எதிர்பார்த்த அளவிற்கு என் வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை…!! இலங்கையில் ஓவியா வருத்தம் ….. – Tamil VBC

எதிர்பார்த்த அளவிற்கு என் வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை…!! இலங்கையில் ஓவியா வருத்தம் …..

வாழ்க்கை முறையில் பெரிதாக எந்த மாற்றமும் வரவில்லை என்று நடிகை ஓவியா தெரிவித்துள்ளார்.

சினிமாவில் கிடைக்காத புகழ், நடிகை ஓவியாவுக்கு பிக்பாஸ் மூலமாக கிடைத்து விட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் அடுத்தடுத்து சினிமா நடிப்பார் என்று அனைவரும் ஓவியாவை எதிர்பார்த்தனர். ஆனால், தற்போது அவர் எதிர்பார்த்த அளவுக்கு அவரது திரைப்படங்கள் வரவில்லை.

இந்நிலையில் அண்மையில் இலங்கையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஓவியா கலந்து கொண்டார். அப்போது ரசிகர்கள் மத்தியில் பேசிய அவர் ‘நான் பேசும் போது கொஞ்சம் இலக்கண பிழையோடு தான் பேசுகிறேன். அதை திருத்திக் கொண்டு வருகிறேன். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் எனக்கு மக்களின் அன்பு கிடைத்துள்ளது.

ஆனால்இ நான் அந்த அளவுக்குப் பெரிதாக எதுவும் செய்து விடவில்லை. மக்கள் கொடுத்துள்ள இந்த அன்பை பெறுவதற்கு எனக்கு தகுதி இருக்கா என்பது தெரியவில்லை. இருந்தாலும் நான் ஆசிர்வதிக்கப்பட்டவள் என்றே நினைக்கிறேன்.

வாழ்க்கையைப் பொறுத்த வரையில் பெரிதாக எந்த மாற்றமும் வரவில்லை. முன்பை விட இப்போது மக்களின் அன்பு கிடைத்துள்ளது. முன்பெல்லாம் நான் சாதாரணமாக சென்றால் யாருக்கும் தெரியாது. ஆனால், இப்போது அப்படி அல்ல.

நான் எங்கு சென்றாலும் என்னை அடையாளம் கண்டு கொள்கிறார்கள். அதற்கு மக்களிடத்தில் தான் நன்றி சொல்ல வேண்டுமெனவும் ஓவியா தெரிவித்துள்ளார் .

ads

Recommended For You

About the Author: Admin

Leave a Reply

Your email address will not be published.