் கேர்ள், அதாவது ஒட்டக பெண் என்று பிரபலமாக அழைத்து வந்தனர்.

கேமல் கேர்ள்!
ஹார்பருக்கு பிறவியிலேயே “Genu recurvatum” எனப்படும் ஒரு மூட்டு சார்ந்த அரிய வகை கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த கோளாறு காரணமாக இவரது கால் மூட்டுகளில் ஒரு மாற்றம் காணப்பட்டது. அதாவது இவரது கால் மூட்டுகளானது பின்புறமாக திரும்பி அமைந்திருந்தது. இதனால், எல்லா ஹார்பரால் மற்றவர்களை போல இயல்பாக நிற்கவோ, இரண்டு கால்களில் நடக்கவோ இயலா நிலை உண்டானது. இந்த பிரச்சனையால் கை, கால்களை ஊன்றி விலங்குகளை போல நடக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார் ஹார்பர்.

சர்க்கஸ்!
இப்படியான அரியவகை பிரச்சனை மற்றும் அதன் விளைவால் தான் எல்லா ஹார்பரை கேமல் கேர்ள் என்று அழைக்க துவங்கினார்கள். 1870 ஜனவரி 5ம் நாள் பிறந்த ஹார்பர், 1886ம் ஆண்டு டபிள்யூ.எச் ஹாரிஸ் நிக்கல் ப்ளேட் சர்கஸில் இடம் பெற்றார். அப்போது இவரை குறித்த விளம்பரங்கள் நாளிதழ்களில் எல்லாம் வெளியாகின., அதில் இவரை பற்றிய குறிப்பும் இணைக்கப்பட்டிருந்தது.

செய்தி…
பத்திரிகையில் ஹார்பர் பற்றி குறிப்பிடப்பட்டிருந்த செய்தியானது..,

“I am called the camel girl because my knees turn backward. I can walk best on my hands and feet as you see me in the picture. I have traveled considerably in the show business for the past four years and now, this is 1886 and I intend to quit the show business and go to school and fit myself for another occupation.”

ஹார்பர் வாரம் இருநூறு டாலர்கள் சம்பளமாக பெற்று வந்தார், இது இவரது வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

குழந்தை!
தன் இளம் வயதில் ஹார்பர் சம்னர் கவுண்டி, டென்னிசி பகுதியில் வசித்து வந்தார். 1900 சென்சஸ் விபரங்கள் படி இவர் அப்போது அங்கே தனது அன்னையுடன் வசித்து வந்ததாக அறியப்படுகிறது. பிறகு 1905ம் ஆண்டு ஜூன் 26ம் நாள் இவரும் ராபர்ட் எல் சேவ்லி என்பவரும் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு 1906ம் ஆண்டு மேபில் ஈ சேவ்லி என்ற பெண் குழந்தை பிறந்தது. ஆனால், அந்தாண்டு நவம்பர் மாதமே அந்த குழந்தை உடல்நல கோளாறால் மரணம் அடைந்துவிட்டது.

இடம் பெயர்ந்தனர்!
குழந்தையின் மரணத்திற்கு பிறகு ராபர்ட் மற்றும் ஹார்பர் இருவரும் நாச்வில்லி என்ற பகுதிக்கு தனது தாயுடன் இடம் பெயர்ந்து போனதாக சென்சஸ் விபரங்கள் மூலம் அறியப்படுகிறது. 1918ம் ஆண்டு ஜூவல் சேவ்லி என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க துவங்கியது இந்த ஜோடி. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்த குழந்தையும் மூன்றே மாதத்தில் இறந்துவிட்டது. 1920ம் ஆண்டு வரை இவர் தனது கணவருடன் வாழ்ந்து வந்திருக்கிறார் என்ற விபரம் சென்சஸ் மூலம் அறியப்படுகிறது.

மரணம்!
எல்லா ஹார்பர் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 1921ம் ஆண்டு டிசம்பர் மாதம் மரணம் அடைந்தார். இவரது உடலை ஸ்ப்ரிங் ஹில் இடுகாட்டில் புதைத்தனர். இவரை பற்றிய தெளிவான தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. ஒரு பிளாக் எழுத்தாளர் தான் இவரை பற்றிய தகவல்களை சேகரித்து எழுதியிருக்கிறார்.

அவரும் சென்சஸ் விபரங்கள் மற்றும் பிற விபரங்களுக்கும் ஒப்பிட்டு சேகரித்த தகவல்கள் மூலம் தான் இந்த விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். ஆகவே, முதல் குழந்தை இறந்த பிறகு எல்லா ஹார்பரின் கடைசிகட்ட வாழ்க்கை இப்படியாக நகர்ந்திருக்கலாம் என்று யூகிக்கப்பட்டு எழுத்தப்பட்டிருக்கிறதே தவிர, இது தான் இவரது வரலாறு என்று முழுமையான தகவல்கள் எதுவும் இல்லை.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *