விழுந்து….விழுந்து அடித்த கென்யாவின் உலக சாதனையை செல்லாது என்ற நாட்டாமை ஐசிசி….!! – Tamil VBC

விழுந்து….விழுந்து அடித்த கென்யாவின் உலக சாதனையை செல்லாது என்ற நாட்டாமை ஐசிசி….!!

ஐசிசி.இயின் புதிய விதியால், கென்யா அணி டி-20 கிரிக்கெட்டில் படைத்த உலக சாதனை அங்கரீக்கப்படாமல் போனது.

வரும் 2020ல் ஆஸ்திரேலியாவில் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகளில் ஐசிசி.இயின் உறுப்பினர் அணிகள் பங்கேற்கிறது. இந்நிலையில் சமீபத்தில் ஐசிசி ஒரு புதிய விதியை அறிவித்தது.

இன்னும் 5 மாதம் தான்…..

அதன்படி ஐசிசி.இயின் உறுப்பினர் நாடுகளின் எண்ணிக்கையை 18ல் இருந்து 104-ஆக அதிகரித்தது. தவிர, இந்த உறுப்பினர் நாடுகளுக்கு இடையே நடத்தப்படும் டி-20 போட்டிகள், சர்வதேச போட்டிகளாகக் வரும் ஜனவரி 2019 முதல் கருதப்படும் என அறிவித்தது.

இந்நிலையில், ஆபிரிக்கா நாடுகளுக்கு இடையேயான ‘பி’ பிரிவு டி-20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் ருவாண்டா, கென்யா அணிகள் மோதின.

புது உலக சாதனை…..

இதில் முதலில் பேட்டிங் செய்த கென்யா அணி, 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 270 ஓட்டங்’களைக் குவித்து புது உலக சாதனை படைத்தது. இந்த இமாலய இலக்கை துரத்திய ரவாண்டா அணி, 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு, 147 ஓட்டங்களை எடுத்து 123 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

செல்லாது…செல்லாது…..

கென்யா அணியின் இந்த உலக சாதனையை தற்போது ஐசிசி. அங்கீகரிக்க முடியாது. இதனால், கென்யா அணி வீரர்கள் சோகத்தில் உள்ளனர்.முன்னதாக கடந்த 2013ல் ஐபிஎல். தொடரில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக பெங்களூரு அணி 5 விக்கெட்டுக்கு 263 ரன்கள் குவித்ததே இதுவரை

சர்வதேச மற்றும் உள்ளூர் டி-20 அரங்கில் ஒரு அணி அடித்த அதிகபட்ச ரன்களாகும்.
இந்த சாதனையை 2016ல் இலங்கை அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி சர்வதேச அளவில் சமன் (263-3) செய்தமை குறிப்படத்தக்கது.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *