சில விஷயங்களை நான் உடைத்துள்ளேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அதே போலத்தான் நான் நானாக இருக்க விரும்புகிறேன்.
நீச்சல் உடையில் பீச்சில் இருந்த போட்டோவை வெளியிட்டதற்கு நடிகை சமந்தா காரணம் தெரிவித்துள்ளார்.
நடிகை சமந்தா சில மாதங்களுக்கு முன் நீச்சல் உடையில் பீச்சில் ரிலாக்ஸாக செக்ஸியாக படுத்திருந்த போட்டோவை பதிவிட்டார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவரை ஒரு அளவுடன் இருக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் சமீபத்தில் சமந்தா கலந்து கொண்ட நிகழ்ச்சியில் இந்த போட்டோவை வெளியிட்ட காரணத்தை தெரிவித்துள்ளார்.
காரணம் உள்ளது:
இந்த போட்டோவை தான் வெளியிட்டதற்கு காரணம் உள்ளது என சமந்தா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து நடிகை சமந்தா கூறுகையில், ‘நான் ஒரு காரணத்துடன் தான் அந்த பீச் போட்டோவை வெளியிட்டேன். ஏனென்றால், ஒரு பெண் இந்த விதிமுறைகளைத்தான் பின் பின்பற்ற வேண்டும் என்பதை உங்கள் மனது தீர்மானிக்க கூடாது.